நாட்டின் வடக்குப் பகுதி தற்போது கடுமையான குளிரில் தத்தளிக்கிறது, ஒவ்வொரு நாளும் வெப்பநிலை வீழ்ச்சியடைந்து வருகிறது. எனவே, குளிர்ச்சியிலிருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ள, வார்மர், ஜாக்கெட்டு மற்றும் சாக்ஸ் உட்பட போதுமான சூடான ஆடைகளை அணிவது அவசியம்.
இருப்பினும், இரவில் தங்களை சூடாகவும் வசதியாகவும் வைத்திருக்க, பலர் சாக்ஸை அணிந்து கொள்கிறார்கள். ஆனால், இது ஆரோக்கியமான நடைமுறையா? இதை தெரிந்து கொள்ள நாங்கள் நிபுணர்களை அணுகினோம்.
பாதங்கள் இரத்த நாளங்களைச் சுருக்கி, இரத்த ஓட்டத்தை கணிசமாகக் குறைக்கும் என்பதால், தூங்கும் போது சாக்ஸ் அணிவது நன்றாக தூங்க உதவும். இருப்பினும், சாக்ஸ் அணியாமல் இருப்பது மோசமானது என்று இது அர்த்தமில்லை, இது நீங்கள் எப்படி உணருகிறீர்கள் என்பதைப் பொறுத்து என்று டாக்டர் ஆர் ஆர் தத்தா கூறினார்.
இதை ஒப்புக்கொண்ட டாக்டர் ஆதித்யா எஸ் சௌதி, குளிர்காலத்தில் உங்கள் கால்களை சூடாகவும், பாதுகாப்பாகவும் வைத்திருக்க இரவில் சாக்ஸ் அணிவது நல்லது. பெண்கள் தங்கள் உடல் வெப்பநிலையை குளிர்விக்க இது உதவியாக இருக்கும். இது வெடிப்புள்ள குதிகால்களை மேம்படுத்துகிறது என்றார்.
நன்மைகள் என்ன?
சாக்ஸ் அணிந்து தூங்குவதால் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. அவற்றில் சில இங்கே
* தூங்கும் போது சாக்ஸ் அணிவதன் முக்கிய நன்மை என்னவென்றால், அது உங்கள் உடலை சூடாக வைத்திருக்கும், குறிப்பாக குளிர்காலத்தில்.
*உங்கள் பாதங்கள் வறண்டு போகாமல் அல்லது வறண்ட சருமம் வராமல் பாதுகாக்கிறது.
*படுக்கையில் சாக்ஸ் அணிவதால் பாதங்களுக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது மற்றும் சருமத்தின் மூலம் வெப்ப வெளியேறுகிறது, இது உடல் வெப்பநிலையை குறைக்க உதவுகிறது. இதன் மூலம், ஒருவர் வேகமாக தூங்க முடியும்.
*தூங்கும் போது சாக்ஸ் அணிவது, உங்கள் கால்களுக்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.
*இது வெடிப்புள்ள குதிகால்களை குணப்படுத்துகிறது.
*குளிர்ச்சியான சூழலில் தூங்கும் போது பெட் சாக்ஸைப் பயன்படுத்தி கால்களை சூடாக வைத்திருப்பது தூக்கத்தின் தரத்தில் சாதகமான விளைவுகளை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.
*இது விரைவான நீண்ட, ஆழ்ந்த தூக்கம் ஆகியவற்றுடன் தொடர்புடையது.
பாதகமான விளைவுகள்
எவ்வாறாயினும், சாக்ஸ் அணிந்து கொண்டு தூங்குவது எப்போதும் நன்மை பயக்காது மற்றும் சில நிபந்தனைகளின் கீழ் உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். மிகவும் இறுக்கமான காலுறைகளை அணிவது இரத்த ஓட்டத்தை பாதிக்கும் மற்றும் தீங்கு விளைவிக்கும். கூடுதலாக, காலுறைகளின் சரியான சுகாதாரத்தை உறுதி செய்யாதது பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும், என்று ஹைதராபாத் யசோதா மருத்துவமனையின் டாக்டர் விஸ்வேஸ்வரன் பாலசுப்ரமணியன் கூறினார்.

இதை ஒப்புக்கொண்ட டாக்டர் சௌடி, சாக்ஸ் வழக்கமாக சுத்தமாக செய்யவில்லை என்றால் அல்லது சாக்ஸ் இறுக்கமாக இருந்தாலோ பாத சுகாதாரம் பாதிக்கப்படும். குறிப்பாக நைலான் போன்ற செயற்கைப் பொருட்களால் பயன்படுத்தப்படும் சாக்ஸ் அணிவதால் தோல் தொற்று ஏற்படும் அபாயம் அதிகமாக இருக்கலாம், மேலும் சாக்ஸ் அதிகமாக பயன்படுத்துவதால் உடல் வெப்பநிலை உயரும் என்று கூறினார்.
பாதங்களில் தொற்று ஏற்படுவதைத் தடுக்க, இயற்கையான மற்றும் மென்மையான சாக்ஸ் பயன்படுத்த வல்லுநர்கள் பரிந்துரைத்தனர். மெரினோ வுல் அல்லது கஷ்மெரே போன்ற மென்மையான ஃபைபர் சாக்ஸ் சிறந்தது. பருத்தி காலுறைகள் இதே போன்ற நன்மைகளை வழங்குகின்றன, ஆனால் அவை 100 சதவீதம் பருத்தியாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் என்று டாக்டர் தத்தா கூறினார்.
யார் தவிர்க்க வேண்டும்?
பல நன்மைகள் இருந்தபோதிலும், சில நபர்கள் தூங்கும் போது சாக்ஸ் அணிவதைத் தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கால்களில் சிராய்ப்புகள் அல்லது காயங்கள் உள்ளவர்கள், இரத்த ஓட்டத்தில் பிரச்சினைகள் உள்ளவர்கள் அணிய அறிவுறுத்தப்படவில்லை என்று டாக்டர் பாலசுப்ரமணியன் கூறினார்.
கூடுதலாக, டாக்டர் தத்தா கூறுகையில், வெப்பமான காலநிலையில் வசிப்பவர்கள் காலுறைகளை அணிவதைத் தவிர்க்க வேண்டும், மேலும் காலில் பூஞ்சை தொற்று உள்ளவர்களின் தோலுக்கு காற்று மற்றும் ஒளி தேவைப்படுகிறது.
உங்கள் கால்களை சூடாக வைத்திருக்க மற்ற வழிகள்
தூங்கும் போது சாக்ஸ் உங்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தினால் அல்லது உங்களுக்கு நல்லதல்ல என்றால், டாக்டர் தத்தா பரிந்துரைத்தபடி உங்கள் கால்களை சூடாக வைத்திருக்க இந்த வழிமுறைகளைப் பின்பற்றவும்.
பாதங்கலை வெதுவெதுப்பான நீரில் நனைக்கலாம். நீங்கள் அவற்றை உங்கள் கைகளால் தேய்க்கலாம்.
* நீரேற்றமாக இருங்கள். இது அதிக இரத்த ஓட்டத்தை எளிதாக்குகிறது.
*புகைபிடிப்பதைத் தவிர்க்கவும், ஏனெனில் நிகோடின் இரத்த தமனிகளை இறுக்கமாக்குகிறது, இதனால் குறைந்த இரத்தம் உங்கள் மூட்டுகளுக்கு செல்கிறது.
* அதிக நேரம் ஒரே தோரணையில் உட்காரவோ நிற்கவோ கூடாது; உங்கள் கால்களை அடிக்கடி மசாஜ் செய்ய முயற்சி செய்யுங்கள். அவற்றை நகர்த்தவும்.
* பொருத்தமான காலணிகளை அணியுங்கள். காலநிலை மற்றும் பணிச்சூழலுக்கு, பொருத்தமான பூட்ஸ் உங்களுக்குத் தேவை.
* கூடுதல் புரதம் மற்றும் கொழுப்பை சாப்பிடுங்கள். அதிலிருந்து நீங்கள் கூடுதல் ஊக்கத்தைப் பெறுவீர்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“