Advertisment

ரூட் கேனல் சிகிச்சையால் வீங்கிய கன்னட நடிகை முகம்: என்ன காரணம்? மருத்துவர் விளக்கம்!

ரூட் கேனல் என்பது ஒரு பல் சிகிச்சையாகும், இது பாதிக்கப்பட்ட பல்லின் மென்மையான மையம் மற்றும் கூழ் அகற்றப்படுவதை உள்ளடக்கியது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Root canal treatment

Root canal treatment Know all about the dental procedure

ரூட் கேனல் சிகிச்சையால், கன்னட நடிகை ஸ்வாதி சதீஷ் முகத்தின் ஒரு பக்கம் முழுமையாக வீங்கிவிட்டது. சில மணிநேரங்களில் வீக்கம் குறையும் என்று ஸ்வாதியிடம், மருத்துவர்கள் கூறியபோதும், 20 நாட்களுக்குப் பிறகும் அவரது முகத்தின் இடது பக்கம் வீங்கிய நிலையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisment

ஸ்வாதிக்கு மயக்க மருந்துக்கு (local anaesthetic) பதிலாக சாலிசிலிக் அமிலம் கொடுக்கப்பட்டதாக உள்ளூர் செய்தி ஊடக அறிக்கைகள் கூறுகின்றன. இப்போது அவர் சட்டப்பூர்வ உதவியை பரிசீலித்து வருவதாக தெரிகிறது.

ரூட் கேனல் சிகிச்சை குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது இங்கே!

"ரூட் கேனல் (Root canal treatment) என்பது ஒரு பல் சிகிச்சையாகும், இது பாதிக்கப்பட்ட பல்லின் மென்மையான மையம் மற்றும் கூழ் அகற்றப்படுவதை உள்ளடக்கியது– இது நரம்புகள், இணைப்பு திசு மற்றும் இரத்த நாளங்களால் ஆனது" என்று மும்பை மசினா மருத்துவமனையின் எண்டோடான்டிஸ்ட் ஆலோசகர் நிகிதா மெஹ்ரா கூறினார்.

சிகிச்சையின் போது என்ன நடக்கும்?

பற்களுக்கு அடியில் உள்ள முழு கூழ் அகற்றப்பட்டு, சம்பந்தப்பட்ட பல்லின் வேர்கள் சுத்தம் செய்யப்பட்டு, நன்கு கிருமி நீக்கம் செய்யப்பட்டு, ரூட் கேனல் ஃபில்லிங் பொருட்களால் (root canal filling material) நிரப்பப்படுகின்றன.

"இந்த செயல்முறை பொதுவாக ஒரு பொது பல் மருத்துவர் அல்லது ஒரு சிறப்பு எண்டோடோன்டிஸ்ட் மூலம், மயக்க மருந்துகளின் கீழ் செய்யப்படுகிறது, மேலும் இது மிகவும் பாதுகாப்பானது" என்று மெஹ்ரா கூறினார்.

ஆபத்து காரணிகள்

சிகிச்சையின் போது, சிறிய வீக்கம், வலி ​​அல்லது அசௌகரியம் ஆகியவை ஏற்படும், இது பொதுவாக செயல்முறையை வெற்றிகரமாக முடித்தவுடன் குறைகிறது. ஆனால், சில "அரிதான மயக்க மருந்து’ பரேஸ்தீசியாவை உள்ளடக்கியது, இது அடிப்படையில் நீண்ட காலமாக உணர்வின்மை அல்லது பகுதியில் உணர்திறன் இழப்பு ஆகியவற்றை ஏற்படுத்தும். ஆனால், இதுவும் சில நாட்களில் சரியாகும்.

கடுமையான சிக்கல்கள் எப்போது ஏற்படலாம்?

"நோயாளிக்கு கேனலை சுத்தம் செய்யப் பயன்படுத்தப்படும் சோடியம் ஹைபோகுளோரைட் அல்லது தற்போதைய சூழ்நிலையில் சாலிசிலிக் அமிலம் போன்ற மயக்க மருந்துகளைத் தவிர வேறு சொல்யூஷன்ஸ் தற்செயலாக செலுத்தப்படும்போது கடுமையான சிக்கல்கள் ஏற்படுகின்றன" என்று மருத்துவர் கூறினார்.

தடுப்பு

கடுமையான சிக்கல்களைத் தடுக்க, வெற்றிகரமான ரூட் கேனல் நடைமுறைகளைச் செய்வதில் நிபுணத்துவம் பெற்ற ஒரு அனுபவம் வாய்ந்த பொது பல் மருத்துவர் அல்லது பதிவுசெய்யப்பட்ட சிறப்பு எண்டோடோன்டிஸ்ட் ஒருவரை தேடுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment