Advertisment

பொலிவான சருமத்துக்கு வைட்டமின் ஈ காப்ஸ்யூல்!

உங்கள் தோல் பராமரிப்பு வழக்கத்தில் வைட்டமின் ஈ’ பயன்படுத்துவதற்கான’ நீங்களே செய்யக்கூடிய சில குறிப்புகள் இதோ!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
vitamin E capsule

vitamin E capsule for Glowing skin

ஒழுங்கற்ற தோல் பராமரிப்பு, மன அழுத்தம் மற்றும் சூரிய ஒளி போன்ற பல காரணங்களால் நமது சருமம் பொலிவை இழக்க நேரிடும். சரியான கவனிப்பு இல்லாவிட்டால், சருமம் மந்தமாகவும், தொடுவதற்கு கரடு முரடானதாகவும் இருக்கும்.

Advertisment

வைட்டமின் ஈ’ சருமத்தில் பயன்படுத்தப்படும் போது, ​​​​அது ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடும், வறண்ட பகுதிகளை ஈரப்பதமாக்குகிறது, மற்றும் சுற்றுச்சூழலில் இருந்து சருமத்தைப் பாதுகாக்கும்.

உங்கள் தோல் பராமரிப்பு வழக்கத்தில் வைட்டமின் ஈ’ பயன்படுத்துவதற்கான’ நீங்களே செய்யக்கூடிய  சில குறிப்புகள் இதோ!

சரும பராமரிப்பு என்று வரும்போது மாய்ஸ்சரைசர் அவசியம். ஆனால் ஒரு நல்ல மாய்ஸ்சரைசரை வாங்குவது விலை உயர்ந்ததாக இருக்கும். அது மட்டுமல்லாமல், அழகு தயாரிப்புகளில் பெரும்பாலானவை இரசாயனங்கள் நிறைந்தவை, அவை பெரும்பாலும் தோலுக்கு தீங்கு விளைவிக்கும், மேலும் நீண்ட காலத்திற்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.

நீங்கள் விலையுயர்ந்த அழகுசாதனப் பொருட்களில் செலவழிக்க விரும்பவில்லை என்றால், உங்கள் சொந்த மாய்ஸ்சரைசரை’ வீட்டிலேயே எப்போதும் செய்யலாம்.

வறண்ட, அரிக்கும் சருமத்துக்கு, இந்த ஹோம்மேட் மாய்ஸ்சரைசர் பயன்படுத்துங்கள்.

publive-image

தேவையான பொருட்கள்

50 மில்லி – ரோஸ் வாட்டர்

1 டீஸ்பூன் – கிளிசரின்

1 – வைட்டமின் ஈ காப்ஸ்யூல்

எப்படி செய்வது?

அனைத்தையும் ஒன்றாக கலக்கவும். ஷேக் செய்து பிறகு  முகத்தில் அப்ளை செய்யவும்.

உங்களுக்கும் வறண்ட, அரிக்கும் தோல் இருந்தால் மறக்காமல்  இந்த மாய்ஸ்சரைசரை முயற்சி செய்யுங்கள். இது உங்கள் சருமத்துக்கு அதிசயங்களைச் செய்யும்.

தேங்காய் எண்ணெய் மாய்ஸ்சரைசர்

இந்த சூப்பர் மாய்ஸ்சரைசரை பெற, அரை கப் தேங்காய் எண்ணெய், ஒரு டீஸ்பூன் வைட்டமின் ஈ எண்ணெய் மற்றும் நறுமணத்திற்காக உங்களுக்குப் பிடித்த அத்தியாவசிய எண்ணெயின் சில துளிகள் எடுக்கவும்.

நீங்கள் லாவெண்டர் எண்ணெய் அல்லது முகப்பருவைத் தடுக்க டீ ட்ரீ எண்ணெய்யும் சேர்க்கலாம். எல்லாவற்றையும் நன்கு கலந்து ஒரு கண்ணாடி பாட்டிலில் சேமிக்கவும்.

குளித்து முடித்த பிறகு அல்லது இரவு தூங்க செல்லும் முன் இதை உங்கள் முகம், கை, கால்களில் தடவுங்கள்.

வைட்டமின் ஈ கிரீம்

publive-image

தயிர் – 1 டீஸ்பூன்

வைட்டமின் ஈ மாத்திரை – 1

எப்படி செய்வது?

ஒரு பருத்தி துணியை எடுத்து, அதை தயிரில் போட்டு, அதிகப்படியான தண்ணீரை பிழிந்து அகற்றவும்.

வடிகட்டிய தயிரை எடுத்து ஒரு சிறிய கிண்ணத்தில் வைக்கவும்.

8 வைட்டமின் ஈ காப்ஸ்யூலைச் சேர்த்து, கிரீமி கன்சிஸ்டன்சி வரும் வரை நன்கு கலக்கவும்.

எப்படி அப்ளை செய்வது?

 உங்கள் முகத்தில் கிரீமை மேல்நோக்கி தடவி, இரண்டு நிமிடங்கள் மசாஜ் செய்யவும். உங்கள் சருமம் க்ரீமை முழுமையாக உறிஞ்சுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு, குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும்.

தயிர் சரும ஆரோக்கியத்தை அதிகரிக்கவும், பளபளப்பாக்கவும் உதவுகிறது. இது இரத்த ஓட்டம் மற்றும் தோல் அமைப்பை மேம்படுத்துகிறது.

மறுபுறம், வைட்டமின் ஈ ஒரு சிறந்த ஆக்ஸிஜனேற்றியாகும், இது சருமத்துக்கு ஊட்டமளிக்கிறது மற்றும் ஈரப்பதமாக்குகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment