”பெண்களே! மார்பக புற்றுநோய் என்றால் மார்பகங்களை அகற்ற வேண்டாம்”: மாற்று சிகிச்சையில் நலம்பெற்ற நம்பிக்கை பெண்

மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வும், அதுகுறித்த முன்னெச்சரிக்கைகளையும் பெண்கள் அறிந்திருக்க வேண்டியது அவசியமாகிறது.

மார்பக புற்றுநோய் தற்போது இளம்பெண்களை வெகுவாக தாக்கி வருகிறது. மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வும், அதுகுறித்த முன்னெச்சரிக்கைகளையும் பெண்கள் அறிந்திருக்க வேண்டியது அவசியமாகிறது.

மார்பக புற்றுநோய் வராமல் தடுப்பது ஒருபுறமிருந்தாலும், அந்நோயால் பாதிக்கப்பட்ட பல பெண்கள், தங்களுடைய மார்பகங்களை முற்றிலுமாக அகற்றுவதுதான் இந்நோய்க்கான சிகிச்சை என தவறாக நினைக்கின்றனர். ஆனால், மார்பகங்களை முற்றிலுமாக அகற்றாமல், கீமோதெரபி மூலம் புற்றுநோய் பாதிக்கப்பட்ட மார்பகங்களை பாதுகாக்க முடியும்.

அப்படி, மார்பகங்களை முற்றிலும் அகற்றாமல் வெற்றிகரமாக இந்த சிகிச்சையை மேற்கொண்டு, தன்னம்பிக்கையுடன் மீண்டெழுந்த பெண் தான் நிகிஷா ஓஸ்வால்.

23 வயதில் நிகிஷாவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்திருந்தது. ஃபேஷன் டிசைனிங் துறையில் முன்னேறுவதற்கான படிகளை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தார். அப்போதுதான் அவருக்கு மார்பக புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. மருத்துவர்கள் அவருடைய மார்பகங்களை முற்றிலுமாக அகற்ற வேண்டும் என அறிவுறுத்தினர்.

“நான் மிகவும் குழப்பமாக இருந்தேன். எனக்கு புற்றுநோய் குறித்து அவ்வளவாக தெரியாது. ஆனால், மார்பகங்களை அகற்ற வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியது என்னை கடுமையாக தாக்கியது”, என்கிறார், நிகிஷா.

”என்னுடைய வலது மார்பகத்தில் ஒரு சிறிய கட்டி ஏற்பட்டது. அதுதான் புற்றுநோயாக உருவெடுத்தது. அதனால், நான் திருமணம் செய்துகொள்ளப்போகும் நபர் என்னைவிட்டு பிரிந்துவிட்டார். எல்லாமே முடிவுக்கு வந்துவிட்டதை போல் உணர்ந்தேன்”, என நிகிஷா கூருகிறார்.

அதன்பிறகு, புகழ்பெற்ற புற்றுநோய் மருத்துவரின் அறிவுறுத்தலுடன், மார்பகங்களை முற்றிலும் அகற்றாமல் கீமோதெரபி சிகிச்சையை மேற்கொண்டார். அதன்பிறகு மார்பக புற்றுநோயிலிருந்து படிப்படியாக நிகிஷா மீண்டார். இப்போது குழந்தைகளுக்கு நடனம் கற்றுக்கொடுக்கும் ஆசிரியராக இருக்கிறார்.

நிகிஷாவைப் போல் பெயர் சொல்ல விரும்பாத 30 வயது பெண் ஒருவரும் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சமயத்தில், மார்பகங்களை அகற்ற வேண்டும் என மருத்துவர்கள் கூறியதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தார். அவரும் கீமோதெரபியின் மூலம், மார்பகங்களை அகற்றாமல் புற்றுநோயிலிருந்து மீண்டார்.

“மார்பகங்களை அகற்றிவிடுவதுதான் மார்பக புற்றுநோயிலிருந்து மீள்வதற்கான வழி என பெரும்பாலானோர் தவறாக நினைக்கின்றனர். அவ்வாறு செய்தால் பெண்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டு அவர்கள் நம்பிக்கையை இழந்துவிடுவர்.” என, புற்றுநோய் மருத்துவர் கோபிக்கா என்பவர் கூறுகிறார்.

இதையும் படியுங்கள்: நைட் ஷிஃப்டில் பணிபுரியும் பெண்களா நீங்கள்? மார்பக புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம்

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Lifestyle news in Tamil.

×Close
×Close