Advertisment

பூ போன்ற மிருதுவான சருமம்  வேண்டுமா? மொக்ரா ஃப்ளவர் ஃபேஸ் பேக் டிரை பண்ணுங்க!

மொக்ரா பூவில் சில அழற்சி எதிர்ப்பு மற்றும் கிருமி நாசினிகள் உள்ளதால், இது சருமத்தை மிருதுவாக உணர வைக்கும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Skin care tips

Skin care tips homemade Mogra flower face pack for soft skin

வெவ்வேறு பருவங்கள் வெவ்வேறு தோல் பராமரிப்பு வழக்கத்துக்கு அழைப்பு விடுக்கின்றன. உண்மையில், நம்மில் பலரும் அழகுசாதனப் பொருட்களை விட இயற்கையான வீட்டு குறிப்புகளை அதிகம் விரும்புகிறோம். ஏனென்றால் நீண்ட காலத்திற்கு, இது நமக்கு நிறைய நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்துகிறது, மேலும் நம் சருமத்தைப் பற்றி நன்றாக உணர உதவுகிறது.

Advertisment

தோல் பராமரிப்பு என்று வரும்போது, ​​​​பூக்கள் எப்போதும் விருப்பமான ஒன்றாக இருக்கின்றன, அவற்றின் இயற்கையான நன்மை, உங்களுக்கு ஒரு புதிய பிரகாசத்தை அளிக்கும். அப்படி உங்கள் தினசரி தோல் பரமாரிப்பு வழக்கத்திற்குப் பரிசீலிக்கக்கூடிய மலர் ஒன்று இங்கே உள்ளது – மொக்ரா. இது அரேபிய மல்லிகை' என்றும் அழைக்கப்படுகிறது

மொக்ரா பூவில் சில அழற்சி எதிர்ப்பு மற்றும் கிருமி நாசினிகள் உள்ளதால், இது சருமத்தை மிருதுவாக உணர வைக்கும். நீங்களே வீட்டில் செய்து பயன்படுத்தக்கூடிய எளிய மொக்ரா ஃப்ளவர் ஃபேஸ் பேக் இங்கே உள்ளது;

publive-image

உங்களுக்கு தேவையான பொருட்கள்

* மொக்ரா இலைகள் இரண்டு ஸ்பூன்

* ஒரு தேக்கரண்டி பால்

* உளுந்து மாவு ஒரு தேக்கரண்டி

* கொஞ்சம் ரோஸ் வாட்டர்

எப்படி செய்வது?

மொக்ரா இலைகளை தண்ணீரில் வேகவைக்கவும், இதனால் அவை மென்மையாக மாறும். தண்ணீரில் மொக்ரா இலைகளின் எஸ்சென்ஸ் இருப்பதால், அதை அப்புறப்படுத்த வேண்டாம், பிறகு அதைக் கொண்டு முகத்தை கழுவலாம்.

இப்போது வேகவைத்த இலைகளை அரைத்து பேஸ்ட் செய்யுங்கள். அதனுடன், ​​​​சில துளிகள் ரோஸ் வாட்டரையும் சேர்க்கவும்.

அடுத்த படியாக, கடலை மாவு சேர்க்கவும். அதில் பாலைச் சேர்த்து, அனைத்தையும் ஒன்றாகக் கலந்து ஒரு மென்மையான பேஸ்ட்டை உருவாக்கவும்.

இந்த பேஸ்ட்டை, உங்கள் முகத்தில் மெதுவாக மசாஜ் செய்யவும். குறைந்தது 20 நிமிடங்களுக்கு அப்படியே விடவும்.

அது காய்ந்ததும், இப்போது ஏற்கெனவே இலைகளை வேகவைத்த தண்ணீரில் முகத்தை கழுவவும்.

ஆனால் அதைச் செய்வதற்கு முன், கைகளில் சிறிது தேங்காய் எண்ணெய் தடவி,  முகத்தை இன்னும் கொஞ்சம் மசாஜ் செய்யலாம்.

முகத்தைக் கழுவிய பின், சுத்தமான டவலைப் பயன்படுத்தி துடைக்கவும், மொக்ரா பூவின் இலைகள் உங்கள் முகத்தில் கொண்டு வந்திருக்கும் வித்தியாசத்தை நீங்கள் கவனிப்பீர்கள்.

கண்டிப்பா டிரை பண்ணுங்க!

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment