Advertisment

நீங்கள் ஒரு இயற்கை விரும்பியா? உங்கள் வீட்டிற்கு பசுமை தோற்றத்தை கொடுக்க 5 சிம்பிள் டிப்ஸ் இதோ!

உங்கள் வீட்டிற்கு அதிக பசுமையை சேர்க்க ஐந்து எளிய வழிகள்!

author-image
WebDesk
New Update
Home Plants Tips

simple ways to add greenery plants to your house

தொற்றுநோய் காலத்தில் மாதக்கணக்கில் வீடுகளுக்குள்ளே முடங்கி கிடந்தது பலரையும் வித்தியாசமாக சிந்திக்க தூண்டியது. சிலர் சமையலில் தங்கள் திறைமையை வெளிப்படுத்த முயன்றனர். சிலர் செல்லப்பிராணிகள், குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டனர். மேலும் சிலர்’ வீட்டிலேயே’ சொந்தமாக செடிகளை வளர்க்க ஆரம்பித்தனர்.

Advertisment

நீங்களும்’  எப்போதும் சின்ன சின்ன செடிகள் மூலம், வீட்டை அலங்கரிப்பதில் ஆர்வம் உள்ளவரா?

வீட்டுக்குள் வளர்க்கப்படும் தாவரங்கள்’ வீடுகளுக்கு ஒரு சிறந்த கூடுதலாக, கண்களுக்கு இனிமையாக இருக்கும். நீங்கள் அவற்றை கவனித்துக்கொள்ள ஒரு தோட்டக்கலை நிபுணராக இருக்க தேவையில்லை. எனவே, உங்கள் வீட்டிற்கு அதிக பசுமையை சேர்க்க மற்றும் வருகை தரும் அனைவரின் இதயங்களையும் வெல்லக்கூடிய ஐந்து எளிய வழிகளை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம்.

தாவர அலமாரிகளுக்கு ஒரு ஹலோ

நாம் அனைவரும் புத்தகங்கள் மற்றும் பிற பொருட்களை சுவரில் உள்ள அலமாரியில் வைக்கிறோம்., எனவே தாவரங்களுக்கு ஏன் கூடாது? உங்கள் வீட்டில் ஜன்னலோரம் அல்லது லிவிங் ஏரியாவில்’ அடுக்குகள் உள்ள  அலமாரியில், சிறிய செடிகளை வைத்திருப்பது, வீட்டுக்கு ஒரு தனித்துவமான தோற்றத்தைக் கொடுக்கும். 

publive-image

அலமாரியில் இதேபோல தாவரங்களை அடுக்கி வைக்கலாம்!

க்ரீப்பர்ஸ் ஒரு கூடுதலான வசதி

வால் க்ரீப்பர்ஸ்’ (Wall creepers) உங்கள் வீட்டிற்கு ஒரு அழகான சேர்க்கையை உருவாக்குகின்றன, அவற்றுக்கு குறைந்தபட்ச பராமரிப்பு தேவைப்படுகிறது. அவை பால்கனிகள், சமையலறை தோட்டங்கள் அல்லது உங்கள் வீட்டில் சூரிய ஒளி அதிகம் படும் ஒரு அறையிலும் வைக்கலாம்.

பூக்களை விட இலைகள், கிளைகள் உள்ளதை தேர்ந்தெடுக்கவும்

உங்கள் வீட்டிற்கு புதிய தோற்றத்தைக் கொடுக்க, புதிதாக ட்ரீம் செய்யப்பட்ட இலைகள் மற்றும் தண்டுகளைத் தேர்ந்தெடுத்து, அவற்றை தெளிவான கண்டெய்னரில் அழகாக அடுக்கி வைக்கவும். இடத்தை மேம்படுத்த இது ஒரு அற்புதமான மற்றும் பயனுள்ள வழியாகும். அதை நீங்களே எப்படி செய்யலாம் என்பது இங்கே:

ஸ்க்கலண்ட்ஸ்

publive-image

இதேபோல சதைப்பற்றுள்ள தாவரங்களை தேர்ந்தெடுக்கலாம்!

அழகாக வீட்டுச் செடிகள் ஆனால் அதேநேரம் குறைந்த பராமரிப்பை விரும்புவோருக்கு சதைப்பற்றுள்ள தாவரங்கள் சரியானவை. பல்வேறு வடிவங்கள் மற்றும் அளவுகளில் கிடைக்கும், அவற்றில் சில எண்ணற்ற வண்ணங்களில் உள்ளன. உங்கள் இடத்திற்கு வண்ணத்தை சேர்க்க அழகான செராமிக் பானைகளில் அவற்றை வைக்கலாம்.

மூலிகை தோட்டத்தை உருவாக்குங்கள்

தொற்றுநோய் பலரையும் ஆரோக்கியத்தை நோக்கி திரும்ப தூண்டியுள்ளது. பலரும் இயற்கை உணவுக்கு மாறி வருகின்றனர். எனவே உங்கள் வீட்டில் இடமிருந்தால் நீங்களே புதிதாக மூலிகை தோட்டத்தை உருவாக்கி உங்கள் ஆரோக்கியத்தை உறுதி செய்யலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment