Advertisment

தினமும் 10 நிமிடம் ஸ்கிப்பிங்.. தலை முதல் கால் வரை இவ்வளவு நன்மைகள் இருக்கு

2021 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில், ஸ்கிப்பிங் கவலைகளைத் தணித்து, உங்கள் மனநிலையை உயர்த்துகிறது என்பதைக் கண்டறிந்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
skipping

Skipping can help you in weight loss

டாக்டர் மிக்கி மேத்தா

Advertisment

உங்கள் வொர்க்அவுட்டின் ஒரு பகுதியாக ஸ்கிப்பிங் இருப்பது மிகவும் நல்லது. உண்மையில், இது உடல் பயிற்சிக்கு மிகவும் பயனுள்ளது என்கிறார் டாக்டர் மேத்தா.

ஸ்கிப்பிங் செய்வது உங்கள் நிணநீர் மண்டலத்திற்கு ஒரு மசாஜ் கொடுக்கிறது மற்றும் நிணநீர் கணுக்களை வெளியேற்ற உதவுகிறது. மேலும், இது சினாப்டிக் இணைப்புகளை அதிகரிக்கிறது. ஆனால் உங்கள் முழங்காலில் ஸ்டீல் பொருத்தியிருந்தால் இதை தவிர்க்க வேண்டும்.  ஸ்கிப்பிங் மென்மையாக இருக்க வேண்டும் மற்றும் ஒரு ரிதம் இருக்க வேண்டும்.

இதய ஆரோக்கியத்துக்கு நல்லது

உங்கள் இதயம் மற்றும் நுரையீரல் உங்களை அனுமதிக்கும் அளவுக்கு மட்டுமே ஸ்கிப்பிங் செய்யவும். எனவே, உங்கள் உடல் திறனுக்கு ஏற்ப வரம்புகளை அமைக்கவும். ஸ்கிப்பிங் செய்யும் போது உங்கள் சுவாசம்  ஒரு தாளத்துடன் இருக்க வேண்டும். இது இரத்த ஓட்டத்திற்கு சிறந்தது மற்றும் நீங்கள் இசை உடன் ஸ்கிப் செய்யும் போது, அது மகிழ்ச்சியான ஹார்மோன்களைப் வெளியிடுகிறது.

2021 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில், ஸ்கிப்பிங் கவலைகளைத் தணித்து, உங்கள் மனநிலையை உயர்த்துகிறது என்பதைக் கண்டறிந்துள்ளது. ஸ்கிப்பிங் இருதய உடற்பயிற்சிக்கு மிகவும் நல்லது மற்றும் உங்கள் நுரையீரல் திறனை மேம்படுத்துகிறது.

எடை இழப்புக்கு உதவுகிறது

இது கலோரிகளை எரிப்பதை அதிகரிக்கிறது, இதனால் நீங்கள் எடை இழக்கலாம். இது முக்கிய தசைகளை வலுப்படுத்தி, வயிற்றுப் பகுதியை இறுக்கமாக்குவதால், அது தானாகவே தொப்பை கொழுப்பை குறைக்கிறது.

2013 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், ஆறு வாரங்களுக்கு தினமும் 10 நிமிடங்கள் ஸ்கிப்பிங் செய்பவர்கள், அதே காலக்கட்டத்தில் ஜாகிங் செல்பவர்களை போலவே தங்கள் இருதய திறனை மேம்படுத்துவதாகக் கண்டறிந்துள்ளனர். ஸ்கிப்பிங் செய்வது, 15 நிமிடங்களில் 300 கலோரிகளை எரிக்கும் என்று நம்பப்படுகிறது. இது சில கடினமான கார்டியோ பயிற்சிகளை விட அதிகம்.

நீங்கள் ஸ்கிப்பிங் செய்யும்போது, ​​​​உடலில் உள்ள ஒவ்வொரு முக்கிய தசைக் குழுவும் வேலை செய்கிறது. கூடுதலாக, இது வெப்பத்தை உருவாக்குகிறது மற்றும் நிறைய கலோரிகளை எரிக்கிறது.

மூளை ஆரோக்கியத்திற்கு

ஸ்கிப்பிங் உங்கள் மூளையின் செயல்பாட்டிற்கு நல்லது, குறிப்பாக உங்கள் ஸ்கிப்பிங் கயிறுகளை பல்வேறு காம்பினேஷன்களில் எவ்வாறு நகர்த்துவது என்பது உங்களுக்குத் தெரிந்தால், இது ஒருங்கிணைப்பைக் கூர்மைப்படுத்துகிறது.

குத்துச்சண்டை வீரர்கள் ஸ்கிப்பிங்கில் நிறைய பொழுதுபோக்கை காண்கிறார்கள். இது கால்களுக்கு ஒரு சிறந்த வேலை, இது உங்களை மிகவும் சுறுசுறுப்பாகவும் விழிப்புடனும் வைத்திருக்கும். இது, கவனம் மற்றும் செறிவு ஆகியவற்றைக் கொண்டு வருகிறது.

எலும்புகளை பலப்படுத்துகிறது

ஸ்கிப்பிங் செய்வது உங்கள் எலும்புகளை பலப்படுத்துகிறது மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்தை குறைக்கிறது. 2017 இல் நடத்தப்பட்ட ஆய்வில், வாராந்திர ஸ்கிப்பிங்கில் பங்கேற்ற 11 முதல் 14 வயதுடைய சிறுமிகள், ஸ்கிப்பிங் செய்யாதவர்களை விட அதிக எலும்பு அடர்த்தியைக் கொண்டுள்ளனர். 2019 ஆம் ஆண்டில், எலும்பு மற்றும் கனிம ஆராய்ச்சிக்கான கொரிய சொசைட்டி, எலும்பின் வலிமையை மேம்படுத்தும் மறுவாழ்வு திட்டத்தின் ஒரு பகுதியாக 10 நிமிடங்களுக்கு ஸ்கிப்பிங் செய்ய பரிந்துரைத்தது.

நீங்கள் கவனிக்க வேண்டியவை

ஸ்கிப்பிங்குடன், நீங்கள் சரியான உணவு வழக்கத்தை கொண்டிருக்க வேண்டும். இதை ஆழ்ந்த சுவாசம், பிராணயாமா, யோகா போன்ற உடல் செயல்பாட்டுடன் இணைக்க வேண்டும்.

எப்போதும் ஒரு மென்மையான மேற்பரப்பில் ஸ்கிப்பிங் செய்யவும், இது சிறந்த துள்ளல் மற்றும் உங்கள் கால்களுக்கு மென்மையான குஷனிங்கை வழங்குகிறது.

இந்த வழியில் நீங்கள் உங்கள் மூட்டுகளுக்கு அழுத்தம் கொடுக்காமல் இருக்க முடியும். உங்கள் ஸ்கிப்களை வேகப்படுத்தி, உங்கள் முழங்கால்கள் மற்றும் கணுக்கால்களை தவறாமல் மசாஜ் செய்யவும். கணுக்கால் மூட்டுகளில் இருந்து அழுத்தத்தை விடுவிக்க சூடான மற்றும் குளிர்ந்த நீரில் உங்கள் கணுக்கால் ஊறவைக்கவும். சமநிலையுடன், உங்கள் உடலை மிருதுவாகவும் சுறுசுறுப்பாகவும் வைத்திருக்க இது ஒரு நல்ல வழக்கம்.

(டாக்டர் மேத்தா பாலிவுட் சூப்பர்ஸ்டார்களான அக்ஷய் குமார், ப்ரீத்தி ஜிந்தா, கோடீஸ்வரர்கள், அரசியல்வாதிகள், மிஸ் வேர்ல்ட்/மிஸ் யுனிவர்ஸ் போட்டியாளர்கள் மற்றும் மகாராஷ்டிரா காவல்துறைக்கு பயிற்சி அளித்துள்ளார். அதிகம் விற்பனையாகும் எழுத்தாளரான இவர், இந்திய விளையாட்டு ஆணையத்தால் FIT இந்தியா மூவ்மென்ட் சாம்பியனாக நியமிக்கப்பட்டுள்ளார்).

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment