sandwich for kids in tamil: சாண்ட்விச் பெரும்பாலான குழந்தைகளால் விரும்பப்படும் ஒன்று. நாம் குழந்தைகளுக்கான உணவைத் திட்டமிடும் போது, உணவின் சுவை மற்றும் காட்சி முறையை மனதில் வைத்து சரியான ஊட்டச்சத்தில் பேக்கிங் செய்வது மிக முக்கியமானதாகும். அவர்களின் மூளை வளர்ச்சியை அதிகரிக்க மற்றும் அவர்களின் ஆற்றல் தேவைகளை பூர்த்தி செய்ய அவர்களுக்கு ஒரு சீரான உணவை வழங்குவது முக்கியம்.
எனவே, அவர்களுக்கு சாண்ட்விச் என்பது சரியான தேர்வு ஆகும். ஏனென்றால், இவற்றில் குழந்தைகள் விரும்பக்கூடிய காய்கறிகள் மற்றும் புரதம் சத்து நிறைந்த உணவு பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
- ஸ்வீட் சாண்ட்விச்
தேவையான பொருட்கள்:-
பிளம்ஸ் – 6 -7
பேரீட்சை – 2-3
துத்தி ஃப்ரூட்டி – 1 டீஸ்பூன்
பிரட் துண்டுகள் – 2
திராட்சை – 5-6
தேங்காய் துருவல் – 2 டீஸ்பூன்
பாதாம் – 10-12
முந்திரி 10-12
ஸ்வீட் சாண்ட்விச் செய்முறை:-

முதலில் பிளம்ஸை உரித்து விதைகளை அகற்றி வெட்டவும்.
பிறகு பேரீச்சையின் விதைகளை அகற்றவும்.
தொடர்ந்து பிளம்ஸ் மற்றும் பேரீச்சையை பிளெண்டரில் கலந்து கெட்டியான பேஸ்ட் செய்து அதை தனியாக ஒதுக்கி வைக்கவும்.
இதன் பின்னர், பாதாம் மற்றும் முந்திரியை நறுக்கவும்.
இவற்றை திராட்சை மற்றும் துத்தி பழங்களை கலக்கவும்.
இப்போது ஒரு பிரட் துண்டுயை எடுத்து இரண்டு துண்டுகளிலும் பிளம் பேஸ்ட்டை தடவவும்.
பிறகு தேங்காய் துருவலை இரண்டு துண்டுகளிலும் தெளிக்கவும்.
திராட்சை, பாதாம் மற்றும் முந்திரி கலவையுடன் துண்டுகளை அடுக்கி, இரண்டாவது பிரட் துண்டுடன் மூடி வைக்கவும்.
இப்போது பிரட் கட்டர் மூலம் அவற்றை வெட்டி பரிமாறி ருசிக்கவும்.
இந்த சாண்ட்விச் நாம் பாதாம் மற்றும் முந்திரியை சேர்ப்பது நல்லது, ஏனெனில் அவை வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்களைக் கொண்டுள்ளன. அவற்றில் ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் நார்ச்சத்து உள்ளதன. மேலும் இது குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது.

2. ரெயின்போ சாண்ட்விச்
தேவையான பொருட்கள்:-
தயிர் – 1 கிண்ணம்
பீட்ரூட் – 1 (துருவியது)
கேரட் – 1 (துருவியது)
இனிப்பு பூசணி – 1 கிண்ணம்
பட்டாணி – ½ கிண்ணம்
தக்காளி – 1 (நறுக்கியது)
கீரை – 2-3 இலைகள்
பன்னீர்- 60-70 கிராம் (துருவியது)
சுவைக்கு உப்பு
கருப்பு மிளகு – ஒரு சிட்டிகை
பிரட் – 5
செய் முறை:

முதலில் இனிப்பு பூசணி மற்றும் பட்டாணியை தனித்தனியாக வேகவைத்து, உப்பு மற்றும் மிளகு சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
பிறகு தயிரை இரண்டு பகுதிகளாக பிரிக்கவும்.
ஒரு பகுதியில் கேரட் மற்றும் இரண்டாவது பகுதியில் பீட்ரூட் சேர்க்கவும்.
இப்போது பீட்ரூட் கலவையை 1 துண்டு மீது தடவி, அதன் மேல் இரண்டாவது துண்டு போட்டு, கேரட் கலவையுடன் அடுக்கி, தக்காளி துண்டுகளை சேர்த்து, மற்றொரு துண்டு பிரட்யை வைத்து, அதன் மேல் பூசணி பேஸ்ட் மற்றும் பன்னீர் தடவி, அதன் மேல் மற்றொரு ரொட்டி துண்டை வைக்கவும். அவற்றோடு பட்டாணி பேஸ்ட் மற்றும் கீரை தடவவும்.
நன்கு வேக வைத்த இந்த சாண்விட்ச்யை இப்போது உங்கள் குழந்தைகளுடன் பரிமாறி ருசித்து மகிழவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil