Advertisment

பேர்லயே ‘வம்ப’ வச்சிருக்க வனஜா : உண்மை என்ன தெரியுமா?

Sembaruthi Serial Vanaja : ‘ரெட்டை வாலு’ படத்தில் இவரின் கதாபாத்திரம், பார்வையாளர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும்படி அமைந்திருக்கும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
oorvambu lakshmi, sembaruthi serial vanaja

oorvambu lakshmi, sembaruthi serial vanaja

Lakshmi : ’செம்பருத்தி’ சீரியலில் வனஜாவாக காமெடி பிளஸ் வில்லி வேடத்தில் நடித்து வருபவர் நடிகை லட்சுமி. இவருக்கு இன்னொரு பெயரும் உள்ளது. அது என்ன தெரியுமா? ‘ஊர் வம்பு லட்சுமி’ என்பது தான். அந்தளவுக்கு ரகளையான ஆள்.

Advertisment

சரவணா ஸ்டோர், லலிதா ஜுவல்லரி உள்ளிட்ட கடைகள் மூடப்படுகிறதா? சென்னை மாநகராட்சி அதிரடி

சென்னையில் பிறந்து வளர்ந்த இவர் 2003-முதல் சீரியல் மற்றும் சினிமாவில் நடித்து வருகிறார். லட்சுமியின் முதல் அறிமுகம் ‘பார்த்தாலே பரவசம்’ திரைப்படம் தான். இயக்குநர் கே.பாலச்சந்தர் அறிமுகப்படுத்திய பல பிரபலங்களுள் இவரும் ஒருவர். சீரியல் நடிகர்கள், தலைவாசல் விஜய், அப்சர், சஞ்சீவ், சாய் கிரண், பரத் கல்யாண் உள்ளிட்டோர்களுடன் பல சீரியல்களில் நடித்துள்ளார் லட்சுமி. ’ரெட்டை வாலு’, ‘வில் அம்பு’, ‘மன்னவன் வந்தானடி’ உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். குறிப்பாக ‘ரெட்டை வாலு’ படத்தில் இவரின் கதாபாத்திரம், பார்வையாளர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும்படி அமைந்திருக்கும்.

oorvambu lakshmi, sembaruthi serial vanaja ரஜினியுடன் ஊர்வம்பு லட்சுமி

லட்சுமிக்கு திருமணமாகி மோகன் விராட் என்ற மகனும் உள்ளார். பல சீரியல்களில் காமெடி / வில்லி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இவர், இரண்டும் கலந்த கேரக்டரில் செம்பருத்தி சீரியலில் நடித்து வருகிறார். ஷூட்டிங் இல்லாத நாட்களில் ஷாப்பிங் செல்வது தான் லட்சுமிக்கு மிகவும் பிடித்த விஷயமாம். அப்படி ஷாப்பிங் போகும் போது, வித விதமான சேலைகளை வாங்குவதை வழக்கமாக வைத்துள்ளார் லட்சுமி.

ஹாய் கைய்ஸ் : இனியாவது விழித்துக்கொள்ளுங்கள்…இல்லையேல் நகரமே நரகம் தான்

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்"

Tv Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment