Advertisment

குக்கரில் சுவையான அரிசி கஞ்சி: சிம்பிள் செய்முறை

Rice Kanji Cooking Video: இப்படி பதமாக பக்குவமாக சுவையாக அரிசி கஞ்சி செய்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rice Kanji, Rice Kanji cooking, rice kanji benefits, rice kanji cooking video, அரிசி கஞ்சி, அரிசி கஞ்சி செய்வது எப்படி, குக்கரில் அரிசி கஞ்சி செய்வது எப்படி, tasty Rice Kanji Cooking, rice kanji, Tamil Recipe News, tamil rice kanji video, tamil recipe

Tamil Recipe News, Rice Kanji Tamil Video: மிகவும் எளிமையான உணவு என்றால் அது அரிசி கஞ்சிதான். அதே நேரத்தில் நன்றாக ஜீரணமாகக்கூடிய சத்தான உணவாகவும் இருக்கிறது. அதனால்தான், அரிசி கஞ்சி உடல்நிலை சரி இல்லாதவர்களுக்கு காய்ச்சல், வயிறு உபாதைகள் இருப்பவர்களுக்கு அளிக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. அரிசி கஞ்சியை பலரும் பதமாக பக்குவமாக செய்யாததால் மிகவும் குழைந்து போய் சரி இல்லாமல் போகும். அதனால்தான், அரிசி கஞ்சி தரும்போது சிலர் குடிக்க முடியாமல் போகிறது.

Advertisment

அரிசி கஞ்சி என்றால் ஏதோ, உடல் நிலை சரி இல்லாதவர்கள் சாப்பிடுகிற ஆகாரம் என்று நினைக்க வேண்டாம். அரிசி கஞ்சி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம். அப்படியான உணவை அனைவரும் விரும்பும்படியாக செய்து தரவேண்டும்.

சுவையான மணமணக்கும் அரிசி கஞ்சியை குக்கரிலேயே அருமையாக செய்யலாம். அமிர்தமான அரிசி கஞ்சியை அனைவரும் விரும்பி சாப்பிடும்படி குக்கரில் எப்படி செய்வது என்று தெரிந்துகொள்ளுங்கள்.

அரிசி கஞ்சி செய்முறை:

  1. முக்கால் டம்ளர் அளவுக்கு சீரக சம்பா அரிசி எடுத்துக் கொள்ளுங்கள். சாதாரண பச்சரிசி எடுத்துக் கொண்டால், அதை மிக்சியில் போட்டு லேசாக சிறு துண்டுகளாக உடைத்துக்கொள்ளுங்கள்.

  2. இதனுடன் ஒரு ஸ்பூன் அளவுக்கு பாசிப் பருப்பு சேருங்கள். அரிசி, பாசிப் பருப்பு கலவையை ஒரு வாணலியில் போட்டு மணம் வரும் வகையில் வறுத்துக்கொள்ளுங்கள். மிக அதிகமாக வறுத்துவிட வேண்டாம்.

பிறகு அரிசி – பாசிப் பருப்பு கலவையை எடுத்து, சூடு தணிய வைத்துக்கொள்ளுங்கள். தொடர்ந்து இரண்டு அல்லது 3 முறை தண்ணீரில் கழுவி சுத்தம் செய்து எடுத்துக்கொள்ளுங்கள்.

சுத்தம் செய்யப்பட்ட அரிசி- பருப்பு கலவையை ஒரு குக்கரில் போட்டு அதனுடன் தேவையான அளவு தேங்காய் துருவல், நான்கைந்து பல் பூண்டு ஆகியவற்றை சேருங்கள். அதனுடன் அரை டீ ஸ்பூன் அளவு சீரகம், சிறிது வெந்தயம், தேவையான அளவு உப்பு சேர்த்துக்கொள்ளுங்கள். அவற்றுடன் 3 கிளாஸ் அளவு தண்ணீர் சேர்த்துக்கொள்ளுங்கள்.

இதையடுத்து குக்கரை மூடி ஸ்டவ்வில் வைத்து 7 விசில் வரும் வரை வேக வையுங்கள். விசில் வழியாக கஞ்சி மணமணக்கும் வாசனை வரும். அரிசி கஞ்சி இப்போது நன்றாக வெந்திருக்கும். இதனுடன் நமக்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, மீண்டும் ஒரு கொதி விட்டு இறக்கி வையுங்கள். உங்களுக்கு தேவை என்றால், இறுதியாக அதனுடன் மிளகு தூள் ஒரு ஸ்பூன் சேர்த்துக்கொள்ளுங்கள். இந்த மிளகு தூள் கஞ்சியின் மணத்தை மேலும் அதிகரிக்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது.

அரிசி கஞ்சி செய்வது இவ்வளவுதான். இப்படி பதமாக பக்குவமாக சுவையாக அரிசி கஞ்சி செய்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Food Recipes Rice Cooking Tamil Food Recipe
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment