Advertisment

புதினா ரைஸ் புலாவ்.. கொஞ்சம் வித்யாசமா செஞ்சி பாருங்க!

இது மிகவும் ஈஸி மட்டுமின்றி, சுவையாகவும் இருக்கும். மேலும் பேச்சுலர்கள் கூட இதனை முயற்சிக்கலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
rice recipes in tamil pudina rice recipe

rice recipes in tamil pudina rice recipe

rice recipes in tamil pudina rice recipe : வயிற்று கோளாறுகளுக்கு அடிக்கடி புதினா, கொத்தமல்லியை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இன்று புதினா-கொத்தமல்லி சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

Advertisment

காலையில் வேலைக்கு அவரசமாக கிளம்பும் போது, மதியம் சாப்பிடுவதற்கு ஏற்றவாறு அருமையான ரெசிபியை செய்ய வேண்டுமானால், புதினா புலாவ் செய்யுங்கள். இது மிகவும் ஈஸி மட்டுமின்றி, சுவையாகவும் இருக்கும். மேலும் பேச்சுலர்கள் கூட இதனை முயற்சிக்கலாம்.

புதினா - ஒரு கட்டு

கொத்தமல்லி - ஒரு கைப்பிடி

புளி - நெல்லிக்காய் அளவு

மிளகாய்வற்றல் - 3

பூண்டு - 2 பல்லு

இஞ்சி - 1 துண்டு

உளுந்தம்பருப்பு - 1 தேக்கரண்டி

தேங்காய் - 4 தேக்கரண்டி

சீரகம் - 1 தேக்கரண்டி

பெருங்காயம், உப்பு - தேவையான அளவு

செய்முறை :

* புதினா, கொத்தமல்லி இலைகளை நன்றாக மண் போக அலசி வைக்கவும்.

* வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* அடுப்பை மிதமான தீயில் வைத்து வாணலியில் எண்ணெய் விட்டு வெள்ளை உளுந்தம்பருப்பைச் சிவக்க வறுக்கவும்

* வறுத்த பருப்புடன் மிளகாய் வற்றல், பெருங்காயம், புளி, உப்பு, இஞ்சி, பூண்டு போட்டு வதக்கி அலசி வைத்துள்ள கொத்தமல்லி, புதினாவையும் சேர்த்து ஒரு சுற்று கிளறி விட்டு ஆற விடவும்.

* மிக்சியில் ஆறவைத்தவற்றை போட்டு அதனுடன் தேங்காய், சீரகம் சேர்த்து நன்றாக அரைத்தெடுக்கவும்.

* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்கக் கொடுத்தவற்றை தாளித்த பின் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தைப் போட்டு சிவக்க வதக்கவும்

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் அரைத்த கலவையை போட்டு 5 முதல் 10 நிமிடங்கள் வரை நீர் வற்றும் வரை வதக்கி இறக்கவும்.

* அடுத்து அதில் உடைத்த நிலக்கடலை அல்லது முந்திரிப்பருப்பையும் எண்ணெயில் வறுத்துக் கலக்கவும்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment