Advertisment

முகப்பருவை அழிக்க உதவும் மூன்று நல்ல பழக்கங்கள் இதோ!

உங்களுக்கு லேசான முகப்பரு இருந்தால், தோல் மருத்துவர் ஜுஷ்யா சரின், என்ன செய்ய வேண்டும் என்று இங்கே கூறுகிறார்.

author-image
WebDesk
New Update
acne-skincare

Skincare expert shares three good habits make your acne vanish

முகப்பரு மிகவும் பொதுவான தோல் பிரச்சினைகளில் ஒன்று, குறிப்பாக உங்களுக்கு எண்ணெய் அல்லது உணர்திறன் வாய்ந்த சருமம் இருந்தால்.

Advertisment

முகப்பரு என்பது ஹேர் ஃபாலிக்கிள்ஸ்’ எண்ணெய் மற்றும் இறந்த சரும செல்களால் அடைக்கப்படும் நிலை. இது பிரேக்அவுட்ஸ், பருக்கள், வெள்ளை புள்ளிகள் மற்றும் கரும்புள்ளிகளுக்கு வழிவகுக்கிறது.

உங்கள் முகப்பருவை மறையச் செய்யும் வாக்குறுதியுடன் பல சிகிச்சைகள் உள்ளன, இருப்பினும் தோல் பராமரிப்பு நிபுணர்கள் ஒரு அடிப்படை முறையைப் பின்பற்றுவதன் மூலம் சருமத்தை, முகப்பரு மற்றும் பருக்கள் இல்லாமல் செய்யலாம் என்று பரிந்துரைக்கின்றனர்.

நீங்கள் லேசான முகப்பருவை அனுபவித்தால் (நாட்பட்ட பிரச்சனை இல்லாமல்), தோல் மருத்துவர் ஜுஷ்யா சரின், என்ன செய்ய வேண்டும் என்று இங்கே கூறுகிறார்.

"முகப்பருவை அழிக்க உதவும்" மூன்று எளிய பழக்கங்களை அவர் பட்டியலிட்டார்.

* குறிப்பாக மாஸ்க், ஹெல்மெட், தொப்பி போன்றவற்றை அணியும்போது வியர்ப்பது முகப்பருவை மோசமாக்கும். வியர்வை வந்தவுடன் கூடிய விரைவில் உங்கள் முகத்தை கழுவவும்.

* ஒரு துவைத்த துணி, ஸ்பான்ஞ், ஸ்க்ரப், போன்றவற்றைப் பயன்படுத்துவது சருமத்தை எரிச்சலடையச் செய்து, முகப்பருவைத் தூண்டும். எனவே எந்த நான் – அப்ரஸிவ் இல்லாத, க்ளென்சரை எடுத்து, உங்கள் விரல் நுனியை மட்டும் பயன்படுத்தி முகத்தை சுத்தம் செய்யவும்.

* உங்கள் தலைமுடி எண்ணெய் பசையாக இருந்தால், தினமும் ஒரு முறை அல்லது இரு நாட்களுக்கு ஒருமுறை என அடிக்கடி ஷாம்பு போட்டு தலையை கழுவவும். இது உச்சந்தலையில் எண்ணெய் வராமல் தடுத்து, உங்கள் முக தோலை மஙகச் செய்து, அடைப்பதைத் தடுக்கிறது, ”என்று டாக்டர் சரின் கூறினார்.

தொடர்ந்து முகப்பருவை எதிர்கொள்கிறீர்களா?

இதற்கு என்ன காரணம் என்பதை முதலில் ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும் என்று மருத்துவர் ,சரின் முன்பு ஒரு இன்ஸ்டாகிராம் பதிவில் கூறினார்.

மருத்துவ நிலைமைகள் மற்றும் மன அழுத்தம் உட்பட வயது வந்தோருக்கான முகப்பருக்கான ஏழு பொதுவான காரணங்களில், அடிக்கடி சுத்தப்படுத்துதல் மற்றும் தவறான தயாரிப்புகளைப் பயன்படுத்துதல் ஆகியவற்றை அவர் பட்டியலிட்டார்.

நம்மில் பெரும்பாலோர் ஒரு நாளைக்கு இரண்டு முறை மென்மையான க்ளென்சர் மூலம் சுத்தம் செய்ய வேண்டும், ”என்று டாக்டர் சரின் குறிப்பிட்டார். இருப்பினும், அதை விட அதிகமாக நீங்கள் முகத்தை சுத்தம் செய்தால், சுத்தப்படுத்துவதால் ஏற்படும் வறட்சியை ஈடுசெய்ய உங்கள் சருமம் அதிக எண்ணெய் உற்பத்தி செய்யும். இது உங்கள் சருமத்தை எரியச் செய்து, முகப்பருவை ஏற்படுத்தும்.

தவறான தயாரிப்புகளைப் பயன்படுத்துதல்

ஒருவேளை உங்களுக்கு எண்ணெய் அல்லது காம்பினேஷன் சருமம் இருந்தால், எண்ணெய் இல்லாத, காமெடோஜெனிக் அல்லாத அல்லது நீர் சார்ந்த குறிப்புகளைக் கொண்ட தயாரிப்புகளை எப்போதும் பயன்படுத்தவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment