Advertisment

ரேஷ்மா, ஷபானா தலை தீபாவளி கிளிக்ஸ்..

ரேஷ்மாவும், செம்பருத்தி பார்வதியும் ஆன ஷபானா தலை தீபாவளி கொண்டாடிய புகைப்படங்களை தங்கள் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளனர்.

author-image
abhisudha
New Update
Reshma muralidharan

Reshma Muralidharan and Shabana

ஜீ தமிழ் டிவியின்’ டான்ஸ் ஜோடி டான்ஸ் நடன நிகழ்ச்சியின் மூலம் ரேஷ்மா சின்னத்திரையில் அறிமுகமானார்.

Advertisment

அதைத் தொடர்ந்து’ பூவே பூச்சூட வா சீரியலில் சக்தி எனும் கேரெக்டர் மூலம் சீரியல் உலகில் என்ட்ரி ஆனார் ரேஷ்மா. அதில் அவரின் அக்கா மீனாட்சியின் கணவராக நடித்தவர் தான் மதன். சீரியலில் நடிக்கும்போது இவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்தது.

ரேஷ்மாவுக்கும், மதனுக்கும் கடந்த ஆண்டு நவம்பரில் திருமணம் முடிந்தது. தொடர்ந்து அபி டெய்லர் சீரியலில் இருவரும் நாயகன், நாயகியாக நடித்து வருகின்றனர். ரேஷ்மாவின் அம்மாவும் டெய்லர் என்பதால் அபி டெய்லர் சீரியல் அவர் மனதிற்கு மிகவும் நெருக்கமானது.

இந்நிலையில் ரேஷ்மா தன் கணவன் மதனுடன் சேர்ந்து தீபாவளி கொண்டாடிய புகைப்படங்களை இன்ஸடாகிராமில் பகிர்ந்துள்ளார்.

அதேபோல, ரேஷ்மாவின் உயிர்த்தோழியும், செம்பருத்தி பார்வதியுமான ஷபானா’ தன் கணவன் ஆர்யனுடன் சேர்ந்து தலை தீபாவளி கொண்டாடிய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதில்’ யாரு சொன்னாங்க நாங்க தனியாதான் தீபாவளி கொண்டாடுறோம்னு. எப்போதும் எங்களுடன் இருப்பதற்காக இவருக்கு நன்றி. நன்றி பா. இது எங்களோட சிறந்த தீபாவளி என்று நடிகர் எம்.எஸ். பாஸ்கருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment