தோல் பராமரிப்பு என்று வரும்போது, ரசாயனம் கலந்த பொருட்களைத் தவிர்ப்பது நல்லது, அதற்கு பதிலாக, இயற்கையானதை தேர்வு செய்யுங்கள். சில சமயங்களில் ஃபேஷியல் செய்து கொள்வதற்காகவே நாம் பெரும் தொகையை செலுத்துகிறோம். ஆனால் வீட்டிலேயே பளபளப்பான சருமத்தைப் பெற முடியும் எனில் அதை ஏன் செய்ய வேண்டும்?
ரசாயனம் இல்லாத மேக்-ஓவருக்கு நீங்கள் வீட்டிலேயே செய்யக்கூடிய இயற்கையான ஃபேஸ் பேக் இங்கே உள்ளது. முக்கியமாக, முகப்பருவைக் கையாளும் டீனேஜர்கள் இரசாயனங்கள் நிறைந்த பொருட்களைத் தவிர்த்து, இந்த ஆயுர்வேத தீர்வுகளைப் பயன்படுத்துங்கள்..
ஆன்டி- ஆக்னே ஃபேஸ் மாஸ்க் எப்படி செய்வது?
தேவையான பொருட்கள்
1 தேக்கரண்டி – மஞ்சள்தூள்
1 டீஸ்பூன் – வேப்பம்பூ தூள்
2 தேக்கரண்டி – முல்தானி மிட்டி
½ தேக்கரண்டி – மஞ்சட்டி
3-4 தேக்கரண்டி – பால்
1 தேக்கரண்டி – தண்ணீர்
செய்முறை
அனைத்து பொருட்களையும் சிறிதளவு தண்ணீரில் கலந்து, பேஸ்ட் செய்து உங்கள் முகத்தில் சமமாக தடவவும். பிறகு, 10 நிமிடங்கள் கழித்து, அதை வெதுவெதுப்பான நீரில் நனைத்த துணியால் துடைக்கவும். சிறந்த முடிவுகளுக்கு, வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்தவும்.
இந்த ஃபேஸ் பேக் இயற்கையான பொருட்களை உள்ளடக்கியிருந்தாலும், ஏதேனும் மூலப்பொருள் உங்களுக்கு அலர்ஜி ஏற்படுத்துகிறதா என்பதைச் சரிபார்க்க வேண்டியது அவசியம். எனவே, இதை பயன்படுத்தும் முன் பேட்ச் டெஸ்ட் செய்யுங்கள்.
வாழைப்பழ ஃபேஸ் பேக்
சில பழங்களில் வைட்டமின் மற்றும் பொட்டாசியம் நிறைந்துள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. வாழைப்பழம் சருமத்தை இளமையாகவும், புத்துணர்ச்சியுடனும் மாற்ற உதவுகிறது. மிருதுவான சருமத்திற்கு இந்த ஃபேஸ் பேக்கை முயற்சிக்கவும்.
எப்படி?
வாழைப்பழத்தை மசித்து முகம் மற்றும் கழுத்தில் தடவவும். நீங்கள் முகப்பரு மற்றும் பிக்மென்டேஷன் போன்ற தோல் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டிருந்தால், அதில் சிறிது தேன் சேர்க்கவும். 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவவும்.
அழகான சருமத்திற்கு இந்த ஹோம்மேட் ஃபேஸ் பேக் குறிப்புகளை கண்டிப்பா டிரை பண்ணுங்க.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.