Advertisment

மை டியர் பேபி! சித்து, ஸ்ரேயா காஷ்மீரி டைரீஸ்

ஸ்ரேயா பிறந்தநாளை முன்னிட்டு சித்துவும், ஸ்ரேயாவும் காஷ்மீருக்கு சுற்றுலா சென்றனர். அப்போது எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சித்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

author-image
abhisudha
New Update
Sidhu Sid and Shreya Anchan Kashmir diaries

Sidhu Sid and Shreya Anchan Kashmir diaries

ஸ்ரேயா அஞ்சன், சித்து சித் இருவரும் சீரியலில் ரீல் ஜோடியாக நடித்து, இன்று ரியல் ஜோடியாகளாக உள்ளனர். கலர்ஸ் தமிழ் டிவியில் ஒளிபரப்பான ‘திருமணம்’ சீரியலில் சித்து சித் மற்றும் ஸ்ரேயா அஞ்சன் இருவரும் ஜோடியாக நடித்தனர். இந்த சீரியலில் இருவருக்கும் இருந்த கெமிஸ்ட்ரி, ரசிகர்களைக் பெரிதும் கவர்ந்தது.

Advertisment

தற்போது, சித்து விஜய் டிவியில் ராஜா ராணி சீசன் 2 சீரியலில் ஹீரோவாக நடித்து வருகிறார். ஸ்ரேயா, ஜீ தமிழ் டிவியில் ரஜினி சீரியலில் நடிக்கிறார். சித்து, ஸ்ரேயா இருவரும் அடிக்கடி தங்கள் புகைப்படங்கள், வீடியோஸ், ரீல்ஸ்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகின்றனர். கிட்டத்தட்ட 6 லட்சம் பேர் இன்ஸ்டாகிராமில் ஸ்ரேயாவை பின்தொடர்கின்றனர்.

இந்நிலையில் ஸ்ரேயா பிறந்தநாளை முன்னிட்டு சித்துவும், ஸ்ரேயாவும் காஷ்மீருக்கு சுற்றுலா சென்றனர். அப்போது எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த சித்து அதில்,

என் வாழ்க்கைக்கு அர்த்தம் தந்த பெண்ணுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள், என் அன்பான பொண்டாட்டி ❤ என் வாழ்க்கையில் வந்ததற்கு மற்றும் அதை வண்ணமயமாக்கியதற்கு நன்றி. பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜான். மை டியர் பேபி நான் உன்னை என்றென்றும் நேசிக்கிறேன் என்று ஸ்மைலி முத்தங்களுடன் பதிவிட்டுள்ளார்.

அதேபோல ஸ்ரேயாவும், சித்து உடன் எடுத்த படங்களை பகிர்ந்து, சில நேரங்களில் ஒருவர் உங்கள் வாழ்க்கையில் எதிர்பாராத விதமாக வந்து, உங்கள் இதயத்தை ஆச்சரியத்தில் ஆழ்த்தி, உங்கள் வாழ்க்கையை என்றென்றும் மாற்றுவார்

அந்த நபராக இருப்பதற்கு நன்றி

நீ சொர்க்கத்திலிருந்து வந்த ஒரு சிறப்பு பரிசு

நான் உன்னை எல்லையில்லாமல் நேசிக்கிறேன் ♥

அழகான மறக்க முடியாத பிறந்தநாள் நினைவுகளுக்கு நன்றி என்று அதில் பதிவிட்டுள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள் ஸ்ரேயாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.

சித்து, ஸ்ரேயா காஷ்மீரில் எடுத்த போட்டோஸ்

publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment