scorecardresearch

சுய இன்பம் நல்லதா? கெட்டதா? மருத்துவர் விளக்கம்

பாலியல் ரீதியாக சுய இன்பம் கொள்வது உடலுக்கு நல்லதா என சித்த மருத்துவர் விளக்குகிறார்.

watching porn frequently damage your sexual health
ஆபாச காணொலிகள் தொடர்பான பாலியல் கற்பனைக்கும் நிஜத்திற்கும் வேறுபாடு உள்ளது.

சுயஇன்பத்தை பற்றி யாரும் பொதுவாக வெளிப்படையாக பேச மாட்டார்கள். சுய இன்பம் என்பது நமக்கு நாமே உணர்வு கிளர்ச்சியை ஏற்படுத்தி சுகம் காண்பது தான். ஆண்களோ, பெண்களோ இருவருமே சுயஇன்பத்தில் ஈடுபடுகின்றனர். சுயஇன்பம் காண இவர்களுக்கு செக்ஸ் பார்ட்னர் யாரும் தேவையில்லை.

இந்த சுயஇன்பம் நபருக்கு நபர் வேறுபடுகிறது. சிலருக்கு வாரம் ஒருமுறை, சிலருக்கு தினமும், சிலருக்கு ஒரே நாளிலேயே பல முறை என வேறுபடும். ஒரு சிலர் தனது செக்ஸ் வேட்கைக்காகவும், வேறு சிலர் பல காரணங்களுக்காவும் கூட சுய இன்ப பழக்கத்திற்கு அடிமையாகி விடுகிறார்கள்.

சுய இன்பம் நல்லதா கெட்டதா? இதை பற்றி பல ஆய்வுகள் நடந்துள்ளன. சுய இன்பத்தால் ஏற்படும் நன்மைகளை பற்றி இப்போது பார்ப்போம்.

மருத்துவ ரீதியாகப் பார்த்தால், சுயஇன்பம் இயற்கையானது என்றாலும், கலாசார ரீதியாகவும், பெரும்பாலான மதங்களிலும், அது செய்யக்கூடாத ஒன்றாக பார்க்கப்படுகிறது. சுயஇன்பத்தைப் பற்றி 2011ல் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, சுயஇன்பத்தை செய்பவர்கள் மிகுந்த குற்ற உணர்ச்சி, அவமானம் மற்றும் மன அழுத்தத்திற்கு ஆளாவதாக ஆய்வு கூறுகிறது.

பொதுவாக வாரத்திற்கு 4 நாட்கள், மாதத்திற்கு 20 முறைக்கும் மேல் பலர் சுய இன்பத்தை அனுபவித்து வருவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இதனால் பெரும்பாலான ஆண்கள் மனதில் தொடர்ந்து சுய இன்பம் செய்வதால், ஏதேனும் பிரச்சனை வருமா? என்ற கேள்வியையும் கேட்கின்றனர்.

அதுமட்டுமின்றி இது திருமணமான பின்னர், சிக்கல்களை ஏற்படுத்துமா? என்ற அச்சமும் பலருக்கு உள்ளது. எதுவுமே அளவோடு இருந்து கொண்டால் நல்லது தான், அளவுக்கு மீறினால் தான் பிரச்னை.

மரு‌த்துவ‌ர் முத்துக்குமார்
சித்த மருத்துவ நிபுணர் மற்றும் ஆராய்ச்சியாளர்
9344186480

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Siddha doctor explains whether sexual self pleasure is good for the body