Advertisment

ஹோட்டல் ஸ்டைல் இட்லி சாம்பார் இவ்ளோ ஈசியா? சிம்பிளான செய்முறை

Idli sambar making tamil video: பொருத்தமாக இருக்கும். ஹோட்டல் ஸ்டைலில் அதே போன்ற இட்லி சாம்பாரை வீட்டிலும் செய்யலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ஹோட்டல் ஸ்டைல் இட்லி சாம்பார் இவ்ளோ ஈசியா? சிம்பிளான செய்முறை

இட்லி சாம்பார் செய்முறை

sambar recipe tamil news, idli sambar making tamil video: இட்லி- தோசைக்கு என்னதான் விதவிதமான சைட் டிஷ்கள் இருந்தாலும், சாம்பார் இல்லாவிட்டால் அது முழுமை அடையாது. ஹோட்டல்களில் அரிசி சாதத்திற்கு வைக்கப்படும் சாம்பாருக்கும், இட்லி- தோசைக்கு வைக்கப்படும் சாம்பாருக்கும் வித்தியாசம் உணர்ந்திருப்பீர்கள்.

Advertisment

சாதத்திற்கு வைக்கப்படும் சாம்பார் அவ்வளவாக இட்லி- தோசைக்கு ஒத்துப் போகாது. அதேபோல இட்லி- தோசைக்கு வைக்கப்படும் சாம்பார், சாதத்திற்கு உதவாது. அதேசயம் இட்லி- தோசைக்கு வைக்கப்படும் டிபன் சாம்பார், அவைகளுக்கு அவ்வளவு பொருத்தமாக இருக்கும். ஹோட்டல் ஸ்டைலில் அதே போன்ற இட்லி சாம்பாரை வீட்டிலும் செய்யலாம்.

Idli sambar making tamil video: இட்லி சாம்பார்

ஹோட்டல் ஸ்டைலில் இட்லி சாம்பார் செய்யத் தேவையான பொருட்கள் : துவரம்பருப்பு - கால் கப், பாசிப்பருப்பு - கால் கப், தக்காளி - 2, கேரட் - 1, கத்தரிக்காய் - 1, உருளைக் கிழங்கு - 1, பச்சை மிளகாய் - 8, புளி - பெரிய நெல்லிக்காய் அளவு, சாம்பார் பொடி - ஒரு டீ ஸ்பூன், மஞ்சள் தூள் - கால் டீ ஸ்பூன், பெருங்காயத் தூள் - அரை டீ ஸ்பூன், சின்ன வெங்காயம் - 10, கொத்தமல்லி இலை- சிறிதளவு

எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

தாளிக்க: கடுகு, உளுந்தம் பருப்பு, சோம்பு - தலா ஒரு டீ ஸ்பூன், வெந்தயம் - கால் டீ ஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு.

இட்லி சாம்பார் செய்முறை :

கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மிளகாயை நீளவாக்கில் கீறிக்கொள்ளுங்கள். கேரட், உருளைக் கிழங்கு, கத்தரிக்காயை சதுரமான துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். புளியைத் தண்ணீரில் ஊறவைத்து, கரைத்து வடிகட்டிக் கொள்ளுங்கள்.

துவரம்பருப்பு, பாசிப்பருப்பை நன்றாக கழுவி அதனுடன் மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து வேகவிட்டு எடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடானதும் தாளிக்க கொடுப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்த பின்னர் அதனுடன் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

சின்ன வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.

பிறகு சாம்பார் பொடி, கேரட், கத்தரிக்காய், உருளைக்கிழங்கு, புளிக்கரைசல், உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். காய்கள் வெந்ததும், வேகவைத்த பருப்பு சேர்த்து ஒரு கொதி விடவும். கடைசியாக கொத்தமல்லி இலை தூவி இறக்கவும். இப்போது சுவையான டிபன் சாம்பார் ரெடி.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"

 

Food Recipes
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment