ரீவைண்ட் 2020 : இது சீரியல் நடிகர், நடிகைகளின் டும் டும் டும் தொகுப்பு!

லாக்டவுன் காலத்தில் லாக்கான ஸ்பெஷல் தருணங்கள்.

serial actor raghul wife serial actress wedding
serial actor raghul wife serial actress wedding

serial actor raghul wife serial actress wedding: இன்றைய ரீவைண்ட் 2020 சிறப்பு செய்தி தொகுப்பின் சீரியல் நடிகர், நடிகைகள் லாக்டவுன் காலத்தில் லாக்கான ஸ்பெஷல் தருணங்கள்.

வினோத் பாபு -ஹேமலதா சிந்து

விஜய் டிவியில் ஒளிப்பரப்பான சுந்தரி நீயும் சுந்தரன் நானும் சீரியலில் கதாநாயகனாக நடித்தவர் வினோத் பாபு.இதற்கு முன்பு கலர்ஸ் தமிழில் ஒளிப்பரப்பான சிவகாமி என்ற சீரியலிலும் நடித்துள்ளார்.இவர் விஜய் டிவியில் ஒளிப்பரப்பான kpy நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்குப்பெற்றுள்ளார்.

சரத்-கிரித்திகா

விஜய் டிவியில் ஒளிப்பரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குப்பெற்றவர் சரத்.இவரும் தீனாவும் சேர்ந்து செய்த காமேடிகள் இன்றும் பலரின் பேவரைட்டாக உள்ளது.சர்த், கிருத்திகா என்பவரை நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளார்.கடந்த மார்ச் மாதம் இவர்களின் நிச்சயதார்த்தம் நடைப்பெற்றது.

சாய்சரண் -மீரா

விஜய் டிவியில் ஒளிப்பரப்பான சூப்பர் சிங்கர் மூன்றாவது சீசனில் கலந்துக்கொண்டு வெற்றி பெற்றவர் சாய்சரண்.அதன் பின்னர் விஜய் டிவியில் ஒளிப்பரப்பான ஏர்டெல் சூப்பர் சிங்கர் டி20 போன்ற நிகழ்ச்சிகளில் போட்டியாளராகவும்,சிறப்பு விருந்தினராகவும் கலந்துக்கொண்டார்.

super singer sai charan instagram sai charan wife
super singer sai charan instagram sai charan wife

ஸ்வேதா – அருண்

கனா காணும் காலங்கள் தொலைக்காட்சி தொடர் மூலம் நடிகையானவர் ஸ்வேதா சுப்ரமணியன். அவர் கார்த்திகை பெண்கள், அழகி உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். பிரஜின் நடித்து வரும் சின்ன தம்பி தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ஸ்வேதா.
ஸ்வேதா அருண் என்பவரை காதலித்து வந்தார். காதலை பெற்றோரிடம் சொல்லி திருமணத்திற்கு சம்மதம் பெற்றனர். இதையடுத்து கடந்த ஜூலை மாதம் 9ம் தேதி ஸ்வேதா, அருணின் திருமணம் நடந்தது.

ராகுல் ரவி – லட்சுமி

தமிழில் நந்தினி தொலைக்காட்சி தொடரில் நாயகனாக நடித்தார். பிரபல இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய சாக்லெட் தொடரிலும் நாயகனாக நடித்தார். தற்போது கண்ணான கண்ணே தொடரில் நடித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு லட்சுமி நாயர் என்பவரை காதலிப்பதாகவும் அவரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் கூறியிருந்தார். காதலியின் புகைப்படத்தையும் வெளியிட்டு இருந்தார்.

இந்த நிலையில் ராகுல் ரவி-லட்சுமி நாயர் திருமணம் கேரள மாநிலம் பெரும்பாவூரில் நடந்தது. கொரோனா விதிமுறைகளால் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே திருமணத்தில் கலந்து கொண்டனர்.

actor rahul ravi, serial actor rahul ravi, ராகுல் ரவி, சன் டிவி, நந்தினி சீரியல் ஹீரோ, sun tv nandhini serial hero, rahul ravi soon will get marriage, rahul ravi released his fiance photo, tamil viral news

பாப்ரி கோஷ்

நாயகி, பாண்டவர் இல்லம், பூவே உனக்காக, சித்தி 2, மகராசி உள்ளிட்ட தமிழ் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து இருக்கிறார். பாப்ரி கோசும், தொழில் அதிபர் ஒருவரும் காதலித்து வருவதாக ஏற்கனவே பல செய்திகள் வெளியாகின. இதனை அவர் மறுக்கவில்லை. இந்த நிலையில் காதலரை பாப்ரி கோஷ் ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தில் இருவரது குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்டனர்.

நவீன்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘தேன்மொழி பி.ஏ’ , ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ உள்ளிட்ட சீரியல்களில் நடித்து புகழ்பெற்ற நவீன் வெற்றி சமீபத்தில் தனது திருமணத்தை சத்தமில்லாமல் நடத்தி முடித்துள்ளார். இத்திருமணத்தில் விஜய் டிவி பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர்.

வைஷ்ணவி – சாய் விக்னேஷ்

சஞ்சீவ் – ப்ரியங்கா முதன்மை கதாபாத்திரம் ஏற்று நடித்திருக்கும் ‘காற்றின் மொழி’ தொடரில் ரோஸி என்ற கேரக்டரில் நடிப்பவர்தான் வைஷ்ணவி ராஜசேகர்.நடிகை வைஷ்ணவி ராஜசேகருக்கும் அவரது காதலர் சாய் விக்னேஷ்வருக்கும் கடந்த செப்டம்பர் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

விஜித்

சீரியல் நடிகர் விஜித் ருத்ரனுக்கு ஊரடங்கு காலத்தில் திருமணம் நடைபெற்றுள்ளது.சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஒன்று ரன். கிருஷ்ணா – சாயா சிங் உள்ளிட்டோர் நடித்திருக்கும் இத்தொடரில் விஜித் ருத்ரன் வில்லனாக நடித்திருந்தார்.

உஷா சாய் – பிரகாஷ்

உஷா சாய்க்கும் பிரகாஷூக்கும் கடந்த செப்டம்பர் மாதத்தில் திருமணம் நடைபெற்றது தெய்வமகள், அழகிய தமிழ் மகள், சக்தி உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலமானவர் உஷா சாய்.

சைத்ரா ரெட்டி;

விஜய் டிவியின் கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் நடிகையாக அறிமுகமானவர் சைத்ரா ரெட்டி‘யாரடி நீ மோகினி’ சீரியலில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார் சைத்ரா ரெட்டி.தற்போது சைத்ரா ரெட்டிக்கும் ராகேஷ் சமலாவுக்கும் திருமணம் நடைபெற்றது.

பரதநாயுடு – பரத்

பரதாநாயுடுவுக்கும் பரத் என்பவருக்கும் திருமணம் நடந்திருப்பதாக சீரியல் நடிகை இந்து ரவிச்சந்திரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார்.

ஸ்பூர்த்தி கவுடா :

கல்யாண வீடு சீரியலில் நடித்திருந்த நடிகை ஸ்பூர்த்தி கவுடாவுக்கு திருமணம் நடைபெற்றது.கடந்த 2018-ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் ‘கல்யாண வீடு’ தொடரில் இயக்குநர் திருமுருகன், கோபி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக சூர்யா கதிரேசன் கேரக்டரில் நடித்திருந்த ஸ்பூர்த்தி கவுடா, தனக்கு திருமணமாக இருப்பதால் தொடரிலிருந்து விலகுவதாக கடந்த ஜூலை மாதத்தில் தெரிவித்திருந்தார்.

கதிர்

பிரபலமான சீரியலான செம்பருத்தியில் அகிலாண்டேஸ்வரியின் இளைய மகன் அருண் என்ற வேடத்தில் கதிர் நடித்தார். இப்போது அவரின் திருமண படங்கள் வைரலாகின. நடிகரின் திருமணத்தில் கலந்து கொண்ட நடிகை லிஷா, தம்பதியினரின் படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தனர்.

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Serial actor raghul wife serial actress wedding 202p rewind 2020

Next Story
குக்கரில் உதிரியாக பூப்போல சாதம்: உலை வடி சோறு பக்குவத்தில் சமைக்கும் ரகசியம்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com