Advertisment

ஷிவின் இன்ஸ்டா வீடியோ: இந்த இடம் எங்க இருக்கு தெரியுமா?

பச்சை பசேல் மலை, அழகான ஆறுடன் இருக்கும் இந்த இடம், தோவாளையிலிருந்து 10 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

author-image
abhisudha
New Update
Shivin Ganesan

Shivin Ganesan

விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம், ஷிவின் கணேசன் தமிழக மக்கள் மத்தியில் பிரபலமானார்.

Advertisment

மாடல் மற்றும் ஐடி ஊழியரான ஷிவின், மிஸ் டிரான்ஸ் ஸ்டார் இந்தியா 2021 பட்டத்தை வென்றவர். ஸ்பெயினில் நடைபெற்ற மிஸ் டிரான்ஸ் ஸ்டார் இன்டர்நேஷனல் 2022 போட்டியில் இந்தியாவின் சார்பில் பங்கேற்றார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் தமிழக மக்களின் மனங்களை வென்றார்.

சமீபத்தில் ஷிவின் பகிர்ந்த இன்ஸ்டா வீடியோ பலரையும் கவர்ந்தது. அதில் ஷிவின், ஷூட்டிங் ஸ்பாட்டில், அலைபாயுதே படத்தில் வரும் ’எவனோ ஒருவன் வாசிக்கிறான்’ பாடலுக்கு ஷாலினி போல ஃபீல் செய்கிறார்.

தெள்ளாந்தி கிராமத்தில் தான் இந்த ஷூட்டிங் எடுக்கப்பட்டுள்ளது

பச்சை பசேல் மலை, அழகான ஆறுடன் இருக்கும் இந்த இடம், கன்னியாகுமரி மாவட்டத்தின், தோவாளையிலிருந்து 10 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

publive-image

Photo By Padmanabhan Namasivayaham

அடிக்கடி பெய்யும் சாரல் மழையுடன், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பசுமைப் போர்வை போர்த்தியது போல இருக்கும் இந்த கிராமம் பெரிதாக அறியப்படாததால், பிரபலமான சுற்றுலாத்தலமாக இல்லை.

நீங்கள் அடுத்தமுறை கன்னியாகுமரிக்கு சுற்றுலா சென்றால் தவறாமல் இந்த இயற்கை எழிலை தரிசித்து வாருங்கள்!

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment