Advertisment

குளிர்காலத்தில் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துவதன் ஏழு நன்மைகள்!

சன்ஸ்கிரீன்கள் கவசமாக மட்டுமல்லாமல், சருமத்தை இளமையாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும் என்று நிபுணர் ஒருவர் கூறுகிறார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Sunscreen benefits

Skin expert shares benefits of using sunscreen in winters (Photo: Getty/Thinkstock)

சன்ஸ்கிரீன்களைச் சுற்றி பல தோல் பராமரிப்பு கட்டுக்கதைகள் உள்ளன - அவை வீட்டிற்குள் இருக்கும்போது நமக்குத் தேவையில்லை, அல்லது குளிர்காலத்தில் அவற்றின் தேவை இல்லை, ஏனெனில் வானிலை சூடாக இல்லை. ஆனால், தினமும் சன்ஸ்கிரீன்களை அணிய வேண்டிய ஒரு முழுமையான தேவை உள்ளது. இதைத் தான் நிபுணர்கள் நீண்ட காலமாக வாதிடுகின்றனர்.

Advertisment

டீ மற்றும் தின்பண்டங்கள் மற்றும் எப்போதாவது காபிகளுடன் குளிர்காலத்தை அனுபவிக்கும் போது, ​​யுனிகாயாவின் நிறுவனரும் இயற்கை மருத்துவருமான டாக்டர் ககன் பாட்டியா, சன்ஸ்கிரீன் லோஷனைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறார். இது கவசமாக மட்டுமல்லாமல், சருமத்தை இளமையாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும் என்கிறார். “கோடைக்காலத்தில் வெளியில் செல்வதற்கு முன் சன்ஸ்கிரீன் அணிவது அர்த்தமுள்ளதாக இருக்கிறது. ஏனெனில் இது வெயில், தோல் கருமையாகுதல் மற்றும் புற ஊதா கதிர்கள்(UV Rays) ஆகியவற்றிலிருந்து சருமத்தை பாதுகாக்கிறது. ஆனால் குளிர்காலத்திலும் எப்போதும் சன்ஸ்கிரீன் அணிய வேண்டும்.

குளிர்காலத்தில் சன்ஸ்கீரின் பயன்படுத்துவதன் ஏழு நன்மைகளை குறித்து மருத்துவர் பட்டியலிடுகிறார்:

* மெல்லிய ஓசோன் படலம்: குளிர்காலத்தில், ஓசோன் படலம் மிக மெல்லியதாக உள்ளது. அதாவது புற ஊதா கதிர்களை (UV-ultraviolet rays) குறைவாக உறிஞ்சுகிறது, இதனால் தோலில் UV வெளிப்பாடு அதிகரிக்கிறது. இந்த கதிர்வீச்சுகள் சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும், ஏனெனில் அவை முன்கூட்டிய முதுமை, சுருக்கம் மற்றும் நிறமி ஆகியவற்றை ஏற்படுத்துகின்றன.

* புற்றுநோய் ஆபத்து: குளிர்காலத்தில் புற ஊதா கதிர்கள் வெளிப்படும் ஆபத்து மிக அதிகமாக இருக்கும், இது தோல் செல்களில் உள்ள டிஎன்ஏவை சேதப்படுத்துவதால் தோல் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கலாம். சன்ஸ்கிரீன் போடுவதால் சரும செல்கள் சேதமடையும் அபாயத்தைக் குறைக்கலாம்.

* குறைந்த ஈரப்பதம்: குளிர்காலத்தில் குறைந்த ஈரப்பதம் மற்றும் கடுமையான காற்று காரணமாக, தோல் வறண்டு போகிறது, இது விரிசல், சுருக்கங்கள் மற்றும் தொற்றுநோயை அதிகரிக்கிறது. சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துவது சருமத்தின் ஈரப்பதத்தை பராமரிக்க உதவுகிறது.

* எரிச்சல் மற்றும் சிவத்தல்: குளிர்காலத்தில் மற்றொரு பிரச்சனை தோல் எரிச்சல் மற்றும் சிவந்து போகுதல், இதற்குக் காரணம், சருமம் தண்ணீரைத் தக்கவைக்கும் ஆற்றலை இழக்கிறது. இதனால் சருமம் ஈரப்பதத்தை இழந்து வறண்டு விடும். இதன் விளைவாக சருமத்தில் எரிச்சல் மற்றும் சிவந்து போகும்.

* உட்புற விளக்குகள்: வெளிப்புறங்களில் மட்டுமல்ல, உட்புறத்திலும், நமது சருமம் தீங்கு விளைவிக்கும் கதிர்களுக்கு வெளிப்படும். கேஜெட்களிலிருந்து வரும் தீங்கு விளைவிக்கும் கதிர்கள் - நீல ஒளி - தோல் சேதத்தை ஏற்படுத்துகிறது. எனவே, சூரிய ஒளி இருந்தாலும் இல்லாவிட்டாலும் பொருத்தமான SPF மற்றும் நீல ஒளி பாதுகாப்பு கொண்ட சன்ஸ்கிரீன் அணிவது முக்கியம்.

* முதுமையின் ஆரம்ப அறிகுறிகள்: சூரியன் மற்றும் நீல ஒளி கதிர்கள் நீண்ட நேரம் வெளிப்படுவதால், தோல் ஃப்ரீ ரேடிக்கல் சேதம் போன்ற சிக்கல்களை எதிர்கொள்கிறது, இதன் விளைவாக சீக்கிரமே முதுமை தோற்றம் ஏற்படுகிறது. இது ஏற்கனவே இருக்கும் கொலாஜன் மற்றும் உடைந்த எலாஸ்டின் ஃபைபர்களின் சிதைவு போன்ற சில சிக்கல்களை மேலும் சென்சிட்டிவ் ஆக்குகிறது. இதனால் தோல் மெல்லியதாகி, சருமத்தில் சுருக்கங்கள் மற்றும் கோடுகளுக்கு வழிவகுக்கும்.

* பிக்மேண்டேஷன்: பிக்மென்டேஷன் என்பது அதிகப்படியான மெலனின் உற்பத்தியின் காரணமாக தோலில் உள்ள கருமையான திட்டுகளை குறிக்கிறது, இது சூரிய கதிர்கள், அழுக்கு மற்றும் மாசுபாட்டின் தொடர்ச்சியான வெளிப்பாடு காரணமாக ஏற்படுகிறது. சூரியக் கதிர்கள், அழுக்கு மற்றும் மாசுபாட்டின் தொடர்ச்சியான வெளிப்பாடு காரணமாக இது நிகழ்கிறது. சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துவது தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்களால் ஏற்படும் பிக்மேண்டஷனில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க உதவுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle Healthy Life
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment