Advertisment

சட்டென ரெடியாகும் கலக்கல் கதம்ப சாம்பார்!

Simple Sambar Recipe ஆரோக்கியமான அதே நேரத்தில் சுவையான சாம்பார் இனி இதுபோன்று செய்து பாருங்கள்.

author-image
WebDesk
New Update
Simple Sambar Recipe Easy Lunch Recipes Tamil

Simple Sambar Recipe Easy Lunch Recipes Tamil

Simple Sambar Recipe Tamil : இருக்கும் காய்கறிகளை வைத்துக்கொண்டு மிகவும் குறைந்த நேரத்தில் ஆரோக்கியமான அதே நேரத்தில் சுவையான சாம்பார் இனி இதுபோன்று செய்து பாருங்கள். நிச்சயம் மீண்டும் மீண்டும் செய்யத் தூண்டும்.

Advertisment

பருப்பு வேகவைக்க :

துவரம் பருப்பு - 2 கப்

மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

உப்பு - தேவைக்கேற்ப

காய்கறிகளும் பிற பொருள்களும் :

நறுக்கிய சுரைக்காய் - 1/2 கப்

கத்தரிக்காய் - 2

நறுக்கிய கேரட் - 1/2 கப்

நறுக்கிய தக்காளி - 1

வெல்லம் - 2 டேபிள்ஸ்பூன்

புளி சாறு - 3 டேபிள்ஸ்பூன்

பெரிய வெங்காயம் - 1

காய்கறிகளை சமைக்க எண்ணெய் - 2-3 டேபிள்ஸ்பூன்

சாம்பார் தூள் - 2 டேபிள்ஸ்பூன்

தண்ணீர் - 2 கப்

தாளிக்க :

கடுகு - 1 டீஸ்பூன்

வெந்தயம் - 3/4 டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன்

சீரகம் - 1 டீஸ்பூன்

பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை

கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி

முழு சிவப்பு மிளகாய் - 4

எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்

செய்முறை :

பருப்பை நன்கு சுத்தம் செய்து, அதனை பிரஷர் குக்கருக்கு மாற்றி, உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்க்கவும்.

2-3 விசில் வரை பருப்பை சமைக்கவும்.

பிரஷர் அடங்கியதும், பருப்பை நன்கு மசித்துக் கொள்ளுங்கள்.

வெதுவெதுப்பான நீரில் புளியை சேர்த்து 15-20 நிமிடங்கள் ஊற வைக்கவும். பிறகு அதனை மசித்து, கரைசலை  எடுத்துக்கொள்ளுங்கள்.

காய்கறிகளைக் கழுவி வெட்டிக்கொள்ளுங்கள்.

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சூடாக்கி, கேரட் சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.

இப்போது வெங்காயம், கத்தரிக்காய், தக்காளி, சுரைக்காய் ஆகியவற்றையும் சேர்த்து வதக்கவும்.

பிறகு இந்தக் காய்கறிகளை மூடி 2-3 நிமிடங்கள் அல்லது காய்கறிகள் மென்மையாகும் வரை சமைக்கவும்.

இதனோடு, வெல்லம், சாம்பார் தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.

சிறிது நேரத்தில் சமைத்த பருப்பு மற்றும் புளி கரைசலைக் காய்கறிகளோடு சேர்க்கவும்.

இதனை நடுத்தர-குறைந்த தீயில் 4-5 நிமிடங்கள் மூடி சமைக்கவும்.

தாளிக்க :

ஒரு கடாயில் எண்ணெய் சூடாக்கி, தாளிப்புக்கான பொருள்களை ஒவ்வொன்றாகச் சேர்க்கவும்.

வெடிப்பு அடங்கியதும் இதனைக் கொதிக்கும் பருப்பில் சேர்க்கவும்.

இதனைக் கலந்து, மற்றொரு 5-10 நிமிடங்கள் சமைக்கவும்.

சூடான சாதம், இட்லி ஆகியவற்றுடன் பரிமாறலாம்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Sambar Recipe Tamil
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment