Advertisment

கற்றாழை, தேங்காய் எண்ணெய்.. முடி உதிர்வுக்கு இந்த ஹேர் மாஸ்க் டிரை பண்ணுங்க!

நீங்கள் தொடர்ந்து முடி உதிர்வதை அனுபவித்துக் கொண்டிருந்தால், வீட்டில் நீங்களே தயார் செய்யக்கூடிய இந்த ஹேர் மாஸ்க்கைப் பயன்படுத்துங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Hair mask

Simple DIY Hair mask for hair growth

மன அழுத்தம் மற்றும் மாசுபாடு ஆகியவை கூந்தலுக்கு அழிவை ஏற்படுத்துகின்றன, இதனால் நம் தலைமுடி உயிரற்றதாகவும், மெல்லியதாகவும், மந்தமாகவும் இருக்கிறது.

Advertisment

நீங்கள் தொடர்ந்து முடி உதிர்வதை அனுபவித்துக் கொண்டிருந்தால், வீட்டில் நீங்களே தயார் செய்யக்கூடிய இந்த  ஹேர் மாஸ்க்கைப் பயன்படுத்துங்கள்.

முடி உதிர்வுக்கு’ வெங்காயச் சாறு ஒரு சிறந்த தீர்வாகக் கருதப்பட்டாலும், கற்றாழை மற்றும் தேங்காய் எண்ணெயுடன் இணைந்தால், அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

தேவையான பொருட்கள்

தேங்காய் எண்ணெய்

வெங்காய சாறு

புதிய கற்றாழை ஜெல்

செய்முறை

*ஒரு கடாயில், தேங்காய் எண்ணெய், கற்றாழை ஜெல்லை’ நன்கு கலந்து ஐந்து நிமிடம் கொதிக்க வைக்கவும்.

*பிறகு 2 ஸ்பூன் கலவையை எடுத்து அதில் நான்கு ஸ்பூன் வெங்காய சாறு சேர்க்கவும்.

*தலைக்கு குளிப்பதற்கு 1 மணி நேரத்துக்கு முன், இந்த கலவையை உச்சந்தலையில் தடவி, உங்கள் விரல் நுனியில் லேசாக மசாஜ் செய்யவும்.

என்ன பயன்கள்?

*தேங்காய் எண்ணெய் முடி வளர்ச்சிக்கு உதவுவதாக அறியப்படுகிறது. எண்ணெய் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது.

*கற்றாழை ஜெல்லில் அமினோ அமிலங்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. தேங்காய் எண்ணெயுடன், ஜெல்லைச் சூடாக்கும் போது, ​​எண்ணெய்யும் அந்த குணங்களைப் பெறுகிறது.

*வெங்காய சாற்றில் பாஸ்பரஸ், கால்சியம், இரும்பு மற்றும் கந்தகம் உள்ளது, இவை முடி பிரச்சனைகளை சமாளிக்க பயனுள்ளதாக கருதப்படுகிறது.

சிறந்த முடிவுகளுக்கு, மாதத்துக்கு இருமுறை இந்த ஹேர் மாஸ்கை கண்டிப்பாக டிரை பண்ணுங்க!

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment