Advertisment

பழ ஈக்களை அகற்ற நீங்களே வீட்டில் செய்யக்கூடிய எளிதான வழிகள் இதோ!

தொல்லைதரும் ஈக்களை அகற்றுவதற்கான இயற்கையான மற்றும் நீங்களே செய்யக்கூடிய குறிப்புகள் மற்றும் தந்திரங்களைப் பற்றி இது பேசுகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
fruit-flies

Simple DIY tips to get rid of fruit flies in the house

நீங்கள் ஒரு தூய்மை விரும்பியா? ஆம் எனில், இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். பழங்கள் மற்றும் உணவுகளில் அடிக்கடி சிக்கி, மனித உடலுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய அந்த சலசலப்பான மற்றும் தொல்லைதரும் ஈக்களை அகற்றுவதற்கான இயற்கையான மற்றும் நீங்களே செய்யக்கூடிய குறிப்புகள் மற்றும் தந்திரங்களைப் பற்றி இது பேசுகிறது. இந்த எளிய மற்றும் பயனுள்ள ஹேக்குகளை முயற்சிக்கவும், அவை அந்த ஈக்களை நிரந்தரமாக அகற்ற உதவும்.

Advertisment

பழைய ஒயின் அல்லது பீர்

வினிகர் எப்படி ஈக்கள் வராமல் இருக்க உதவுகிறது, அதேபோல் பழைய ஒயின் அல்லது பீர் போன்றவற்றைப் பயன்படுத்தி அவற்றைத் தடுக்கலாம். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம், பழங்கள் அருகே பாட்டிலை திறந்து வைத்தால் ஈக்கள் போய்விடும். இதற்காக நீங்கள் பழைய பீர் பயன்படுத்தலாம்.

வினிகர் மற்றும் டிஷ் சோப்பு

வினிகர் மற்றும் டிஷ் சோப்பின் கரைசலை உருவாக்கி, பழங்களின் கூடைக்கு அருகில் அதை மூடாமல் விடவும். நிபுணர்களின் கூற்றுப்படி, சோப்பு’ வினிகரின் மேற்பரப்பு பதற்றத்தை குறைக்கிறது. அதனால் ஈக்கள் அதில் மூழ்கிவிடும்.

காகித கோன், பழங்கள் மற்றும் வினிகர்

இதை செய்ய, நீங்கள் ஒரு கண்ணாடி குடுவையில் சிறிது வினிகர் மற்றும் சில பழுத்த பழங்களை வைக்க வேண்டும். அடுத்து, மேலே ஒரு காகித கோன் வைத்து, அதன் நுனிப்பகுதி லேசாக திறந்து இருக்கும்படி வைக்கவும். பழங்களில் இருந்து ஈக்கள் வராமல் இருக்க இது மந்திர வேலை செய்கிறது.

ஆப்பிள் சைடர் வினிகர் மற்றும் பிளாஸ்டிக் தாள்

ஒரு கண்ணாடி குடுவையில் ஆப்பிள் சைடர் வினிகரின் ஒரு சிறிய பகுதியை சேர்த்து அதை பிளாஸ்டிக் தாளால் மூடவும். இப்போது, ​​ஒரு டூத்பிக் பயன்படுத்தி ஒரு சில துளைகள் இடவும். இப்போது பழ ஈக்கள் உள்ளே நுழைந்துவிடும். சமையலறையிலிருந்து ஈக்கள் வராமல் இருக்க இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

கற்பூரத்தைப் பயன்படுத்துங்கள்

சமையலறை பகுதியில், குப்பைத் தொட்டியை வைக்கும் இடத்தில், தினமும் கற்பூரம் ஏற்றி வைக்க வேண்டும். கற்பூரம் மற்றும் ரசாயனங்களின் வலுவான நறுமணம் ஈக்களை விரட்ட உதவும்.

வேறு என்ன?

ஈக்கள் மறைந்தவுடன், உணவுப் பொருட்களை சேமிக்கும் இடத்தை சுத்தமாகவும் உலர்வாகவும் வைத்திருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். உணவைத் திறந்து வைக்காதீர்கள் மற்றும் குப்பைப் பெட்டியை அடிக்கடி சுத்தம் செய்து, அதன் உள்ளே கசிவுகள் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

இனிமேல் இதிலுள்ள ஹேக்ஸ் பயன்படுத்தி கொசுக்கள் மற்றும் ஈ தொல்லையிலிருந்து உணவையும், உங்களையும் காப்பாற்றுங்கள்!

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment