semiya biryani recipe, semiya biryani recipe in tamil : சேமியாவில் சுவையான பிரியாணி செஞ்சு வீட்டில் உள்ளவர்களை அசத்துங்கள். எப்படி செய்ய வேண்டும் என பார்க்கலாம்.
Advertisment
semiya biryani recipe : செய்முறை!
சேமியா - ஒரு கப் முட்டை - ஒன்று பிரியாணி இலை - 2 பட்டை - 1 கிராம்பு - 4 ஏலக்காய் - 2 வெங்காயம் - ஒன்று தக்காளி - ஒன்று கேரட் - ஒன்று பச்சை பட்டாணி - கால் கப் பீன்ஸ் - 5 இஞ்சி பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன் கரம் மசாலா அரை டீஸ்பூன் மஞ்சள் தூள் -கால் டீஸ்பூன் மிளகாய் தூள் - 1 பச்சை மிளகாய் -2 முந்திரி - 5 எண்ணெய் உப்பு
Advertisment
Advertisement
முதலில், வாணலியை அடுப்பில் வைத்து என்னைவிட்டு சூடானதும், பிரியாணி இல்லை, பட்டை, ஏலக்காய், கிராம்பு சேர்த்து வதக்கவும். பிறகு, வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். தக்காளி சேர்க்கவும்.
தக்காளி வெந்ததும் பொடியாக நறுக்கிய பீன்ஸ், கேரட்டுடன் பச்சை பட்டாணி, பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும். காய் பாதி வெந்ததும், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கவும். பிறகு, ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து கொதி வந்ததும், சேமியா சேர்த்து வேகவிடவும். சேமியா பாதி வெந்ததும் முட்டை உடைத்து ஊற்றி நன்றாக கிளறி வேகவிடவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil