Advertisment

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்ல ஆன்லைனில் புக் செய்வது எப்படி?

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் கட்டாயம் முன்பதிவு செய்ய வேண்டும் என்பதால், அவர்களுக்காக முன்பதிவு செய்வது எப்படி என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வழிகாட்டுகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Sabarimala temple, sabarimala Pilgrimage, How to book online for sabarimala Darshan, sabarimala online booking detailed guide, sabarimala darshan, சபரிமலை, ஆன்லைன் புக்கிங், ஆன்லைன் முன்பதிவு, சபரிமலை தரிசனம், சபரிமலை ஐயப்பன் கோயில், சபரிமலை தரிசனத்துக்கு ஆன்லைனில் முன்பவது செய்ய்வது எப்படி, sabarimala aiyappan temple, kerala, travancore devoswam board, vitualQ, sabarimala devotees

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் கட்டாயம் முன்பதிவு செய்ய வேண்டும் என்பதால், அவர்களுக்காக முன்பதிவு செய்வது எப்படி என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வழிகாட்டுகிறது.

Advertisment

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் தரிசனம் நவம்பர் முதல் ஜனவரி இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால் நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் ஐயப்பன் கோயிலுக்கு வருகை தந்துகொண்டிருக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.

இந்த ஆண்டு சபரிமலை ஐயப்பன் கோயில் பக்தர்கள் தரிசனத்தை நவம்பர் முதல் ஜனவரி முழுதும் நீட்டித்து அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் கட்டாயம் ஆன்லைனில் பதிவு செய்வது அவசியம். ஆன்லைனில் பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே பம்பாவில் தரிசனத்துக்காக அனுமதிக்கப்படுவார்கள்.

கேரள மாநில காவல்துறை மற்றும் திருவாங்கூர் தேவசம் போர்டும் மெய்நிகர் வரிசை / பிரசாதம் / பூஜை / தங்குமிடம் / காணிக்கை போன்ற சேவைகளை முன்பதிவு செய்வதற்காக ஒரு புதிய ஆன்லைன் சேவை தளத்தை அறிமுகப்படுத்தி அறிவித்துள்ளது.

பக்தர்கள் ஆன்லைன் சேவைகளைப் பெறுவதற்கு மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவை பதிவு செய்வதற்கு கட்டாயமாகும். மெய்நிகர் வரிசை, (தரிசனம்) மற்றும் பிரசாதம் தொடர்பான சேவைகளைப் பெறுவதற்கு முன்கூட்டியே பதிவுசெய்துகொள்ளலாம்.

மேலும், நியமிக்கப்பட்ட தகவல் மையங்களைத் தவிர, சபரிமலை ஆன்லைன் சேவைகளை முன்பதிவு செய்வதற்கு கேரள காவல்துறையோ அல்லது திருவிதாங்கூர் தேவசம் போர்டோ எந்தவொரு முகவர்களுக்கும் அங்கீகாரம் வழங்கவில்லை என்று அதன் வலைதளத்தில் பக்தர்களுக்கு அறிவித்துள்ளது.

சபரிமலை யாத்ரீகர்களுக்கான எந்த கேள்விகளுக்கும் # 702800100 என்ற ஹெல்ப்லைன் எண் கீழ் அறிவிக்கப்பட்டுள்ளது.

பக்தர்கள் சபரிமலை ஐயப்பன் கோயில் யாத்திரையின் போது சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பான எந்தவொரு பிரச்சினையிலும் உதவி பெற கேரள காவல்துறை 7025800100 என்ற ஹெல்ப்லைன் எண் அறிவித்துள்ளது.

சபரிமலை தரிசனத்துக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்வது எப்படி?

1

முதலில் சபரிமலை தரிசனத்துக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்ய https://sabarimalaonline.org என்ற அதிகாரப்பூர்வ தளத்துக்கு செல்ல வேண்டும்.

publive-image

2

register பட்டனை கிளிக் செய்தால், உங்கள் விவரங்களை நிரப்புவதற்கு வெற்றிடங்களைக் கொண்ட ஒரு பக்கம் திறக்கும்.

