கேரளாவில் பிறந்த நக்ஷ்த்திரா, கிடா பூசாரி மகுடி என்ற படத்தில் நடித்து, தமிழ் திரையுலகில் அறிமுகமானார். ஆனால் ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி சீரியல் தான், இவருக்கு மிகப்பெரிய அளவில் பெயரையும், புகழையும் தேடித் தந்தது. அதன் பிறகு நக்ஷ்த்திரா, கலர்ஸ் டிவியில் வள்ளி திருமணம் சீரியலில் ஹீரோயினாக நடித்தார். பிறகு, எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல் விஷ்வா சாம் என்பவரை திடீரென திருமணம் செய்து கொண்டார்.
முன்னதாக யாரடி நீ மோகினி உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்து பிரபலமான ஸ்ரீநிதி, தனது உயிர்த் தோழியான நக்ஷ்த்திரா குறித்து பேசிய விஷயங்கள் ஊடகங்களில் பரபரப்பாகியது.
அப்போது பேசிய ஸ்ரீநிதி, நானும் அவளும் ஒரே வீட்டுலதான் இருந்தோம். அவளுக்குப் பெரிய நடிகையா எல்லாம் ஆகனும் ஆசை கிடையாது. எல்லா பொண்ணுங்க போலவும் கல்யாணம் ஆகி குடும்பம், குழந்தைனு செட்டில் ஆக ஆசைப்பட்டா. அப்படி இருக்கும் போதுதான் ஒருத்தரை பாத்தா. ரொம்ப நல்லவரா இருக்காருனு சொல்லி நான்தான் அவளுக்கு அறிமுகம் கொடுத்தேன். ஒரே மாசத்துல அவங்க பேசி கல்யாணம் வரைக்கும் வந்துட்டாங்க. அவளை, அந்த பையனோட ஃபேமிலி பயங்கரமாக இப்போ லாக் பண்ணிட்டாங்க. இது எங்க கூட இருக்குற எல்லாருக்குமே தெரியும் என பேசினார்.
ஆனால், ஸ்ரீநிதி பேசியதில் எந்த உண்மையும் இல்லை. அவளுக்கு உடம்பு சரியில்லனு உங்க எல்லாருக்குமே தெரியும், அதனால தான் இப்படியெல்லாம் பேசுறா. நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் என நக்ஷ்த்திரா கூறியிருந்தார்.
ஸ்ரீநிதி இப்போது ஜீ தமிழ் டிவியின் பேரன்பு சீரியலில் நடிக்கிறார்.
இந்நிலையில் ஸ்ரீநிதி ”வட போச்சே சொல்லுங்க, பிராங்க் பண்ணோம்”, என குறிப்பிட்டு நக்ஷ்த்திரா உடன் எடுத்த புகைப்படத்தை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த இடம் பார்ப்பதற்கு துபாய் போல இருக்கிறது, ஆனால் சென்னை பொருட்காட்சி தீவுத் திடலில் வைத்து இருவரும் அந்த புகைப்படத்தை எடுத்துள்ளனர்.
இதைப் பார்த்த பலரும், உங்க ரெண்டு பேரையும் ஒன்றாக பார்ப்பதில் சந்தோஷம், ரெண்டு பேரும் அழகா இருக்கீங்க என கமெண்ட் செய்து வருகின்றனர்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“