Advertisment

Weight Loss Tips: என்ன சூப் குடித்தால் உடல் எடையை குறைக்கலாம்?

Soup to Reduce Weight: இந்த சுவையான அசைவ சூப் எல்லார் மனதிற்கும் பிடித்தமான ஒன்றும் கூட

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Protein rich soups

Easy Ways to Reduce Weight: உங்கள் உடை எடையைக் குறைக்க சூப் முக்கிய பங்காற்றுகிறது. நண்பர்களுடன் மாலை வாக்கிங் செல்லும் போது, மறக்காம ஒரு கப் சூப் சாப்பிடுங்க... பேசிக்கிட்டு இருந்த மாதிரியும் ஆச்சு... உடல் எடையை குறைக்கும் பணியிலும் ஈடுபட்டது மாதிரி ஆச்ச! எந்த சூப் குடித்தால், உடல் எடை குறையும் என்பதை இங்கே காணலாம்,

Advertisment

பரங்கிக்காய் சூப்

பரங்கிக்காய் சூப் சாப்பிடுவதன் மூலமாக உடலிலுள்ள தேவையற்ற கொழுப்புகளை உங்களால் வேகமாக குறைக்க முடியும். கொழுப்பும், சர்க்கரையும் குறைவாக இருந்தாலும், உடலுக்குத் தேவையான புரதங்களும், நார்ச்சத்தும் நிரம்பியிருக்கும் சூப் இது.

பட்டாணி சூப்

நீங்கள் தினந்தோறும் பட்டாணியுடன், உங்களுக்குப் பிடித்த காய்கறிகளை சேர்த்து சூப்பாக குடித்து வந்தால் உடலின் எடையைக் குறைத்து ஆரோக்கியமாக இருக்க முடியும். புரதங்கள் நிரம்பியதாகவும், குறைவான கொழுப்பு, சர்க்கரை மற்றும் சோடியம் கொண்டதாகவும் இருக்கும் பட்டாணி சூப் ஆரோக்கியமான தேர்வாகவே இருக்கும்.

காளான் சூப்

100 கிராம் உணவில் 1.2 கிராம் அளவிற்கே கொழுப்பு உள்ள காளான் சூப் எடையை குறைப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. இது உடலுக்குத் தேவையான புரதங்களை கொடுப்பதுடன், தேவையற்ற எடையையும் குறைக்கிறது.

சிக்கன் நூடுல்ஸ் சூப்

இந்த சுவையான அசைவ சூப் எல்லார் மனதிற்கும் பிடித்தமான ஒன்றும் கூட. சிக்கனில் உள்ள புரோட்டீன் மற்றும் கார்போஹைட்ரேட் உள்ள நூடுல்ஸ் சேர்ந்து இந்த சூப் ஒரு சரிவிகித உணவாக அமைகிறது. எனவே உங்கள் எடையை குறைக்க மிகச் சிறந்த வழியாகும்.

Lifestyle Healthy Life
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment