Advertisment

"அவமானப்பட்டு நடுரோட்டில் அழுதிருக்கிறேன்" - 'சத்யா' ஆயிஷா கடந்து வந்த வலிகள்!

Sathya Serial Ayeesha Lifestyle Story எங்க வாழ்க்கையை ஒருநாள் வாழ்ந்து பார்த்தால் அந்த வலி புரியும்

author-image
WebDesk
New Update
Sathya Serial Ayeesha Lifestyle STory Tamil News

Sathya Serial Ayeesha Lifestyle STory Tamil News

Sathya Serial Ayeesha Lifestyle Story Tamil News : சத்யா சீரியல் மூலம் வித்தியாச கெட்-அப்பில் எப்போதுமே ட்ரெங்கில் தவறாமல் வந்துவிடுவார் ஆயிஷா. திரைத்துறையில் என்ட்ரி ஆனதிலிருந்து இவர் எதிர்கொள்ளாத பிரச்சனைகளே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவிற்கு இவருடைய புகழ் கூடவே விமர்சனங்களும் வளர்ந்தன. ஆனால், எதையும் பொருட்படுத்தாமல் முன்னேற்றத்தை மட்டுமே குறிக்கோலாஜிக் கொண்டிருக்கும் இவர் தான் கடந்து வந்த பாதைகளையும் அதிலிருந்த வலிகளையும் சமீபத்தில் பகிர்ந்துகொண்டார்.

Advertisment
publive-image

"பெண்கள் என்றாலே மற்றவர்களுக்கு ஏளனம்தான். பல எங்குக் குறைவாக இருக்கிறதோ அங்கே பதம் பார்க்கும் பலரை நான் கடந்து வந்திருக்கிறேன். நம்மையும் நம் கேரக்டரையும் மிகவும் ஈசியாக எடை போடுபவர்களைக் கண்டாலே அவ்வளவு கோவம் வரும். ஆனால், இதையெல்லாம் மீறி நாம் சாதித்து காட்டும் போது, நமக்கு ஏற்படுகிற சந்தோஷத்திற்கும் முழுமைக்கும் அளவே இல்லை.

publive-image

நம்மால் எதையும் சாதிக்க முடியும் என்று நினைத்தால், நிச்சயம் இந்தத் தடைகளையும் மீறி சாதிக்க முடியும். ஆனால், அந்த தன்னம்பிக்கை நம்முள் வரவைப்பதுதான் கடினம். திரைத்துறைக்குள் வருவதற்கு முன்பு எனக்கு மீடியா பற்றி எதுவுமே தெரியாது. கண்ணைக் கட்டி காட்டில் விட்டதுபோல சுற்றித்திருந்தேன். கொஞ்சம் கூட நடிக்கவே வரலைதெரியல என்று இயக்குநரிடம் திட்டு வாங்கி, நடுரோட்டில் நின்று அழுதிருக்கிறேன்.

ஆனால், அப்படி அவமானங்கள் பட்டிருந்தாலும் ஒருபோதும் என் தன்னம்பிக்கையை விடவில்லை. அப்படி நம்பிக்கை இழந்திருந்தால் நிச்சயம் இந்த இடத்திற்கு என்னால் வந்திருக்க முடியாது. நாம் எதையும் கத்துக்க தயக்கம் காட்டக் கூடாது. நமக்கு ஏதாவது ஒரு விஷயம் தெரியவில்லை என்றால் ஆமாம், தெரியாது என்று ஒப்புக்கொண்டு அவற்றைக் கற்றுக்கொள்ளலாம். அதில் இந்தத் தவறும் அவமானமும் இல்லை. நான் என்னுடன் நடிப்பவர்கள் எப்படி நடிக்கிறார்கள் என்பதைப் பார்த்துப்பார்த்து தான் கற்றுக்கொண்டேன்.

publive-image

அதேபோல திரைத்துறையில் இருப்பவர்களைப் பற்றி மிகவும் எளிதாக ஜட்ஜ் செய்துவிடுவார்கள். சிரித்தாலும் கூட, ஏதோ பெரிய குற்றம் செய்துவிட்டதுபோல நினைப்பார்கள். அதிலும், நம் கூடவே இருந்துகொண்டு, முதுகுக்குப் பின்னல் குத்துபவர்களை என்னவென்று சொல்வது. ஆனால், நம்முடைய இலக்கை நோக்கி ஓடிக்கொண்டிருப்பது மிகவும் முக்கியம்.

publive-image

எனக்குத் தெரிந்து எங்களுடைய வேலைதான் இருப்பதிலேயே கஷ்டமான வேலை என்று நினைக்கிறேன். வீட்டில் 1000 பிரச்சனைகள் இருந்தாலும், ஷூட்டிங் ஸ்பாட்டில், சிரி என்றால் சிரிக்கும். இதுபோன்று எமோஷன்களை கட்டுப்படுத்துவது அவ்வளவு எளிதான விஷயமல்ல. ஆனால், எங்களுக்குக் கிடைக்கிற பெயர்தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எங்க வாழ்க்கையை ஒருநாள் வாழ்ந்து பார்த்தால் அந்த வலி புரியும்" என்று ஆதங்கத்தோடு நிறைவு செய்கிறார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Actress Aayesha
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment