Advertisment

பொலிவான இளமைத் தோற்றம்... உங்கள் உணவில் தேவை இதுதான்!

skin care tips: வயதான தோற்றத்துடன் காட்சியளிப்பவர்கள் மற்றும் முகத்தில் அதிகப்படியான சுறுக்கங்கள் உள்ளவர்கள் கடுகை சரும பராமரிப்புக்கு பயன்படுத்தலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
பொலிவான இளமைத் தோற்றம்... உங்கள் உணவில் தேவை இதுதான்!

skin care facial mask, facial mask by mustard seed, mustard seed facial mask, கடுகு, முகம் அழகு, தோல் அழகு

Skin Care Tamil News: கடுகை நாம் எப்போதும் பாரம்பரிய சமையலோடு தொடர்புபடுத்துவோம். பெரும்பாலான இந்திய குடும்பங்கள் சமையலறையில் உணவின் சுவையைக் கூட்ட இதை பயன்படுத்துகின்றனர். ஆனால் கடுகில் பல சரும பராமரிப்பு நன்மைகளும் உள்ளன என்பது உங்களுக்கு தெரியுமா? உங்கள் உணவின் சுவையை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் உங்கள் அழகையும் கடுகு மேம்படுத்தும். இது குறித்து நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டியது.

Advertisment

கடுகு சருமத்திற்கு இயற்கையான எக்ஸ்போலியேட்டர்களாக (exfoliators) செயல்படும் என்று நம்பப்படுகிறது. எனவே நீங்கள் அழகுசாதன பொருட்களுக்கு நிரந்தரமாக விடைக் கொடுத்து விடலாம். கடுகுடன் சிறிது கற்றாழை ஜெல்லையும் சேர்த்து முகத்திற்கான ஒரு சிறந்த ஸ்க்ரபாக பயன்படுத்தலாம்.

இளமையிலேயே வயதான தோற்றத்துடன் காட்சியளிப்பவர்கள் மற்றும் முகத்தில் அதிகப்படியான சுறுக்கங்கள் உள்ளவர்கள் கடுகை சரும பராமரிப்புக்கு பயன்படுத்தலாம். ஏனென்றால் கடுகில் உள்ள வைட்டமின் சி இந்த பிரச்சனைகளை சரிசெய்யும் என்று நம்பப்படுகிறது.

கடுகில் வைட்டமின் ஏ சத்து அதிகமாக உள்ளது. மேலும் அதில் சில பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளும் உள்ளன. எனவே தேங்காய் எண்ணெய்யுடன் சிறிது கடுகையும் சேர்த்து ஒரு பேஸ்டாக தயாரித்து தோலில் உள்ள நோய்தொற்றுகளில் இருந்து விடுபட பயன்படுத்தலாம். வெயில் படுவதால் தோலில் ஏற்படும் மாற்றங்களையும் கடுகு பேஸ்ட் சரிசெய்யும்.

சிறிது கடுகு, இரண்டு தேக்கரண்டி மாவு, ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், ஒரு தேக்கரண்டி கடுகு எண்ணெய் மற்றும் இரண்டு தேக்கரண்டி தண்ணீர் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளவும்

முதலில் கடுகை நன்றாக பொடி செய்து பின்னர் மாவுடன் கலந்து அதனுடன் தண்ணீர், கடுகு எண்ணெய் மற்றும் மஞ்சள் தூள் ஆகியவற்றை கலந்து ஒரு பேஸ்டாக செய்துக்கொள்ளவும். இந்த பேஸ்டை முகத்தில் தடவி ஒரு 30 நிமிடங்கள் உலரவிடவும். பிறகு ஒரு காய்ந்த துணியைக் கொண்டு நன்றாக துடைத்துவிட்டு தண்ணீர் கொண்டு கழுவவும். இதை போல் வாரத்துக்கு ஒரு முறை செய்து வந்தால் மாற்றத்தை கண்கூடாக காணலாம்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil
Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment