கோதுமை ரவை உப்புமா உதிரி உதிரியாக சமைக்க, இந்த மாதிரி செய்து பாருங்க. இரவு உணவாக இதை சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் நல்லது என்று டாக்டர் சிவராமன் கூறியுள்ளார்.
தேவையான பொருட்கள்
கோதுமை ரவை 3 கப்
இஞ்சி பெரிய துண்டு நறுக்கியது
பச்சை 4 மிளகாய்
உளுந்தம் பருப்பு
2 ஸ்பூன்
சின்ன வெங்காயம்
1 ஸ்பூன் கடுகு
1 ஸ்பூன் சிரகம்
3 ஸ்பூன் எண்ணெய்
செய்முறை: கோதுமை ரவையை நன்றாக வறுக்க வேண்டும். தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து, கடுகு, சீரகம், உளுந்தம் பருப்பு சேர்த்து கிளரவும். தொடர்ந்து பச்சை மிளகாய் சேர்த்து கிளரவும். இஞ்சி நறுக்கியதை சேர்த்து கிளரவும். சின்ன வெங்காயம் நறுக்கியதை சேர்த்து கிளரவும். தொடர்ந்து தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். கோதுமையை ரவையை சேர்த்து கிளரவும். நெய் சேர்த்து கொள்ளவும். நன்றாக வேக வேண்டும். உப்பு சேர்த்து கிளரவும்.