Advertisment

சிம்பிளான செய்முறை... சளி, காய்ச்சலை விரட்ட இதுதான் பெஸ்ட்!

sukku malli coffee benefits: இஞ்சி, உடலுக்கு பல்வேறு நன்மையளித்து வருகிறது. அதேபோல் அதன் காய்ந்த நிலையான சுக்குவும், அதேயளவு நன்மையை அளித்து வருகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Healthy life, Immunity, chukku kaapi, indianexpress.com, indianexpress, sukku kaapi, dry ginger coffee, ginger in coffee, winter, common cold coffee, common flu

sukku malli coffee benefits

Sukku Malli Coffee Tamil News: தென்மேற்கு பருவமழையால், ஆங்காங்கே பெய்யும் மழை, குளிரால் மக்கள் பலவிதங்களில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா வாட்டிவரும் நிலையில், இதுபோன்ற சாதாரண சளி மற்றும் காய்ச்சல் மக்களை மேலும் பாடாய்படுத்தி வருகிறது. இந்த உபாதைகளுக்கு தீர்வாக அமைகிறது சுக்கு

Advertisment

 

sukku malli coffee Tamil news sukku malli coffee benefits- சுக்கு மல்லி காபி, சுக்கு பயன்கள் sukku malli coffee Tamil news

இஞ்சி, உடலுக்கு பல்வேறு நன்மையளித்து வருகிறது. அதேபோல் அதன் காய்ந்த நிலையான சுக்குவும், அதேயளவு நன்மையை அளித்து வருகிறது. காய்ந்த இஞ்சி / சுக்கை, நாம் தினசரி காபியில் கலந்து குடிக்கலாம். சுக்கு காபி, நல்ல வாசனையை தருவதோடு மட்டுமல்லாது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.

தமிழகம், கேரளா உள்ளிட்ட பகுதிகளில், காபிப்பொடியை அரைக்கும்போதே அதில் சுக்குப்பொடியை கலந்து தயாரித்து வருகின்றனர்.

இந்த சுக்கு காபி, சளி, இருமல் மற்றும் அஜீரணத்திற்கு அருமருந்தாக விளங்குகிறது. இந்த சுக்கு காபியின் மணத்தை அதிகரிக்க அதனுடன் கருப்பு மிளகு, சீரகம், துளசி உள்ளிட்டவைகள் சேர்க்கலாம். இதன் அருமையான வாசனை, மூக்கடைப்பை சரிசெய்கிறது. தொண்டையில் எரிச்சல், மற்றும் காய்ச்சலுக்கு கூட, இந்த சுக்கு காபி நல்ல மருந்தாக அமைகிறது.

சுக்கு காபியின் அதிசயிக்கத்தக்க நன்மைகள்

சுக்குவில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன

மழைக்காலங்களில், சுக்கு காபி அருந்துவதன் மூலம், சளி மற்றும் காய்ச்சலால் ஏற்படும் பாதிப்பினை தடுக்கலாம்.

இரைப்பை தொடர்பான பிரச்சினைகளை தீர்க்க உதவுகிறது

உணவுக்குழாய் பகுதியில் ஏற்படும் தேவையற்ற வாயுக்களை அகற்றி, உணவுக்குழாய் சீராக செயல்பட உதவுகிறது.

உடலில் இருந்துகொண்டு தீமை விளைவிக்கும் நச்சுப்பொருட்களை அகற்றுகிறது.

வயிற்று எரிச்சல் மற்றும் உப்பிசத்தை குறைக்கிறது

தோல் அரிப்பை தடுக்கிறது

சுக்கு காபியில் இவ்வளவு நன்மைகள் இருப்பினும், நாள் ஒன்றுக்கு இரண்டு அல்லது 3 தடவைக்கு மேல் குடிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர். ஏனெனில், இது தொண்டையில் எரிச்சல் உணர்வை தூண்டச்செய்யும்.

sukku malli coffee: சுக்கு காபி செய்யும் முறை

தண்ணீர் - 4 கப்

ஒரு தேக்கரண்டி சுக்கு பொடி

ஒரு தேக்கரண்டி கறுப்பு மிளகு பொடி

ஒரு தேக்கரண்டி காபி பொடி

சில துளசி இலைகள்

ஒரு தேக்கரண்டி சீரகம்

ஏலக்காய் - 4

வெல்லம் - 3 தேக்கரண்டி

சிறிது உப்பு

தண்ணீரில் சிறிது வெல்லம் சேர்த்து அது கரையும் வரை கொதிக்க வைக்கவும்.

பின் அதனுடன் சுக்கு பொடி, சீரகம், காபி பொடி, மிளகு பொடி கலந்து 5 நிமிடம் கொதிக்க வைக்கவும்

பின் துளசி இலைகளை சேர்க்கவும்

அதனுடன் ஏலக்காய் பொடி, உப்பை சேர்க்கவும்

காலை, மாலை என இரு வேளைகளிலும் பருகலாம்

நீங்க சுக்கு காபி குடிக்க தயாரா?

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Lifestyle Healthy Life
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment