உங்களைப் பற்றி பிறர் சொல்லும் கருத்துகளுக்கு ஏற்ப உங்கள் வாழ்க்கையை வாழ்கிறீர்களா?

Self love : ஒவ்வொருவரும் சுயகாதலில் முதன்மையானவர்களாக இருக்கின்றோம். ஆனால், உங்கள் எல்லா குறைகளையும் ஏற்றுக் கொண்டு, உங்களை நீங்களே காதல் செய்வது எவ்வளவு தூரம்...

மாடலும், சுயமுன்னேற்ற பேச்சாளருமான கெய்ட்லின் ரூக்ஸ் இந்த TED உரையாடலில் தமது சொந்தப்போராட்டங்கள் மற்றும் தமது முன்னேற்றத்தைப் பற்றி குறிப்பிடுகிறார். எப்படி தாம் ஆரோக்கியமற்ற யோசனைகளைக் கொண்டிருந்தேன் என்றும், எப்போதும் தாம் மட்டுமே விரும்பப்பட வேண்டும் விரும்பினேன் என்றும் ஒவ்வொருவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று விரும்பினேன் என்றும் கூறுகிறார்.

ஒவ்வொருவரும் சுயகாதலில் முதன்மையானவர்களாக இருக்கின்றோம். ஆனால், உங்கள் எல்லா குறைகளையும் ஏற்றுக் கொண்டு, உங்களை நீங்களே காதல் செய்வது எவ்வளவு தூரம் எளிதானது? இந்த TED உரையாடலில் மாடலும், சுயமுன்னேற்ற பேச்சாளருமான கெய்ட்லின் ரூக்ஸ் தமது சொந்தப்போராட்டங்கள் மற்றும் தமது வளர்ச்சியைப் பற்றி குறிப்பிடுகிறார். எப்படி தாம் ஆரோக்கியமற்ற யோசனைகளைக் கொண்டிருந்தேன் என்றும், எப்போதும் தாம் மட்டுமே விரும்ப ப்பட வேண்டும் விரும்பினேன் என்றும் ஒவ்வொருவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று விரும்பினேன் என்றும் கூறுகிறார்.

“என்னுடைய 16-வது வயதில், என்னுடைய அதீத எடை காரணமாக குண்டானேன். பார்ப்பதற்கு காஸ்மோ பத்திரிகையின் அட்டைப்பட அழகி போல இருக்க வேண்டும் என்று நான் விரும்பினேன். என்னுடைய டயட் என்பது பச்சைக்காய்கறிகள், பழங்களைக் கொண்டிருந்தது. நான் உண்ணும் ஒவ்வொரு உணவின் ஒவ்வொரு கலோரி அளவையும் நான் கணக்கில் வைத்துக் கொண்டேன். பல ஆண்டுகளாக என் உடலை தீவிரமாக பாதிப்புக்கு உள்ளாக்கி விட்டேன். இதுவரை சாப்பிட உணவுகளில் இருந்து மீள முயற்சி செய்தேன். என்னுடைய தொடைகளுக்கு இடையே இடைவெளியும், கொடி இடையும் தேவையாக இருந்தது,” என்று பகிர்ந்து கொள்கிறார்.

அடுத்ததாக உறவுகள் பற்றிப் பேசிய ரூக்ஸ், ஒவ்வொரு விஷயத்திலும் தமக்கு யாரேனும் ஒருவர் பெரும் அளவில் அழுத்தம் கொடுத்துக் கொண்டே இருந்தனர். அவையெல்லாம் தகுதியானதாக, போதுமானதாக உணரச் செய்தன. “உறவு முடிவுக்கு வந்தபோது, நான் முழுவதுமாக மனம் உடைந்து விட்டேன். நானே எனது சொந்தக்காலில் எப்படி நிற்கப்போகின்றேன் என்று எனக்குத் தெரியவில்லை. நான் கொண்டிருந்த அடையாளம் எனும்சிறிய உணர்வை இழந்து விட்டதாக உணர்ந்தேன். பயந்து நடுங்கினேன்,” என்கிறார் அவர்.

நீண்ட நாட்களாக என்னை எனக்கே தெரியவில்லை என்று ரூக்ஸ் ஒத்துக்கொள்கிறார். ஒரு நாள் அவள், அவனை அழைத்தாள். அவன் நன்றாக மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிந்து கொண்டாள். அதுவரைக்கும் அவள் மிகுந்த வேதனையை அனுபவித்தாள். “அந்தத் தருணத்தில் இருந்து நான் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன்,” என்று குறிப்பிடுகிறார்.

உரையின் இறுதியில், நம்மை நாமே முதலில் அன்பு செய்யாவிட்டால், நாம் பிறர் மீது அன்பு செலுத்த முடியாது என்கிறார். “உங்களைச் சுற்றி இருக்கும் நபர்கள், உங்கள் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை , உங்கள் வளர்ச்சியில் ஈர்ப்பை உருவாக்குவார்கள். ஆனால், உங்களுக்குள் நீங்கள் மட்டுமே பெரும் தாக்கத்தையும், ஈர்ப்பையும் உருவாக்க வேண்டும். உங்கள் மதிப்பை நீங்களே தெரிந்து கொள்ளுங்கள். உங்களை நோக்கி கவனம் செலுத்தத் தொடங்குங்கள். உங்களை வளர்த்தெடுத்தெடுங்கள். உங்களை நீங்களே முன்னெடுங்கள் நல்ல விஷயங்கள் வரும். இப்போது நீங்கள் எந்த இடத்தில் இருக்கிறீர்கள், வளர்ச்சியில் என்னவாக மாற விரும்புகிறீர்கள் என்ற இரண்டுக்கும் இடையிலான இடைவெளியை தெரிந்து கொள்ளுங்கள். இந்த விஷயம்தான் வாழ்க்கை எனப்படுகிறது. இரண்டுக்கும் இடையே இது நிகழ்வது கடினம். ஆனால், அதுதான் உண்மையாக இருக்கிறது. உண்மை அழகானது,” என்று முடிக்கிறார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close