Advertisment

நாத்தனார் சட்டசிக்கல்கள் உறவில் உள்ளதா? இதோ உங்களுக்கான தீர்வுகள்..

Simple ways to deal with interfering sister in laws Relationship Tamil News இதனை சொல்ல, நீங்கள் முரட்டுத்தனமாக நடந்துகொள்ள வேண்டும் என்கிற அவசியமில்லை.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Simple ways to deal with interfering sister in laws Relationship Tamil News

Simple ways to deal with interfering sister in laws Relationship Tamil News

Simple ways to deal with interfering sister in laws Relationship Tamil News : எந்த உறவாக இருந்தாலும் புரிதல் ஒன்றே அந்த உறவினை வலுவாக்கும். அந்த வரிசையில், நாத்தனார், அண்ணி உள்ளிட்ட உறவுகளுக்கிடையே ஏற்படுகிற பனிப்போர்களும் சில சமயத்தில் ஆயுதப் போர்களும் அதிகம். சில வீடுகளில், அக்கா தங்கையைப்போல் இருந்தாலும், பல வீடுகளில் அடிதடி சண்டைகள்தான். ஆனால், அதுபோன்ற குழப்பங்கள் எதுவுமில்லாமல், அந்த உறவினை எப்படி சுமுகமாக எடுத்துச் செல்லலாம் என்பதைப் பற்றி இங்குப் பார்க்கலாம்…

Advertisment

உங்களுடைய நாத்தனார் எவ்வளவுதான் அன்பானவராக இருந்தாலும், உங்களுக்கும் உங்கள் இணையருக்கும் இடையில் என்ன நடக்கிறது என்பது முற்றிலும் உங்கள் இருவருக்கிடையில் உள்ளது மற்றும் அதனை அவரிடம் பகிரப்படக்கூடாது. நீங்கள் எதைப் பகிர்ந்து கொள்ள வேண்டும், எதைச் செய்யக்கூடாது என்பதற்கு ஒரு எல்லைக்கோட்டினை வரையப்பட வேண்டும். உங்கள் எல்லா பிரச்சனைகளையும் அவரிடம் எடுத்துச் செல்லவோ அல்லது அவருடன் எல்லாவற்றையும் விவாதிக்கவோ கூடாது.

தாய் மற்றும் மகன், தந்தை மற்றும் மகள் மற்றும் மிக முக்கியமாக உடன்பிறப்புகள் என ஒவ்வொரு உறவும் ஒவ்வொரு வித்தியாசமான பிணைப்பைக் கொண்டிருக்கிறது. நீங்கள் அந்த குடும்பத்தில் ஓர் உறுப்பினராக இணைவதற்கு முன்பே அவர்கள் ஒருவருக்கொருவர் நன்கு பிணைப்பு இருந்திருக்கும். இந்த பாசப் பிணைப்பைப் புரிந்துகொண்டு அதனை நீங்கள் மதிக்க வேண்டும்.

உங்களால் தனியே அங்கிருக்கும் நிலைமையை சமாளிக்க முடியாவிட்டால் உங்கள் இணையரிடம் தெரியப்படுத்துங்கள். நிச்சயம் அவர்களால் அந்த நிலைமையைச் சிறப்பாகக் கையாள முடியும். சில சமயங்களில் உங்கள் பார்ட்னர் அண்ணி அல்லது நாத்தனாருடன் பேசுவது அவர்களை அமைதிப்படுத்த உதவும்.

எந்த ஒரு விஷயத்தைப் பற்றியும் நீங்களாகக் கற்பனை செய்துகொண்டு, முடிவில்லா குழப்பத்தில் இருப்பதைவிட, அவர்களிடம் நேரில் சென்று மனதில் இருப்பவற்றைப் பேசி பிரச்சனைக்கான விடையைத் தேடுங்கள். அவர்கள் தங்கள் வரம்புகளை மீறினால், அதை உருக்கமாக சொல்லுங்கள். அது உங்களைத் தொந்தரவு செய்கிறது என்று சொல்லுங்கள். இதனை சொல்ல, நீங்கள் முரட்டுத்தனமாக நடந்துகொள்ள வேண்டும் என்கிற அவசியமில்லை. ஆனால், நேரடியாகக் கேட்டுவிடுவது சிறந்தது.

எந்த ஒரு சிறு பிரச்சனையையும் ஆரம்பத்திலேயே பேசி அதற்கான தீர்வை கொண்டுவருவது சிறந்தது. அதனை வளர்த்துக்கொண்டே போனால் நிச்சயம் உறவுகளில் சிக்கல்கள் அதிகமாகும் என்பதே நிதர்சனம்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Relationship
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment