Advertisment

போதுமான உடற்பயிற்சி மேற்கொள்ள முடியவில்லையா? - இதோ அதற்கான எளிய தீர்வு

நடனம் ஆடுவது என்பது எண்ணில் அடங்கா முறை எட்டு வைத்து நடப்பதற்கு சமமாகும். தினமும் 10,000 முறை எட்டு வைத்து நடக்கும் இலக்கை எளிதாக அடையலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
staying fit, exercises, daily exercises, 10,000 steps, fitness goals, fitness, indian express, indian express news

staying fit, exercises, daily exercises, 10,000 steps, fitness goals, fitness, indian express, indian express news

இந்த எளிய உடற்பயிற்சி முறைகள், உங்களுடைய உடல் கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் இலக்கை அடைய உதவும்.

Advertisment

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

கோரோனா வைரஸுக்கு எதிரான போருக்குள் உலகம் செல்லும் முன்பு, உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் பழக்கத்தின் ஒருபகுதியாக பலர் தினமும் சராசரியாக 10,000 அடி எடுத்து வைத்து நடக்கும் பழக்கத்தை கொண்டிருந்தனர். ஒய்வு எடுக்கக் கூட நேரம் இல்லாத வாழ்க்கை சூழலில் இருக்கும் பலருக்கு சிலபல உடற்பயிற்சிகளை செய்ய ஜிம்முக்கு செல்வதற்கு கூட நேரம் இருப்பதில்லை என்பது மிகவும் பொதுவான ஒன்றாகும். ஆனால், இந்த ஊரடங்கு அறிவிப்பு செய்யப்பட்டதில் இருந்து, நேரத்துக்கு எழுந்திருப்பதில்லை, எந்த ஒரு உடற்பயிற்சியும் செய்யாமல் சுத்தமாக சோம்பலில் மூழ்கி விட்டதாக பெரும்பாலானோர் தங்களுக்குள்ளேயே அறிந்திருக்கின்றனர். ஆனால், இதை ஒரு வேலையாக சிந்திக்கக் கூடாது என்பதுதான் முக்கியமானதாகும். நீங்கள் வீட்டில் இருக்கும்போது கூட, உங்களுடைய தினசரி வாழ்க்கையின் ஒருபகுதியாக இயல்பாக இதனை மேற்கொள்ள வேண்டும். எப்படி என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

ஒவ்வொரு மணி நேரத்துக்கு ஒருமுறை இடைவெளி

நீங்கள் வேலை செய்யும்போது கூட, ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை சில நிமிடங்கள் ஓய்வு எடுத்துக் கொண்டு நடப்பது போன்றவற்றைச் செய்வது முக்கியமானதாகும். ஓய்வு நேரத்தின்போது என்ன செய்ய வேண்டும் என்பதை இலக்காக கொள்ளுங்கள். அதன் மூலம் நீங்கள் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் அடி எடுத்து வைத்து நடக்க முடியும். வீட்டை சுற்றி அல்லது பால்கனியில் அல்லது உங்களுக்கு தோட்டம் இருந்தால் அதில் கூட நடக்கலாம்.

இரண்டுமுறை செய்யுங்கள்

நீங்கள் வீட்டு வேலை தொடர்பாக வெளியே போகிறீர்கள் என்றால், ஒரு குறிப்பிட்ட இடம் வரை நடக்கலாம். அதனையே இரண்டாவது முறையாகவும் செய்யலாம். ஓரு கதவு அல்லது ஜன்னலை சுத்தப்படுத்தும் வேலை என்றால், உட்கார்ந்து வழக்கமான வேலைகளை செய்வதற்கு முன்பு கதவு அல்லது ஜன்னலை நோக்கி சில முறை நடக்கலாம். இதன் மூலம் மிகவும் எளிதாக நீங்கள் சில கூடுதல் முறை நடக்க முடியும். நீங்கள் வேறு ஏதேனும் முக்கியமான வேலைகளை வைத்திருக்கா விட்டால் இதனை செய்யலாம்.

 

publive-image

உங்களை சுற்றி குதியுங்கள்

சில குதிக்கும் உடற்பயிற்சிகளை செய்யலாம். ஸ்கிப்பிங்க் கயிறு உபயோகித்து தாண்டி குதிக்கலாம். கூடுதல் முறை நடப்பதற்கு இது ஒரு ஜாலியான வழியாகும். சுறுசுறுப்பாகவும், உடல் கட்டமைப்போடும் இருக்க இது உதவும்.

வெற்றிடத்தை நிரப்புங்கள்

குடும்பத்துக்காக மாலை நேரத்தில் தேநீர் தயாரிக்கின்றேன் என்று சொல்லுங்கள். தேநீர் பாத்திரம் சூடாகும் வரை வீட்டைச் சுற்றி வேகமாக நடங்கள். ஒரு அழைப்பை எடுக்கும் போது, வெளியே வந்து, சாத்தியம் இருந்தால், சில அடிகள் நடக்கவும். கூடுதலாக, காலை நேரத்தில் வேலையில் உட்காரும் முன்பு, சில முறை வீட்டை சுற்றி வரலாம்.

நடனம்

தினசரி வேலையுடன் செய்யமுடியுமா? இசையை ஒலிக்கச் செய்யுங்கள் , உங்களுக்குப் பிடித்தமான பாட்டுக்கு நடனமாடுங்கள். இது மிகவும் வேடிக்கையாக இருக்கும். தினசரி வேலை பளுவில் இருக்கும்போது இதை செய்த பின்னர் ரிலாக்ஸ் ஆக உணர்வீர்கள். நடனம் ஆடுவது என்பது எண்ணில் அடங்கா முறை எட்டு வைத்து நடப்பதற்கு சமமாகும். தினமும் 10,000 முறை எட்டு வைத்து நடக்கும் இலக்கை எளிதாக அடையலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Lifestyle Health Tips
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment