உடலுறவு! வரைமுறை... நடைமுறை... செயல்முறை!

துணையின் மடியில் படுத்துக் கொண்டு அவர்களுடைய மேனியின் சில இடங்களை கைகளால் வருடுங்கள்.

‘செக்ஸ்’! அனைவரது வாழ்வில் முக்கியமான ஒரு அங்கம். ஆனால், அதை எப்படி அனுபவிப்பது என்பதில் தான் பெரும்பாலானோருக்கு உள்ள குழப்பம். குறிப்பாக, இளம் தம்பதியர்களுக்கு. திருமணம் என்று ஒன்று நடந்துவிட்டாலே, எப்போது வேண்டுமானாலும் மனைவியுடன் செக்ஸ் வைத்துக் கொள்ளலாம் என நினைப்பது மகா தவறு. மனைவியின் உடல்நிலை, மனநிலை ஆகிய இந்த இரண்டையும் ஆராயாமல், செக்ஸ் வைத்துக் கொள்வது பாலியல் துன்புறுத்தலுக்கு சமம்.

காலை எழுந்ததில் இருந்து வீட்டு வேலைகளை செய்ய ஆரம்பிப்பவளுக்கு, இரவு அடுப்பை துடைத்து வைக்கும் போது தான் ஓய்வை பற்றிய சிந்தனையே வரும். குறிப்பாக, இன்றைய லைஃப் ஸ்டைலில் பெண்கள் அதிகளவு வேலைக்கு செல்கின்றனர். ஆக, அலுவலக வேலை, வீட்டு வேலை என்று அவர்களின் பணிச்சுமை அதிகம். அதனால், மனைவியின் எண்ண ஓட்டத்தை அறிந்து கட்டிலில் கால் வைப்பது சிறந்தது.

ஒருநாள் கணவன், அதிக உற்சாகத்தோடு இருப்பான். ஒருநாள் மனைவி உற்சாகத்தோடு இருப்பாள். இருவரும் உற்சாகத்தோடு இருக்கும் நாள் தான் கட்டிலுக்கு உகந்த நாள். தினமும் செக்ஸ் வைத்துக் கொள்ள வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை.

இருவரின் மனமும் ஒத்து வந்தாலும், அப்படியே ரூமுக்கு சென்று விடக் கூடாது. முதலில் இருவரும் நன்றாக குளிக்க வேண்டும். அப்போது தான் அக்குள் போன்ற இடங்களில் மறைந்திருக்கும் துர்நாற்றங்கள் விடுபடும். பல் துலக்க வேண்டும். இது ரொம்ப முக்கியம் நண்பர்களே. முத்தம் தான் செக்ஸின் முதல்படி. அங்கே நீங்கள் முகம் சுளித்துவிட்டால், இன்பம் முழுமையடையாது. ஆக, இருவரும் தங்களை சுத்தமாக்கிக் கொள்வது மிக அவசியம்.

மல்லிகைப் பூ-வின் மகிமை இன்றைய இளசுகள் பலருக்கும் தெரிவதேயில்லை. அறையை இருட்டாக்கி மெழுகுவர்த்தி ஏற்றி மனைவியை கவருவது, காஸ்ட்லியான கிப்ட் வாங்கி மனைவியை கவர நினைப்பது என்று நினைக்கும் இன்றைய இளம் கணவர்மார்களுக்கு, ஒரு முழம் மல்லிகைப் பூ அனைத்தையும் ஓவர் டேக் செய்துவிடும் என்பது தெரிவதில்லை. ஒன்றுமே தேவையில்லை நண்பர்களே! மல்லிகைப் பூ வாங்கி, உங்கள் படுக்கை அறையில் அப்படியே தெளித்து, உங்கள் மனைவி தலையில் கொஞ்சம் சூடி, மனைவியை அரவணைத்துப் பாருங்கள். அப்புறம் தெரியும் சொர்க்கம் எதுவென்று!.

அதே போல, நல்லா ஃபுல் கட்டு கட்டிட்டு செக்ஸுக்கு செல்லாதீர்கள். எப்போதும் சாப்பிடுவதை விட லைட்டா சாப்பிடுங்க. படுக்கையறைக்கு சென்றவுடன் அப்படியே கட்டியணைத்து படுத்து ஜோலியை முடித்துவிட்டு, அடுத்த 20 நிமிஷத்துல தூங்கிடக் கூடாது. இதைத் தான் பலரும் செய்து கொண்டிருக்கின்றனர்.

இரவு 8 மணிக்கெல்லாம் டின்னரை முடித்துவிட்டு, 8.30 மணிக்கு படுக்கைக்கு சென்றுவிடுங்கள். முதலில் மனைவியுடன் சிரித்து பேசி மகிழுங்கள். அவர்களையும் மகிழ்வியுங்கள். கொஞ்சம் செக்ஸ் ஜோக்ஸ் ஷேர் பண்ணுங்க. அப்படியே, துணையின் மடியில் படுத்துக் கொண்டு அவர்களுடைய மேனியின் சில இடங்களை கைகளால் வருடுங்கள். அப்படியே, சில பாகங்களை தொட்டு அவர்களின் உணர்ச்சிகளை பெருக்குங்கள். இந்த உணர்ச்சிகளை அப்படியே கடத்தி, உச்சக்கட்டத்திற்கு கொண்டுச் சென்று செக்ஸ் கொள்ளுங்க. உண்மையான திருப்தி என்பது என்ன அப்போதுதான் புரியவரும்.

அப்புறம் இன்னொரு விஷயம். ரொம்ப முக்கியமான விஷயமும் கூட. நம்மாளுங்க கண்ட படங்களை பார்த்துட்டு, அதில் உள்ள பாணியில் செக்ஸ் செய்து பார்க்க வேண்டும் என மனக் கோட்டையே கட்டி வைத்திருப்பார்கள். இதிலும், மனைவியின் விருப்பமே முக்கியம். சிலர் அதை விரும்பலாம், சிலர் அதை விரும்பாமல் போகலாம். விரும்பாத பெண்ணிடம் மூர்க்கத்தனமாக நடந்து கொண்டால், அது டைவர்ஸ் வரை கொண்டு செல்லும் அளவிற்கு விளைவுகளை உண்டாக்கும். சிலர் கணவர் விருப்பப்படுகிறாரே என்று பொறுத்துக் கொள்ளலாம். ஆனால், ஒரு நல்ல கணவனுக்கு அழகு, மனைவியின் விருப்பம் அறிந்து நடப்பதே.

செக்ஸ் மட்டுமல்ல, எந்த வேலையையும் கடமைக்கு செய்தால், அது முழுமை அடையாது. நேக்கு போக்கு தெரிந்து செய்பவனே, பிறவிப் பயனை அடைகிறான்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Lifestyle news in Tamil.

×Close
×Close