/tamil-ie/media/media_files/uploads/2021/03/sambar1_759.jpg)
Samar Recipe Simple Sambar Recipes Lunch recipe Tamil
Samar Recipe Simple Sambar Recipes Lunch recipe Tamil
Sambar Recipe Sambar Rice Tamil : சமையலில் எப்படி தினம் தினமும் வித்தியாசத்தை கொண்டு வருவது என தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு, நிச்சயம் இந்தக் கதம்ப சாம்பார் கைகொடுக்கும். உங்களுக்கு பிடித்தாள் காய்கறிகளை சேர்த்து இதுபோன்ற முறையில் சாம்பார் வைத்துப் பாருங்கள், பாராட்டுகள் நூறு சதவிகிதம் உறுதி!
தேவையான பொருள்கள்
பிரஷர் குக்கருக்கு
துவரம் பருப்பு - ½ கப்
தண்ணீர் - 2 கப்
மஞ்சள் தூள் - ¼ டீஸ்பூன்
முள்ளங்கி (நறுக்கியது) - 1 கப்
முருங்கைக்காய் - 6 துண்டுகள்
கேரட் (நறுக்கியது) - ½ கப்
மற்ற மூலப்பொருள்கள்:
புளி சாறு - 1 கப்
நீளமாக வெட்டிய பச்சை மிளகாய் - 1
பொடியாக நறுக்கிய தக்காளி - 1
கறிவேப்பிலை - சிறிதளவு
மஞ்சள் தூள் - ½ டீஸ்பூன்
வெல்லம் - ¾ டீஸ்பூன்
வெங்காயம் - 1/2
உப்பு - தேவையான அளவு
சாம்பார் தூள் - 1 டேபிள்ஸ்பூன்
தாளிக்க:
தேங்காய் எண்ணெய் / சமையல் எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
கடுகு - ¾ டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
உலர்ந்த சிவப்பு மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிதளவு
பிரஷர் குக்கர்:
முதலில் ஒரு பிரஷர் குக்கரில் அரை கப் நன்கு கழுவிய துவரம் பருப்பை எடுத்துக் கொள்ளுங்கள்.
அதோடு 2 கப் தண்ணீர் சேர்க்கவும். அல்லது பருப்பை சமைக்க தேவையான தண்ணீரை சேர்த்துக்கொள்ளுங்கள்.
பிறகு மஞ்சள் தூளையும் சேர்க்கவும்.
அதன்மேல், ஒரு சிறிய கிண்ணத்தில் உங்களுக்கு விருப்பமான காய்கறிகளை (முள்ளங்கி, கேரட், முருங்கைக்காய்) சேர்த்து வைக்கவும். கிண்ணத்தில் தண்ணீர் சேர்க்க வேண்டாம்.
பின்னர் நடுத்தர சுடரில் 5 விசில்களுக்கு பிரஷர் குக்கரை விடவும்.
இறுதியாக, அழுத்தம் வெளியானதும், சமைத்த காய்கறிகளை தனியே எடுத்து, பருப்பை நன்கு கடைந்துகொள்ளவும்.
செய்முறை:
முதலாவதாக, ஒரு பெரிய கடாயில் 1 கப் புளி சாற்றை பிழியவும்.
மேலும் அதில், மிளகாய், தக்காளி, கறிவேப்பிலை மற்றும் மஞ்சள் தூள் சேர்க்கவும்.
விரும்பினால் வெல்லத்தையும் சேர்த்துக்கொள்ளலாம்.
பின்பு, இந்தக் கலவையை கொதிக்க வைக்கவும்.
இப்போது, வெங்காயம் மற்றும் உப்பு சேர்க்கவும்.
இதனை நன்றாக கலந்து 5 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.
பின்னர் சமைத்த காய்கறிகளைச் சேர்த்து மீண்டும் கொதிக்க வைக்கவும். காய்கறிகள் ஏற்கெனவே சமைக்கப்பட்டுள்ளதால், அதிகம் சமைக்க வேண்டாம்.
மேலும், கடைந்த பருப்பைச் சேர்த்து நன்கு கலந்து விடுங்கள்.
சாம்பரை கொதிக்க வைக்கவும். அஜீரணத்திற்கு காரணமாக இருக்கும் பருப்பைச் சேர்த்த பிறகு அதிக நேரம் கொதிக்க வைக்க வேண்டாம்.
பின்னர் சாம்பார் பொடியைச் சேர்த்து விரைவாக கலக்கவும். இல்லையெனில் சாம்பார் தூள் கட்டிகளை உருவாக்கும்.
மேலும் ஒரு நிமிடம் கொதிக்க வைத்து அடுப்பை அணைக்கவும்.
ஒரு சிறிய கடாயில் எண்ணெயை சூடாக்கி, அதில் கடுகு, பெருங்காயத்தூள், சிவப்பு மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்க்கவும்.
அவை வெடித்தவுடன், உடனடியாக சாம்பாரில் சேர்க்கவும்.
இறுதியாக, காய்கறி சாம்பருக்கு ஒரு நல்ல கலவையை கொடுத்து சூடான சாதத்துடன் பரிமாறவும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.