Advertisment

சுகர் குறையணுமா? உட்கார்ந்த இடத்தில் இருந்தே இதைப் பண்ணுங்க!

எளிமையான பயிற்சி சோலியஸ் புஷ்அப் செய்வது சர்க்கரையை குறைக்க உதவுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

author-image
WebDesk
New Update
blood sugar

இந்தியாவில் பலரும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். உடலில் சர்க்கரை அளவை குறைக்க மருத்துவர் ஆலோசனை, நடைபயிற்சி எனப் பலவற்றை செய்வது பார்த்திருக்கிறோம். சமீபத்திய ஆய்வில் எளிமையாக உட்கார்ந்த இடத்தில் இருந்தே இந்த பயிற்சி செய்வது சர்க்கரையை குறைக்க உதவுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. 

Advertisment

இதுகுறித்து மருத்துவர் அருண்குமார் கூறுகையில்,  உர்கார்ந்த இடத்தில் இருந்தே சர்க்கரையை குறைக்க, கொழுப்பை எரிக்க ஒரு வழி உள்ளது. அது தான் சோலியஸ் புஷ்அப். அமெரிக்காவில் யுனிவர்சிட்டி ஆஃப் ஹூஸ்டன் உள்ளது. இங்கு நடத்தப்பட்ட ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது சோலியஸ் புஷ்அப். உங்கள் கால் பின்புறத்தை உட்கார்ந்த இடத்தில் இருந்தே அசைக்க வேண்டும். 

இதுதான் சோலியஸ் புஷ்அப்.  இந்த தசை பெரும்பாலும் மசில்களில் உள்ள  கிளைகோஜனை  பயன்படுத்தாமல் ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் மற்றும் வி.எல்.டி.எல் என்கிற கொழுப்பை ட்ரைகிளிசரைடு கொழுப்பையும் அதிகளவில் எனர்ஜிக்கு பயன்படுத்துகிறது. 

இந்த பயிற்சி செய்யும் போது சாப்பிட்ட பின் ரத்தத்தில் சர்க்கரை அளவு ஏறுவது 50% வரை குறையும்.  ரத்தத்தில் உள்ள  வி.எல்.டி.எல் கொழுப்பில் உள்ள  ட்ரைகிளிசரைடு குறைம். இன்சுலின் எதிர்ப்பு தன்மை குறைகிறது என ஆய்வில் கண்டறிந்துள்ளனர் என்றார். 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment