இந்த க்ளைமேட்டுக்கு இது பெஸ்ட்: சுவையான பூண்டு சட்னி செய்முறை

Garlic Chutney: மழை, குளிர் காலங்களுக்கு இந்த பூண்டு சட்னி இன்னும் அதிகம் உகந்த உணவுப் பொருள். செய்து, சாப்பிட்டு மகிழுங்கள்!

chettinad kara chutney recipe kara chutney hotel style
chettinad kara chutney recipe kara chutney hotel style

Samayal Kurippu In Tamil, Poondu Chutney Tamil Video: டிபனுக்கு சைட் டிஷ் என்ன செய்வது? என திணறல் ஏற்படும்போது, தயங்காமல் பூண்டு சட்னியை தேர்வு செய்யுங்கள். உடல் நலத்திற்கு அவ்வளவு தேவையான உணவுப் பொருள் இது. குறிப்பாக உடலில் செரிமான சக்தியை அதிகரிப்பது, நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவது ஆகியவை இதன் முக்கியப் பணிகள்.

நம் சமையலறையில் எப்போதும் இருக்கும் ஒரு பொருள் என்பதால், இதற்காக மெனக்கெட்டு சிரமப்பட வேண்டியதில்லை. உடல் நலத்திற்கு அவசியத் தேவையான பூண்டு சட்னியை சுவையாக எப்படி தயார் செய்வது? எனப் பார்க்கலாம்.

Poondu Chutney Tamil Video: பூண்டு சட்னி

பூண்டு சட்னி செய்யத் தேவையான பொருட்கள்: பூண்டு – 3/4 கப், எண்ணெய் – 1 டீ ஸ்பூன், கடுகு – 1 டீ ஸ்பூன், சீரகம் – 1/2 டீ ஸ்பூன், பெருங்காயத் தூள் – 1/4 டீ ஸ்பூன், உளுந்தம் பருப்பு – 1 டீ ஸ்பூன்.

அரைக்க: தேங்காய் – 1 /4 கப், கடுகு – 1.5 டீ ஸ்பூன், தக்காளி – 1, காய்ந்த மிளகாய் – 3, புளி தண்ணீர் – 1 கப், மஞ்சள் – 1/4 டீ ஸ்பூன், உப்பு – தேவையான அளவு, வெல்லம் – சிறிய துண்டு

பூண்டு சட்னி செய்முறை :

முதலில் பூண்டை உரித்து, வதக்கிக்கொள்ள வேண்டும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு , சீரகம், உளுந்தம் பருப்பு சேர்த்து தாளித்துக் கொள்ளவும். பிறகு பெருங்காயத் தூள், பூண்டு சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வதக்குங்கள்.
அடுத்ததாக அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை அரைத்துக்கொள்ளுங்கள்.

கடாய் வைத்து, அதில் புளித்தண்ணீரை ஊற்றி அதில் மஞ்சள், உப்பு, வெல்லம் சேர்த்து கொதிக்க வையுங்கள்.
கொதித்து வந்ததும் அரைத்த விழுதை கொட்டிக் கலக்குங்கள். தண்ணீர் இறுகி கெட்டியானதும் வதக்கி வைத்துள்ள பூண்டை சேர்த்து கிண்டவும். தேவைப் படும்போது எண்ணெய் கொஞ்சம் சுற்றிலும் ஊற்றிக்கொள்ளுங்கள். நன்கு சூடாகி வர, பூண்டு சட்னி தயார்.

மழை, குளிர் காலங்களுக்கு இந்த பூண்டு சட்னி இன்னும் அதிகம் உகந்த உணவுப் பொருள். செய்து, சாப்பிட்டு மகிழுங்கள்!

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

 

 

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Samayal kurippu in tamil poondu chutney tamil video garlic chutney

Next Story
மை லக்கி கேர்ள்.. காதல் மனைவி பற்றி நெகிழும் விஜய் டிவி மாகாபா!ma ka pa wife ma ka pa anand makapa wife
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com