Rice water cucumber ice cubes recipe for summer skin care
ஒரு சூடான, வெயில் நாளில் ஒளிரும் முகப்பரு இல்லாத சருமத்திற்கு எளிதான தீர்வு உங்களுக்கு வேண்டுமா? ஐஸ் க்யூப்ஸ்’ உள்ளே இருந்து மட்டுமல்ல, வெளியிலிருந்தும் நம்மை புத்துணர்ச்சியுடன் உணர வைக்கும். இந்த புத்துணர்ச்சியூட்டும் அழகு ஹேக்குகளை உருவாக்க ஒரு சிறிய ஐஸ் ட்ரே போதும்.
Advertisment
இனி, விலையுயர்ந்த தோல் பராமரிப்புப் பொருட்கள் அனைத்தையும், இந்த செலவு குறைந்த நீங்களே வீட்டில் செய்யக்கூடிய ஐஸ் கியூப் ரெசிபிகளால் மாற்றலாம்.
உங்கள் முகத்தில் ஐஸ் கியூப்ஸ் செய்யும் அதிசயங்கள்
- வெயிலுக்கு சிகிச்சையளிக்கிறது.
Advertisment
Advertisement
- உங்கள் சருமத்தை இறுக்கமாக்குகிறது.
- வீங்கிய கண்களுக்கு சிகிச்சையளிக்கிறது.
- இது தோல் துளைகளை குறைக்கிறது.
- இது முகத்தில் எண்ணெய் உற்பத்தியைக் குறைக்கிறது.
- சிவத்தல் வாய்ப்புகளை குறைக்கிறது.
- முகப்பரு மற்றும் கரும்புள்ளிகளுக்கு சிகிச்சையளிக்கிறது.
- இது கருவளையங்களையும் நீக்குகிறது
ஐஸ் கியூப்ஸ் ரெசிபிஸ்
அரிசி தண்ணீர்
- ஜப்பானிய தோல் பராமரிப்பு பொருட்களில் அரிசி தண்ணீர் ஒரு முக்கிய மூலப்பொருள். இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், மாவுச்சத்து மற்றும் புரதம் உள்ளது, இது சருமத்தை குணப்படுத்தவும், பளபளப்பாகவும் உதவுகிறது.
- நீங்கள் மதிய உணவிற்கு சாதம் சமைக்கும் போது இந்த ஐஸ் கட்டிகளை உருவாக்கலாம். அசுத்தங்களை அகற்ற அரிசியை நன்கு கழுவவும், பின்னர் ஒரு பாத்திரத்தில் அரிசியைப் போட்டு, இரண்டு மடங்கு தண்ணீரை சேர்த்து 2-3 மணி நேரம் மூடி வைக்கவும்.
பிறகு அரிசி தண்ணீரை, ஐஸ் ட்ரேயில் ஊற்றி உறைய வைக்கவும், அது உருகும் வரை உங்கள் முகம் முழுவதும் ஐஸ் தடவவும். உங்கள் முகத்தை துடைக்க வேண்டாம், காற்றில் உலரட்டும், இதன் விளைவுகள் நீண்ட காலம் நீடிக்கும்.
வெள்ளரி
வெள்ளரி இயற்கையாகவே உங்கள் சருமத்திற்கு இதமானவை. இதில் வைட்டமின் சி மற்றும் காஃபிக் அமிலம் உள்ளது, இது வீக்கமடைந்த சருமத்தை குறைக்கிறது மற்றும் சருமத்தை முழுவதுமாக ஹைட்ரேட் செய்கிறது.
ஒரு வெள்ளரிக்காயை ப்யூரி செய்து, பின்னர் சில துளிகள் எலுமிச்சை சாறு மற்றும் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து, கலவையை ஐஸ் ட்ரேயில் ஊற்றி உறைய வைக்கவும்.
- உங்கள் முகம் மற்றும் கழுத்து முழுவதும் ஐஸ் கட்டியை மெதுவாக தேய்க்கவும், பின்னர் 15 நிமிடங்களுக்குப் பிறகு வெதுவெதுப்பான நீரில் சாற்றை துடைக்கவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“