Advertisment

இட்லிக்கும் சாதத்திற்கும் ஒரே சாம்பார்… ஈஸியா குக்கரில் இப்படி செய்து பாருங்க!

Simple tips for rice and idli Sambar in tamil: இட்லி, தோசை போன்ற டிபன்களுக்கும், சூடான சாதத்திற்கும் ஏற்ற சாம்பார் எப்படி தயார் செய்யலாம் என்று இங்கு பார்க்கலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
sambar recipe in tamil: how make sambar for idli and rice

sambar recipe in tamil: நம்முடைய உணவு வகைகளில் சாம்பாருக்கென தனி இடம் உண்டு. இவற்றில் பல வகைகள் உள்ளன. அதில் சில வகை சாம்பார்கள் சாதத்திற்கு அருமையாக இருக்கும். ஆனால், இட்லி, தோசை போன்ற டிபன்களுக்கு செட் ஆகாது. ஆனால், இவை இரண்டிற்கும் பொருந்தும் அற்புத சாம்பார் வகைகளும் உள்ளன. அந்த வகையான சாம்பார்களை தயார் செய்வது மிகவும் எளியது தான். அதும் குக்கரில் செய்து அசத்தலாம்.

Advertisment

சுவையான குக்கர் சாம்பார் செய்யத் தேவையான பொருட்கள்:

பாசிப் பருப்பு – 75 கிராம்

துவரம்பருப்பு – 50 கிராம்

சின்ன வெங்காயம் – 15

தக்காளி – 5

பெரிய கேரட் – 1

மஞ்சள் பூசணி – 100 கிராம்

மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்

பெருங்காயத்தூள் – அரை ஸ்பூன்

உப்பு – ஒரு ஸ்பூன்

சாம்பார் பொடி – 2 ஸ்பூன்

எண்ணெய் – 5 ஸ்பூன்

உலர்ந்த மிளகாய் – 4

கடுகு – அரை ஸ்பூன்

உளுத்தம் பருப்பு – அரை ஸ்பூன்

வெந்தயம் – கால் ஸ்பூன்

சீரகம் – கால் ஸ்பூன்

பூண்டு – 5 பல்

கறிவேப்பிலை – ஒரு கொத்து

கொத்தமல்லித்தழை – ஒரு கைப்பிடி.

publive-image

சாம்பார் செய்முறை:

சாம்பார் தயார் செய்ய முதலில் குக்கரை எடுத்து அதில் பாசிப்பருப்பு மற்றும் துவரம் பருப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்றாக 2 அல்லது 3 முறை அலசிக் கொள்ளவும்.

பிறகு அவற்றுடன் அரை ஸ்பூன் மஞ்சள் தூள், அரை ஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்த்துக் கலந்து கொள்ளவும்.

தொடர்ந்து சின்ன வெங்காயம், தக்காளி, கேரட், பூசணி போன்ற காய்கறிகளை சாம்பாருக்கு எப்போதும் நறுக்குவது போல் வெட்டிக்கொள்ளவும்.

பின்னர் இவையனைத்தையும் குக்கரில் சேர்த்திக்கொள்ளவும். குக்கரை மூடுவதற்கு முன் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து விடவும்.

குக்கரில் இருந்து 4 விசில்கள் வந்ததும் தனலை அணைத்து விட வேண்டும். குக்கரின் பிரஷர் குறைந்ததும் அவற்றை ஒரு கரண்டியால் கலந்து விடவும்.

இதன்பிறகு, அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடேற்றவும். பின்னர் அதில் கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், வெந்தயம் சேர்த்து தாளிக்கவும்.

தொடர்ந்து தட்டிய பூண்டு, உலர்ந்த சிவப்பு மிளகாய், சேர்த்து கிளறிவிடவும். பிறகு அவற்றுடன் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும்.

அவற்றை இப்போது சாம்பாருடன் சேர்த்தால் சுவையான குக்கர் சாம்பார் தயார். இந்த அற்புத சாம்பாரை சாதத்திற்கும், இட்லி, தோசை போன்ற டிபன்களுடனும் சேர்த்து ருசித்து மகிழலாம்.

publive-image

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle Food Recipes Food Tips Healthy Food Tips Healthy Food Tamil News 2 Healthy Food Tamil Food Recipe Sambar Recipe Sambar Recipe Tamil
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment