வீட்டு பராமரிப்பில் பெரும் சவாலாக இருப்பது கிட்சனை சரியாக கையாள்வது தான். அந்த வகையில் கிட்சன் பராமரிப்பில் உள்ள சில டிப்ஸ்கள் மற்றும் ட்ரிக்ஸ்களை இந்தப் பதிவில் நாம் பார்க்கலாம்.
தீப்பெட்டியில் இருந்து தீக்குச்சிகளை பற்ற வைக்கும் போது சில நேரங்களில் அவை எரியாது. ஈரப்பதமாக இருப்பதால் அவை சில நேரங்களில் எரிவதில்லை. இந்த நேரத்தில், நாம் முகத்திற்கு பூசும் பௌடரை தீப்பெட்டியின் உட்புறத்திலும், வெளிப்புறத்திலும் சிறிது தேய்த்தால், ஈரப்பதம் போய் விடும்.
வெங்காயத்தையும், உருளை கிழங்கையும் ஒரே இடத்தில் வைக்க கூடாது. இவ்வாறு வைப்பதால், உருளை கிழங்கில் பூஞ்சை வரும். எனவே, அவற்றை தனியாக வைக்க வேண்டும்.
சுவற்றில் ஆணி அடிக்கும் போது துவாரம் சற்று பெரிதாகி விட்டால், ஆணி சரியாக அதில் இருக்காது. அப்போது, சோப்பை சிறிய துண்டாக எடுத்து அந்த துவாரத்தின் உள்ளே வைக்க வேண்டும். இப்போது, துவாரத்தில் ஆணியை வைத்தால் கீழே விழாமல் இருக்கும்.
பிளாஸ்டிக் கவரில் இருந்து எண்ணெய்யை பாட்டிலில் ஊற்றிய பின்னர், அந்த பிளாஸ்டிக் கவரை குப்பையில் போடுவோம். ஆனால், அதற்கு முன்பாக சிறிய துண்டு இஞ்சி மற்றும் 3 பல் பூண்டு ஆகியவற்றை இந்த கவரில் போட்டு, நன்றாக இடித்தால் இஞ்சி - பூண்டு விழுது தயாராகி விடும்.
இது போன்ற சில டிப்ஸ்கள் மூலம் நம் வேலையை எளிமையாக்க முடியும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“