3

கட்டாயமாக அளிக்க வேண்டிய உங்களுடைய தனிப்பட்ட விவரங்களை உள்ளீடு செய்ய வேண்டும். புகைப்படம், பெயர், பிறந்த தேதி, முகவரி, அடையாளச் சான்று, தொலைபேசி எண் உள்ளிட்ட உங்கள் விவரங்களுடன் இணையதளத்தில் பதிவு செய்யுங்கள். தயவுசெய்து கவனிக்கவும்: சமீபத்திய அரசாங்க வழிகாட்டுதல்களின்படி பதிவு செய்ய ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை மட்டுமே அனுமதிக்கப்படும்.

4

ஒரு OTP (ஒன் டைம் பாஸ்வேர்ட்) உங்கள் தொலைபேசி எண்ணுக்கு அனுப்பப்படும். மின்னஞ்சல் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிடவும். கடவுச்சொல்லை உருவாக்கவும். இப்போது நீங்கள் தேவசம் போர்டின் அதிகாரப்பூர்வ தளத்தில் பதிவு செய்துள்ளீர்கள்.

5

இப்போது நீங்கள் உருவாக்கிய ஐடியுடன் புதிதாக உள்நுழையுங்கள். உங்கள் அடையாளத்தையும் உள்ளீடு செய்த விவரங்களையும் சரிபார்க்க உங்கள் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி உங்கள் மின்னஞ்சல் முகவரி அல்லது மொபைல் எண்ணுடன் உள்ளே நுழையுங்கள்.

6

அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்நுழைந்த பிறகு QBooking அல்லது Darshan ஐகானைத் தேடுங்கள். தரிசனம் ஸ்லாட் (மெய்நிகர் க்யூ) முன்பதிவு கிடைக்கும் தேதியைத் தேடுங்கள் (Date)

7

உங்கள் குழுவில் இணைந்து வரும் பக்தர்களின் விவரங்களை உள்ளீடு செய்யவும். குழு ஐகானில், தரிசனத்திற்கு எத்தனை பக்தர்கள் திட்டமிட்டுள்ளனர் என்பதை உள்ளீடு செய்ய Add Pilgrim ஐகானைக் கிளிக் செய்யுங்கள். பின்னர், அவர்களின் தனிப்பட்ட விவரங்களை உள்ளீடு செய்யவும்.

8

தேதியை தேர்ந்தெடுங்கள்.

தேதி ஸ்லாட்டின் காலண்டர் ஐகானைக் கிளிக் செய்து, காலெண்டரில் கிடைக்கும் தேதியையும் நேரத்தையும் தேர்ந்தெடுக்கவும். காலெண்டரில் இடம் இருக்கிறதா இல்லையா என்பதைக் காட்டும்.

9

நீங்கள் முன்பதிவு தவிர கூடுதல் சேவைகளை விரும்புகிறீர்களா? ஆம் என்றால் முன்பதிவு செய்யும் போது, விருப்பப்பட்டியலைச் சேர்க்கும் ஐகானைக் கிளிக் செய்யுங்கள். இங்கே, ஆன்லைனில் கூடுதல் தேவஸ்வம் சேவைகளுக்கு பணம் செலுத்தலாம், அதாவது அப்பம், அரவனா, அபிஷேகம் நெய், விபூதி போன்றவை கிடைக்கின்றன.

10

இப்போது முன்பதிவு book ஐகானைக் கிளிக் செய்யுங்கள்.

ஒரு சுவாமி கியூ-கூப்பன் அல்லது மெய்நிகர் கியூ-கூப்பன் - ஒவ்வொரு பக்தரின் பெயரையும் பூர்த்தி செய்து விவரங்கள் உருவாக்கப்படும். பின்னர், பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு முன்பதிவு உறுதிப்படுத்தப்பட்ட செய்தி அனுப்பப்படும்.

11

நீங்கள் இப்போது எனது சுயவிவரம் என்று கீழே காணப்படும் மெனுவிலிருந்து கூப்பனை பிரிண்ட் எடுக்கலாம். பரிவர்த்தனை வரலாறு மற்றும் யாத்ரீகர்களின் பட்டியலையும் இங்கே காணலாம்.

யாத்ரீகர்களின் விவரங்களின் விருப்பப்பட்டியல் ஐகான் வேலை செய்ய, யாத்ரீக விவரங்களில், தேர்ந்தெடுக்கப்பட்ட ஐகான் செயலில் இல்லை என்பதையும், தரிசனத்தின் தேதி மற்றும் நேரம் சரியாக நிரப்பப்படுவதையும் உறுதிசெய்யுங்கள்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Sabarimala
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment