Advertisment

Tamil New Year 2022: செல்வம் செழிக்க தமிழ் புத்தாண்டு அன்னைக்கு இதை மட்டும் மறக்காம பண்ணுங்க!

Tamil New Year on April 14: புராணங்களின்படி, இந்த நாளில், பிரம்மா தனது உலகத்தை உருவாக்கத் தொடங்கினார் என்று நம்பப்படுகிறது.

author-image
WebDesk
New Update
Tamil New Year 2022

தமிழ் புத்தாண்டு

ஏப்ரல் 14 நெருங்கிவிட்டது. தமிழ் புத்தாண்டை வரவேற்க மக்கள் தயாராகி வருகின்றனர். தமிழ் சூரிய நாட்காட்டியின் முதல் மாதமான சித்திரையில் தமிழ்ப் புத்தாண்டு தொடங்குகிறது.

Advertisment

ஏப்ரல் 14 அன்று, உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் புத்தாண்டு கொண்டாடும் போது, ​​இந்தியா முழுவதும் உள்ள பல சமூகங்கள் தங்கள் பாரம்பரிய புத்தாண்டை அதே நாளில் கொண்டாடுகிறார்கள் - இது கேரளாவில் விஷு, அசாமில் பிஹு, பஞ்சாபில் பைஷாகி மற்றும் மேற்கு வங்காளத்தில் போஹெலா போயிஷாக் எனும் பெயரில் கொண்டாடப்படுகிறது.

மணிப்பூர், திரிபுரா, ஒடிசா, பீகார், உத்தரபிரதேசம், ஹிமாச்சல பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களும் தங்கள் புத்தாண்டு கொண்டாட்டங்களை ஒரே நாளில் கொண்டாடுகின்றனர்.

தமிழ்ப் புத்தாண்டு சடங்குகள்

தமிழ்ப் புத்தாண்டு அன்று, மக்கள் அதிகாலையில் எழுந்து குளித்து, வாசல் தெளித்து, வண்ண கோலமிட்டு, விளக்கேற்றி, புத்தாடை அணிந்து அருகில் உள்ள கோயில்களுக்குச் சென்று பிரார்த்தனைகளில் பங்கேற்று, அன்றைய நாளைத் தொடங்குவார்கள். வீட்டிற்குள் நேர்மறையான எண்ணங்களை வரவேற்கும் வகையில், நுழைவாயில்களில், மாவிலை தோரணம், வண்ண அரிசி மாவைப் பயன்படுத்தி 'கோலம்' போடுவார்கள். இந்நாளில் மக்கள் ஒருவருக்கொருவர் "புதுவாண்டு வாழ்த்துகள்" கூறி மகிழ்வர்.

புத்தாண்டு எப்படி கொண்டாடப்படுகிறது?

தமிழர்கள் சௌரமணா என்ற சூரிய நாட்காட்டியைப் பின்பற்றுகிறார்கள். இந்த நாட்காட்டியில், சூரியனின் இயக்கத்திற்கு ஏற்ப ஆண்டின் நேரம் கணக்கிடப்படுகிறது.

புராணங்களின்படி, இந்திரன் தனது வெள்ளை ரதத்தில் பூமிக்கு விஜயம் செய்து பாலில் குளித்து பூமியின் ஈர்ப்பு விசையை உடைத்ததாக கூறப்படுகிறது. இந்த நாளில், பிரம்மா தனது உலகத்தை உருவாக்கத் தொடங்கினார் என்றும் நம்பப்படுகிறது.

இந்த நாளில், மக்கள் ஒரு தட்டு தயார் செய்கிறார்கள். அதில் புதிய பழங்கள் மற்றும் காய்கறிகள், வேப்பம் பூக்கள் மற்றும் இலைகள், புதிய ஆடைகள், தங்கம் அல்லது வெள்ளி நகைகள் மற்றும் கரன்சி நோட்டுகள் அல்லது நாணயங்கள் வைத்து, இந்த தட்டு பூஜை அறையில்  கண்ணாடி முன் வைக்கப்படும்.

மக்கள் விழித்தவுடன் கண்ணாடியில் தட்டின் பிரதிபலிப்பைப் பார்ப்பார்கள். இது நிறைந்த செல்வம் மற்றும் ஆரோக்கியத்தைக் கொடுக்கும் என்று நம்பப்படுகிறது.

குளித்து பிரார்த்தனை முடித்த பிறகு, துருவிய மாங்காய், வெல்லம், உப்பு, சிவப்பு மிளகாய், வேப்ப இலைகள், ஒரு சிட்டிகை மஞ்சள் மற்றும் எண்ணெய் ஆகியவற்றால் செய்யப்பட்ட விருந்து குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் வழங்கப்படும்.

ஒவ்வொரு நாளும் மக்கள் எதிர்கொள்ளும் பல உணர்ச்சிகளை பிரதிபலிக்கும் வகையில் இந்த தயாரிப்பு, புத்தாண்டின் மிக முக்கியமான பகுதிகளில் ஒன்றாகக் குறிக்கப்படுகிறது. நாளின் பிற்பகுதியில் வடை, சாம்பார், சாதம், பாயாசம், அப்பளம், காய்கறி குழம்பு, புதிய மாங்காய் ஊறுகாய், தயிர் போன்ற உணவுகளும் அடங்கும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment