Advertisment

Shimla: பனி மூடிய மலைகள், பிரமிக்க வைக்கும் ஏரிகள்.. குளுகுளு சிம்லாவுக்கு ஒரு டூர் போலாமா

Here’s a list of top 5 things that you can do in Shimla | உங்கள் குடும்பத்துடன் சிம்லாவில் நீங்கள் செய்யக்கூடிய சிறந்த 5 விஷயங்களின் பட்டியல் இங்கே. சிம்லா இந்தியாவின் பிரபலமான குடும்ப விடுமுறை சுற்றுலா தலங்களில் ஒன்றாகும்.

author-image
abhisudha
புதுப்பிக்கப்பட்டது
New Update
Shimla

Shimla

Himachal tourism | 5 places to visit in Shimla | ஹிமாச்சல பிரதேசத்தின் தலைநகரான சிம்லா, கடல் மட்டத்திலிருந்து சுமார் 2,400 மீட்டர் உயரத்தில் மலைப்பிரதேசத்தில் அமைந்த ஒரு புகழ்பெற்ற சுற்றுலா தலமாகும். பனி மூடிய மலைகள், பிரமிக்க வைக்கும் ஏரிகள்,சுற்றிலும் அடர்ந்த காடுகளுடன், அழகான சுற்றுச்சூழல் கொண்ட ஊர். இங்கு டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும். இந்த காலத்தில் உலகில் பல நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வந்து செல்வார்கள்.

Advertisment

சிம்லா செல்பவர்கள் அவசியம் பார்க்க வேண்டிய பல இடங்கள் உள்ளது. அவற்றில் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட அழகிய கட்டடங்கள் முக்கியமானது.

ராஷ்டிரபதி நிவாஸ் என்றழைக்கப்படும் முன்னாள் வைசிராய் மாளிகை, ஆக்லாந்து இல்லம், கோர்டான் கோட்டை, பீட்டர் ஹாப் இல்லம், கெயிட்டி திரையரங்கம் மற்றும் கிறிஸ்து சர்ச் முதலியவை கலை அம்சங்கள் நிறைந்த கட்டடங்கள் ஆகும்.

கல்கா – சிம்லா ரயில்

எல்லோரும் ரயிலில் பலமுறை சென்றிருப்போம். ஆனால் கல்கா – சிம்லா ரயிலில் செல்வதென்பது ஒரு மறக்க முடியாத அனுபவமாக இருக்கும். இந்த ரயில் பாதை 1906-ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் அமைக்கப்பட்டது. பல வளைவுகள், 806-க்கும் அதிகமான பாலங்கள், 103-குகைகள் கொண்ட நீண்ட தூர குறுகிய ரயில் பாதை. பனி மேகங்கள் சூழ இந்த ரயிலில் பயணிப்பது என்பது மிக ரம்மியமாக இருக்கும்.

அனுமார் கோயில்

ஜக்கூ மலை உச்சியில் அனுமார் கோயில் உள்ளது. இங்கு 108 அடி உயர அனுமார் சிலை உள்ளது. 8,100 அடி உயர மலை மீது அமைந்துள்ள உயரமான சிலை. தாரா பர்வத் மலையின் உச்சியில் உள்ள நட்சத்திர தேவதைகளுக்கான தாரா தேவி கோயில் அமைந்துள்ளது.

இந்தக் கோயில் சுமார் 250 ஆண்டுகள் பழமையானது என்று கூறப்படுகிறது. துர்கா தேவியின் ஒன்பது சகோதரிகளில் ஒருவரான திபெத்திய புத்த மத தெய்வமான தாரா இந்த இடத்தில் ஆளும் தெய்வம்.

ஹிமாச்சல பிரதேசத்தின் கலை மற்றும் பண்பாட்டை அறிய உதவும் அரசு அருங்காட்சியகம், சம்மர்ஹில்ஸ், டாட்டா பாணி எனப்படும் கந்தக வெந்நீர் ஊற்று முதலியவை சுற்றுலாப் பயணிகள் செல்ல வேண்டிய இடங்கள்.

இங்குள்ள ரேணுகா ஏரியில் படகு சவாரியும் உண்டு.

publive-image

சிம்லா ஸ்டேட் மியூசியம்

சிம்லாவில் அவசியம் பார்க்க வேண்டிய இடங்களில் சிம்லா ஸ்டேட் மியூசியம் ஒன்று. இது மவுண்ட் ப்ளெசண்ட் மீது அமைந்துள்ளது. இதன் பிரமிக்க வைக்கும் பிரிட்டிஷ் கட்டிடக்கலை காண்போரை வசீகரிக்கும். இங்கு பல்வேறு பழங்கால பொருட்கள், கலைப் படைப்புகள், சிற்பங்கள், கைவினைப் பொருட்கள் மற்றும் பலவற்றை அவர்கள் நீண்ட காலமாகப் பாதுகாத்து வந்த அற்புதமான சேகரிப்புகள் உள்ளன. இது சந்தேகத்திற்கு இடமின்றி சிம்லாவின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும்.

சாட்விக் நீர்வீழ்ச்சி

க்ளென் காடுகளுக்குள் அமைந்துள்ள சாட்விக் நீர்வீழ்ச்சி, சிம்லாவின் இயற்கை எழில் மிகுந்த இடங்களில் ஒன்றாகும். இந்த நீர்வீழ்ச்சி 86 மீட்டர் உயரத்தில் இருந்து பரந்த பள்ளத்தாக்கில் இறங்குகிறது. தேவதாரு மற்றும் பைன் மரங்களின் பசுமையான கம்பளத்தால் சூழப்பட்டிருக்கும் சாட்விக் வசீகரமான தோற்றத்துடன் உங்களை வரவேற்கும்.  

மால் ரோட்

பல கஃபேக்கள், உணவகங்கள், ஷோரூம்கள், பல்பொருள் அங்காடிகள் மற்றும் நினைவுப் பொருட்கள் மற்றும் அரிய கைவினைப் பொருள் கடைகள் இங்கு அமைந்துள்ளன. நகைகள், இலக்கியங்கள் மற்றும் செதுக்கப்பட்ட மரப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை நீங்கள் இங்கு வாங்கலாம். காளி பாரி கோயில், டவுன் ஹால், கெய்ட்டி தியேட்டர் மற்றும் ஸ்கண்டல் பாயிண்ட் ஆகியவை நீங்கள் பார்வையிடக்கூடிய அருகிலுள்ள சில இடங்கள்.

சிம்லாவிற்குச் சென்று ரயில் பயணத்தையும், இயற்கை அழகையும் ரசிக்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும். மிஸ் பண்ணிராதீங்க நண்பர்களே!

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment