90’ஸ் கிட்ஸ் மறக்க முடியாத வில்லி: தேவி பிரியா நிஜத்துல சாந்தமானவங்களாம்!

பெரும்பாலும் நெகட்டிவ் வேடங்களில் தான் நடித்துள்ளார் தேவி பிரியா.

Devipriya serial actress
Devipriya serial actress

Serial Artist Devi Priya : 90’ஸ் கிட்ஸ் அனைவருக்குமே தேவிப்ரியாவை நிச்சயம் நினைவிருக்கும். காரணம், சீரியல்கள் மக்களை கொஞ்சம் கொஞ்சமாக ஆட்கொண்டிருந்த சமயத்தில் பல சீரியல்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருந்தார். வில்லியாக நடிக்கும் போது, கோபத்தையும், வெறுப்பையும் இயல்பாக தனது கண்களில் கொண்டு வந்து மிரட்டுவார்.

Devipriya serial actress
தேவிப்ரியா

சன் டி.வி-யில் நடிகை பானு பிரியா நடிப்பில் ஒளிபரப்பான, ‘சக்தி’யில் தான் தேவிப்ரியா அறிமுகமானார் தேவி பிரியா. முதல் சீரியலிலேயே தனது திறமையை நன்கு வெளிப்படுத்தியதால், அவருக்கு மேலும் பல வாய்ப்புகள் வந்தன.  இருப்பினும் ‘பாரதிராஜா’ சீரியலில் நடித்து இன்னும் பிரபலமானார். பெண் போலீஸ் அதிகாரியாக நடித்து பலரின் பாராட்டுகளையும் பெற்றார். குழந்தைப் பருவத்திலிருந்தே போலீஸாக வேண்டும் என விரும்பியதன் பிரதிபலிப்பு தான், என்னை சிறப்பாக செயல்பட வைத்தது என நேர்க்காணல்களில் குறிப்பிட்டிருந்தார்.

Devipriya serial actress
தேவிப்ரியா

பெரும்பாலும் நெகட்டிவ் வேடங்களில் தான் நடித்துள்ளார் தேவி பிரியா. அதோடு, விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்ட பல்வேறு நடன நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார். பல்வேறு தொலைக்காட்சிகளில் 30-க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்துள்ளார். இயக்குநர் கங்கை அமரனின் “ஊரு விட்டு ஊரு வந்து” திரைப்படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்து, வாலி, வல்லமை தாராயோ, மஞ்சப்பை, யாமிருக்க பயமே உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அதோடு சினிமாவில் பல சப்போர்ட்டிங் கதாபாத்திரங்களுக்கு பின்னணி குரலும் கொடுத்துள்ளார்.

Devipriya serial actress
தேவிப்ரியா

ஷூட்டிங் இல்லாத நாட்களில் வித விதமாக சமைப்பது தான் தேவி பிரியாவின் பொழுது போக்கு. வெளியில் போய் சாப்பிடுவது என்றால், ராஜஸ்தானி உணவு வகைகளை ஒரு கை பார்த்து விடுவாராம்.

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Serial artist devi priya lifestyle images

Next Story
வறண்ட கூந்தலுக்கு கடுகு எண்ணெய்!dry,hair,bring,oil, mustard, வறண்ட,கூந்தல்,கடுகு,எண்ணெய், how to prepare mustard oil , Mustard oil hair benefits
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com