மன ஆரோக்கியத்திற்கு தனியாக நேரம் செலவிடுவது ஏன் அவசியம்?

Spending time alone is important mental health activities Tamil News நிராகரிப்பைத் தவிர்ப்பதற்காகவும் மற்ற குழுவினருடன் பொருந்துவதற்கும் உங்களை நீங்கள் மாற்றிக்கொள்கிறீர்கள்

Spending time alone is important mental health activities Tamil News
Spending time alone is important mental health activities Tamil News

Spending time alone is important mental health activities Tamil News : சமூக மயமாக்கல் மன அழுத்தத்தைப் போக்க உதவுவதால், அதனை அவ்வப்போது செய்யவேண்டும் என்று பெரும்பாலான மக்கள் நம்புகிறார்கள். அதில் எந்த பாதிப்பும் இல்லை என்றாலும், உங்களுடன் நேரத்தை செலவழிப்பது மற்றும் உங்கள் சொந்த உணர்வோடு நீங்கள் உரையாடுவதும் அவசியம்.

மனநல ஆரோக்கியத்தில் ‘தனிமையான நேரம்’ முக்கிய பங்கு வகிக்கிறது என்கிறார் மனநல ஆலோசகர் மற்றும் மருத்துவர் டாக்டர் ருஹி சதீஜா. “மற்றவர்களைச் சுற்றி இருப்பது வெகுமதிகளுடன் வருகிறது, ஆனால் அது மன அழுத்தத்தையும் உருவாக்குகிறது. அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றி நீங்கள் கவலைப்படுகிறீர்கள். நிராகரிப்பைத் தவிர்ப்பதற்காகவும் மற்ற குழுவினருடன் பொருந்துவதற்கும் உங்களை நீங்கள் மாற்றிக்கொள்கிறீர்கள்” என்று அவர் குறிப்பிடுகிறார்.

மருத்துவரின் கருத்துப்படி, ‘தனிமை’ மற்றும் ‘தனியாக இருப்பது’ ஆகியவற்றுக்கு வித்தியாசம் உள்ளது. தனிமை, எதிர்மறை மற்றும் புறக்கணிக்கப்பட்ட உணர்வுடன் தொடர்புடையது என்று அவர் கூறுகிறார். “அதேசமயம் தனியாக இருப்பது உங்கள் சொந்த உணர்வில் நீங்கள் மிகவும் வசதியாக இருக்க உதவுகிறது. நீங்கள் தனியாக இருக்கும்போது, ​​வெளிப்புற தாக்கங்கள் இல்லாமல் உங்களுக்கானதை நீங்கள் தேர்வு செய்யலாம். ஒரு நபராக நீங்கள் யார் என்பதைப் பற்றிய அதிக நுண்ணறிவை வளர்க்க இது உதவும்” என்கிறார்.

இது ஒரு நபருக்கு மனரீதியாக எவ்வாறு உதவுகிறது?

1. தனிப்பட்ட ஆய்வு: உங்களுடன் நேரத்தை செலவிடுவது மற்றும் நீங்கள் நீங்களாகவே இருப்பது, உங்கள் விருப்பு வெறுப்புகளைப் புரிந்துகொள்ள வழிவகுக்கிறது. நீங்கள் ஏன் ஒரு குறிப்பிட்ட வழியில் நடந்துகொள்கிறீர்கள் என்பதை அறிவதற்கு நீங்கள் நெருக்கமாகிவிடுவீர்கள்.

2. படைப்பாற்றல்: படைப்பாற்றல் மன ஆரோக்கியத்தைப் பராமரிக்க ஒரு சிறந்த கருவி. ஏதாவதொரு பொழுதுபோக்கில் நேரத்தை செலவிடுவது மற்றும் உங்கள் மனதைப் பயன்படுத்தி ஏதாவது ஒன்றை உருவாக்குவது ஒரு நல்ல வழி. இதற்குத் தனிமை மற்றும் நேரம் தேவை. நீங்கள் எப்போதும் மக்களால் சூழப்பட்டிருந்தால் அதைக் கண்டறிவது கடினம்.

3. சமூக ஆற்றல்: சில நேரங்களில் நீங்கள் வேறொருவரின் குழப்பத்தில் வாழ விருப்பமிருக்காது. நீங்கள் தனியாக இருக்கும்போது, ​​தனியாக சாப்பிட வெளியே செல்லுங்கள் அல்லது உங்களுடன் நேரத்தை செலவழியுங்கள். நீங்கள் செய்யும் அனைத்தையும் நீங்களே கட்டுப்படுத்தலாம். உங்களைத் தீர்மானிக்க யாரும் இருக்கமாட்டார்கள். குறைவான எதிர்மறை சுற்றம் அதிக பாசிட்டிவ் வாழ்க்கைக்கு வழிவகுக்கிறது. இது பொது மனநிலையையும் மேம்படுத்துகிறது.

4. உற்பத்தித்திறன்: மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் அல்லது அவர்கள் உங்களை எப்படி நினைக்கிறார்கள் என்று நீங்கள் கவலைப்படாதபோது, உங்கள் உற்பத்தித்திறன் பன்மடங்கு அதிகரிக்கிறது.

5. வலுவூட்டல் உணர்வு: உங்கள் புதிய சுதந்திரம் உங்களை நிச்சயம் வலுப்படுத்தும். நீங்கள் ஓய்வெடுக்கவும், உங்கள் புதிய சுதந்திரத்தைத் தழுவவும் உதவ நீங்கள் தனியாக இருக்கும்போது பாதுகாப்பாக இருப்பது பற்றி அறிவீர்கள்.

நீங்கள் தனியாக இருக்கும்போது செய்யக்கூடிய சில விஷயங்கள்:

*தேவையில்லாமல் அதிகம் யோசிப்பதைக் குறைக்கவும். உலக நிகழ்வுகளைப் பற்றி அறிந்திருப்பது முற்றிலும் பரவாயில்லை, ஆனால் செய்திகளுக்கு அடிமையாகிவிடுவது உங்கள் மனநிலையை மூழ்கடிக்க ஒரு உறுதியான வழி என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

*உங்களுக்கான நேரத்தில், உங்களுக்குப் பிடித்த உணவுகள் செய்து சாப்பிடலாம் அல்லது உங்களுக்குப் பிடித்த படங்கள், சீரிஸ் போன்றவற்றைப் பார்க்கலாம்.

*உங்களை உயர்த்தும் நபர்களுடன் நேர்மறையான உறவுகளை அடையாளம் காணவும், உங்கள் வாழ்க்கைக்கு மதிப்பு சேர்க்கவும் நேரம் ஒதுக்குங்கள். முன்னோக்கி, இந்த முக்கியமான உறவுகளுக்கு நீங்கள் முன்னுரிமை அளிக்கலாம்.

*ஒரு செல்லப்பிராணியைப் பெறுவதைக் கருத்தில் கொள்ளுங்கள். இந்த சிறிய நண்பர் உங்கள் மகிழ்ச்சியின் அளவை அதிகரிக்க உதவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Spending time alone is important mental health activities tamil news

Next Story
ஆயில் வேண்டாம்: கமகமக்கும் கல்யாண வீடு ரசம் செய்முறைrasam recipes in tamil: kalyana veetu rasam recipe in tamil
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
X