Advertisment

சுகர், பிரஷர் ஆட்கள் இதை மிஸ் பண்ணாதீங்க… இம்யூனிட்டிக்கு பெஸ்ட் சீதாப் பழம்!

Health benefits of Seetha Palam in Tamil: சீதாப் பழம் உங்கள் மனநிலையையும் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. இவை இரத்த அழுத்தத்தைக் குறைப்பதோடு, அஜீரணத்தை குணப்படுத்த உதவுகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Sugar-apple in tamil: Custard Apple Red Seetha Palam Benefits in tamil

Seetha Palam (Sugar-apple) Benefits In tamil: நம்முடைய அன்றாட உணவுகளுடன் பருவகால மற்றும் உள்ளூர் பழங்களை சேர்க்க வேண்டும் என உணவியல் வல்லுநர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், இதை நம்மில் பலர் தவிர்த்தே வருகிறோம். இது போன்ற பழங்களை முன்னர் நீங்கள் முயற்சிக்க தவறி இருந்தாலும் இன்றிலிருந்து முயற்சிக்கலாம். அதிலும் குறிப்பாக, பருவ கால பழங்களுள் ஒன்றான சீதாப்பழத்தை முயற்சியுங்கள்.

Advertisment

இந்த இலையுதிர் காலத்தில் பரவலாகக் கிடைக்க கூடிய பழ வகைகளில் சீதாப் பழமும் ஒன்று. மகாராஷ்டிராவில் அதிகம் பயிரப்படும் இந்த பச்சை நிற பழம் அன்னாசி மற்றும் வாழைப்பழம் போன்ற ஒரு இனிமையான சுவை கொண்டது.

சீதாப் பழம் ஏன் சாப்பிட வேண்டும்?

சீதாப் பழத்தில் உள்ள கால்சியம் மற்றும் மெக்னீசியம் உங்கள் எலும்புகளை ஆரோக்கியமாகவும் வலுவாகவும் ஆக்குகிறது என்று குறிப்பிட்டுள்ள ஊட்டச்சத்து நிபுணர் முன்முன் கணேரிவால், "வைட்டமின் பி 6 இன் நல்ல ஆதாரம் இது. இதை சாப்பிடுவது வீக்கம் மற்றும் பிஎம்எஸ் (மாதவிடாய் முன் நோய்க்குறி) ஆகிய நோய்களை குணப்படுத்த உதவும். நீரிழிவு அல்லது இரத்த அழுத்தம் தொடர்பான பிரச்சினைகளால் அவதிப்பட்டால், இது போகக்கூடிய பழம்.

சீதாப் பழம் அதிக உணவு நார்ச்சத்து நீரிழிவு அபாயத்தைக் குறைக்கும். அதே வேளையில், இதில் உள்ள பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கும், ”என்று தனது இன்ஸ்டா பதிவில் தெரிவித்துள்ளார்.

publive-image

சீதாப் பழத்தின் ஆரோக்கிய நன்மைகள்?

சீதாப் பழம் பின்வரும் ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது என்று ஊட்டச்சத்து நிபுணர் ஸ்வேதா ஷாவின் தெரிவித்துள்ளார்.

*சீதாப் பழம் உங்கள் மனநிலையையும் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது.

*சீதாப் பழத்தில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிரம்பியுள்ளன.

*கண் மற்றும் இதய ஆரோக்கியத்திற்கு இவை நன்மை பயக்கும்.

*இது இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.

*அஜீரணத்தை குணப்படுத்த உதவுகிறது

*சீதாப் பழத்தில் புற்றுநோய் எதிர்ப்பு கூறுகள் இருப்பதாக நம்பப்படுகிறது.

முன்னதாக, ஊட்டச்சத்து நிபுணர் ருஜுதா திவேகர் தனது இன்ஸ்டா பதிவில் சுட்டிக்காட்டியுள்ள சீதாப் பழத்தின் சில நன்மைகள் பிவருமாறு:-

*சீதாப் பழம் புண்கள் மற்றும் அமிலத்தன்மையை தடுக்கிறது.

*எந்த திரவ அஸ்திவாரத்தையும் விட, மென்மையான சரும நிறத்தை கொடுக்கும் நுண்ணூட்டச்சத்துக்கள் இவற்றில் உள்ளன.

*சீதாப் பழம் கண் மற்றும் மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்த அறியப்படுகிறது.

*இது ஹீமோகுளோபின் அளவை மேம்படுத்த உதவுகிறது

*ஒபேசோஜெனிக் எதிர்ப்பு, நீரிழிவு எதிர்ப்பு மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளைக் காட்டும் பயோஆக்டிவ் மூலக்கூறுகள் இவற்றில் உள்ளன.

publive-image

எவ்வளவு சீதாப்பழம் நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்?

சீதாப்பழத்தை தினமும் உட்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ள பிரபல உடற்பயிற்சி நிபுணர் ஜூஹி கபூர், "இந்த பழத்தை உங்கள் உணவுகளுடன் சேர்த்துக்கொள்ள பயப்படாதீர்கள். அதிக சர்க்கரை பழம் என்று கூறி அதை தரமிறக்காதீர்கள். பிரக்டோஸ் இரத்த சர்க்கரையை எளிதில் உயர்த்தாது என்பதை நினைவில் கொள்ளுங்கள், ஏனெனில் இந்த பழங்களில் நார்ச்சத்து உள்ளது, இது இரத்தத்தில் குளுக்கோஸை மெதுவாக வெளியிடுகிறது, "என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

சீதாப்பழம் சாப்பிட சரியான நேரம் எது?

*உணவுக்குப் பிறகு ஒருபோதும் சீதாப் பழங்களை சாப்பிட வேண்டாம்.

*உணவுடன் சீதாப்பழங்களை சாப்பிட வேண்டாம்.

*காலை 11 அல்லது மாலை 4 மணிக்கு இந்த பழங்களை ருசிக்கலாம்.

*மற்ற பழங்களோடு சேர்த்து உண்ண தேவையில்லை. ஒரு நேரத்தில் ஒன்று சாப்பிடுங்கள்

*பழச்சாறு வடிவில் பழங்களைத் தவிர்க்கவும். சிறந்த நன்மைகளைப் பெற அவற்றை முழுமையாகச் சாப்பிடுங்கள்.

publive-image

சீதாப்பழத்தை ஒரு பழமாக அல்லது பாசுந்தி, கீர், ஐஸ்கிரீம், ஹல்வா, கேக் போன்ற இனிப்பு உணவுகளை தயாரிப்பதன் மூலம் தங்கள் உணவில் சேர்க்கலாம் பிரபல உடற்பயிற்சி நிபுணர் ஜூஹி கபூர் தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle Healthy Life Healthy Food Tips Healthy Food Tamil News 2 Health Tips Tamil Health Tips Immunity
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment