Advertisment

முட்டை சமைக்க, பீட்சாவை சூடாக்க, பர்ஃபெக்ட் சாண்ட்விச்.. சிம்பிள் கிச்சன் ஹேக்ஸ் இங்கே!

உங்கள் நேரத்தையும் சக்தியையும் மிச்சப்படுத்த சில எளிய வழிகள் உள்ளன. நிறைய விரயங்களைத் தவிர்ப்பது எப்படி என்பதை இது உங்களுக்குச் சொல்லும்.

author-image
WebDesk
New Update
Kitchen hacks

Simple kitchen hacks shared by celebrity chef sanjeev kapoor

சமையலறையில் நேரத்தைச் செலவிடுவது, அன்பானவர்களுக்கான உணவைச் சமைப்பது ஆகியவை வாழ்க்கையின் மிகப்பெரிய இன்பங்களில் ஒன்றாகும். இருப்பினும், சமைப்பது, சேமித்து வைப்பது அல்லது தயாரிப்பது சில சமயங்களில் கொஞ்சம் சிரமமாக இருக்கும்.

Advertisment

நீங்கள் ஒரு சமையல் கலைஞராக இருந்தாலும் சரி அல்லது புதிதாக சமைப்பவராக இருந்தாலும் சரி, உங்கள் நேரத்தையும் சக்தியையும் மிச்சப்படுத்த சில எளிய வழிகள் உள்ளன. நிறைய விரயங்களைத் தவிர்ப்பது எப்படி என்பதை இது உங்களுக்குச் சொல்லும்.

முட்டைகளை சரியாக சமைக்க ஆனியன் ரிங்ஸ்!

சமைக்கும் போது முட்டையின் வட்ட வடிவத்தைத் தக்கவைக்க, அவற்றை ஆனியன் ரிங்ஸ் பயன்படுத்தி சமைக்கலாம். வெங்காய வளையத்திற்குள் முட்டையை உடைத்து மகிழுங்கள்!

சமைத்த கேரட் ஆரோக்கியத்திற்கு சிறந்தது

publive-image

இது பயனுள்ள ஒரு ஆரோக்கிய குறிப்பு. பச்சை கேரட் விட, சமைத்த கேரட்டில் கரோட்டினாய்டு அதிகமாக இருக்கும். இந்த காய்கறியை நீங்கள் முழுமையாக பயன்படுத்த விரும்பினால், அவற்றை சமைப்பதே சிறந்த வழி.

பர்ஃபெக்ட் சாண்ட்விச்

publive-image

உங்களில் சிலருக்கு இது ஏற்கனவே தெரிந்திருக்கலாம். இது ஒரு லைஃப் சேவிங் குறிப்பு. சாண்ட்விச் ஃபில்லிங் எப்போதும் எல்லா பக்கங்களிலும் சமமாக பரப்பவும். அது இறைச்சியாக இருந்தாலும் சரி, சீஸ் ஆக இருந்தாலும் சரி, அதை வெட்டி, சாண்ட்விச் முழுவதும் பரப்பவும்.

வாழைப்பழங்களை கீழே இருந்து உரிக்கவும்

publive-image

வாழைப்பழத்தை உரிக்க சிறந்த வழி அதை கீழே இருந்து உரிக்க வேண்டும். அதன் அடிப்பகுதியை கிள்ளவும், பின்னர் அதை உரிக்கவும். இந்த முறையில், நீங்கள் வாழைப்பழம், அதன் தோலில் ஒட்டாதவாறு எளிதாக உரிக்கலாம்.

ஒட்டாமல் இருக்க எண்ணெய் சேர்க்கவும்!

உங்களில் பலருக்கு இது ஏற்கனவே தெரிந்திருக்கலாம்! நீங்கள் அரிசி, பாஸ்தா அல்லது நூடுல்ஸ் சமைத்திருந்தால், தண்ணீரை வடிகட்டி, அதில் சிறிது எண்ணெய் சேர்க்கவும். இது சமைப்பதை எளிதாக்கும் வகையில் ஒன்றாக ஒட்டிக்கொள்வதைத் தவிர்க்கும்.

அதிக முட்டைகளை உரிக்க சிறந்த வழி!

கடின வேகவைத்த முட்டைகளை அதிக எண்ணிக்கையில் உரிக்க சிறந்த வழி, அவற்றை ஒரு மெட்டல் கண்டெய்னரில் வைத்து, ஓடுகள் உடைந்து விழும் வரை அவற்றை குலுக்க வேண்டும். இந்த தந்திரம் முட்டைகளை முழுவதுமாக அகற்றி நிறைய நேரத்தை மிச்சப்படுத்தும்.

மீதமுள்ள பீட்சாவை மீண்டும் சூடாக்க

publive-image

மீதமுள்ள பீட்சாவை நீங்கள் அனுபவிக்க விரும்புகிறீர்களா? அதை மைக்ரோவேவ் அல்லது ஓவனில் மீண்டும் சூடுபடுத்துவதைத் தவிர்க்கவும். அப்படி செய்தால் சீஸ் மெல்ட் ஆகாது, பீட்சா துண்டை மூடி, அடுப்பில் வைத்து சூடுபடுத்துங்கள். வித்தியாசம் தெரியும்!

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment