Advertisment

சூரக்கோட்டை: சிவாஜி கணேசனின் பூர்வீக பண்ணை வீடு எப்படி இருக்கு தெரியுமா?

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சூரக்கோட்டை தான், சிவாஜி கணேசன் சொந்த ஊர். இங்கு தோப்பு, வயல்கள், நடுவில் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது அவரது பூர்வீக பண்ணை வீடு.

author-image
abhisudha
புதுப்பிக்கப்பட்டது
New Update
Sivaji Ganesan

Sivaji Ganesan Farm House

தமிழ் சினிமாவின் ஒரே நடிகர் திலகம் என இன்றுவரை ரசிகர்களால் அழைக்கப்படுபவர் சிவாஜி கணேசன். இவருக்கு நடிகர் பிரபு, ராம் குமார் என்ற இரு மகன்களும் சாந்தி, ராஜ்வி என இரு மகள்களும் உள்ளனர்.

Advertisment

இதில் பிரபு மட்டும் தந்தையின் வழியில் சினிமாவில் கால்பதித்து, தனக்கென ஒரு இடத்தை உருவாக்கிக் கொண்டார். இளைய திலகம் என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் பிரபு இதுவரை, 100 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இவருடைய மகன் விக்ரம் பிரபு தாத்தா, தந்தை வரிசையில் இப்போது தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சூரக்கோட்டை தான், சிவாஜி கணேசன் சொந்த ஊர். இங்கு தோப்பு, வயல்கள், நடுவில் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது அவரது பூர்வீக பண்ணை வீடு.

வாசலில் நுழைந்ததும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை, தென்னை தோப்பு, வயல்கள் என எங்கு பார்த்தாலும் பச்சை பசேலென இருக்கிறது . நடுவில் மண் சாலை, இருபுறமும் செழித்து வளர்ந்த தென்னை மரங்கள் என உள்ளே செல்ல செல்ல பழைய சினிமாவில் வருவது போல அழகாக பிரம்மாண்டமாக அமைந்திருக்கிறது சிவாஜியின் பண்ணை வீடு.

அந்த அழகான புகைப்படங்கள்

publive-image

பண்ணை வீட்டின் நுழைவு வாயில்
publive-image

பண்ணை வீட்டுக்குள் இருக்கும் தோப்பு
publive-image

சிவாஜியின் பிரமாண்டமான பண்ணை வீடு
publive-image

பண்ணை வீட்டின் முன் பகுதி
publive-image

வீட்டின் நுழைவு
publive-image

வயலுக்கு நடுவே பாயும் ஓடை
publive-image

வீட்டின் பின் பகுதியில் கண்ணெக்கெட்டிய தூரம் வரை இருக்கும் வயல்வெளிகள்

Credit: Breaking Vlogs Youtube Channel

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment