Advertisment

'தாய்மை' பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும்தான் - கர்ப்ப காலத்திற்கான நீலிமா ராணி டிப்ஸ்!

Serial Actress Neelima Rani Viral Youtube Video Tamil News சந்தோஷமான நினைவுகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள். உங்களால் முடிந்த சர்ப்ரைஸ்களை அவர்களுக்குக் கொடுக்க முயற்சி செய்யுங்கள்.

author-image
WebDesk
New Update
Serial Actress Neelima Rani Viral Youtube Video Tamil News

Serial Actress Neelima Rani Viral Youtube Video Tamil News

Serial Actress Neelima Rani Viral Youtube Video Tamil News : மனைவி கர்ப்பமாக இருக்கும்போது, கணவர் எப்படியெல்லாம் தன் மனைவியைப் பார்த்துக்கொள்ளவேண்டும் என்று விரிவாகப் பேசி தன்னுடைய யூடியூப் பக்கத்தில் அப்லோட் செய்திருக்கிறார் சின்னத்திரை குயின் நீலிமா ராணி.

Advertisment

"ஏற்கெனவே பெண்கள் கிழக்கு திசை என்றால் ஆண்கள் மேற்கு திசையில் பயணிப்பார்கள் என்கிற எண்ணம் உண்டு. அதிலும், கர்ப்பகாலத்தில் ஏராளமான வாக்குவாதங்கள் வரக்கூடும். பெண்கள் அதிலும் கர்ப்பிணி பெண்கள் பற்றிப் புரிந்துகொள்வது ஆண்களின் கடமையும் கூட. அதைப்பற்றித்தான் இந்த வீடியோவில் பார்க்கப்போகிறோம்" என்று தொடங்கிய காணொளியில் ஏராளமான உபயோக டிப்ஸை பகிர்ந்துகொண்டார்.

publive-image

"கர்ப்பம் தரித்த பெண்கள் எதிர்கொள்ளும் முதல் பெரிய விஷயம் மூட் சுவிங்ஸ். ஹார்மோன், ஹீமோகுளோபின் உள்ளிட்டவற்றின் மாற்றங்கள்தான், பெண்களுக்கான இந்த மூட் சுவிங்ஸ் காரணங்கள். அதனால், மிகச் சிறிய விஷயங்களைக்கூடப் பெரிதாகப் பார்க்கக்கூடும் எண்ணங்கள் தோன்றும். திடீரென அழுவது, மிகவும் மகிழ்ச்சியாக இருப்பது, கோபப்படுவது என பல்வேறு விதமான உணர்வுகள் தோன்றும். இதனை எவ்வளவுதான் பெண்கள் கட்டுப்படுத்த நினைத்தாலும், அது அவ்வளவு சீக்கிரம் சரி செய்யமுடியாது.

இதுபோன்ற சமயத்தில் அவ்வப்போது மனைவியின் கைகளைப் பற்றிக்கொண்டு இருப்பது அவர்களுக்கு மன அமைதியைக் கொடுக்கும். இதுபோன்ற நேரங்களில் அரவணைப்பு அவசியம். அதுமட்டுமின்றி, ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வதும் அவசியம். ஏராளமான பழ வகைகள், காய்கறிகளை போதுமான அளவு கையில் வைத்துக்கொள்வது முக்கியம்.

ஒவ்வொரு முறை மருத்துவரைச் சென்று பார்க்கும்போதும், மனைவியுடன் சேர்ந்து மருத்துவமனைக்குச் செல்வதை வழக்கமாக்கிக்கொள்ளுங்கள். சந்தோஷமான நினைவுகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள். உங்களால் முடிந்த சர்ப்ரைஸ்களை அவர்களுக்குக் கொடுக்க முயற்சி செய்யுங்கள். உங்களால் 24 மணிநேரமும் கூடவே இருக்க முடியாது. ஆனால், உங்கள் மனைவிக்குப் பிடித்த நபரை அவருடன் பயணிக்கச் செய்யலாம்.

பிறந்தநாள், திருமணம் நாள் உள்ளிட்ட ஸ்பெஷல் தினங்களை ஆஷ்ரமம் போன்ற பொது சேவையோடு செய்யும்போது இன்னும் பாசிடிவிடி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. தாய்மை என்பது பெண்களுக்கு மட்டும் இல்லை, ஆண்களுக்கும்தான் என்பதை நிச்சயம் மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

உங்கள் அலுவலக டென்ஷனை இந்த நேரத்தில் உங்கள் மனைவியிடம் காட்டாமல் இருக்க முயற்சி செய்யுங்கள். அதேபோன்று, வீட்டில் ஏற்கெனவே முதல் குழந்தை இருந்து, இரண்டாம் முறை கர்ப்பம் தரித்திருந்தால், முதல் குழந்தையுடன் அதிக நேரம் ஆண்கள் செலவிடுவது மனைவியின் ஸ்ட்ரெஸ்ஸை குறைக்கும்" என்று இப்படி பல டிப்ஸ்களை ஆண்களுக்கு கொடுத்து காணொளியை நிறைவு செய்தார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Neelima Rani
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment