Advertisment

Summer Tips: சுகர் பிரச்னை உள்ளவங்க இந்த 3 டிரிங்ஸை மிஸ் பண்ணாதீங்க!

Summer Tips: சர்க்கரை நோய் உள்ளவர்கள் இந்த கோடை வெயிலை சமாளிக்க மருத்துவரின் ஆலோசனையுடன் பார்லி தண்ணீர், இளநீர், எலுமிச்சை மற்றும் இஞ்சி பானம் பருகி உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளுங்கள். அதனால், சுகர் பிரச்னை உள்ளவர்கள் இந்த கோடை வெயிலில் உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள இந்த 3 டிரிங்ஸை மட்டும் மிஸ் பண்ணாதீங்க.

author-image
WebDesk
New Update
Summer Tips 3 important drinks for Diabetes, சுகர் பிரச்னை உள்ளவர்கள் கோடை வெப்பத்தை சமாளிக்க 3 பானங்கள், சர்க்கரை நோயாளிகளுக்கான பானம், இளநீர், எலுமிச்சை இஞ்சி பானம், பார்லி தன்னீர், Barley water, lemon and ginger drinks, coconut water, Diabetes diet, Summer drinks for diabetics, Diabetic diet, Drinks for diabetics, Diabetes, Diabetes food

கொலுத்தும் கோடை வெயிலை சமாளிக்க அனைவரும் குளிர்பானங்கள், குளிர்ச்சியான பழச்சாறுகள் ஆகியவற்றை சாப்பிடலாம். ஆனல, சுகர் பிரச்னை உள்ளவர்கள் ஆரோக்கியமாக உள்ளவர்கள் சாப்பிடும் பொதுவான குளிர்பானங்களை சாப்பிட முடியாது. அவர்கள் கோடை வெயிலை சமாளிக்க இந்த 3 டிரிங்சை மிஸ் பண்ணாதீங்க.

Advertisment

மாநிலம் முழுவதும் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. அனைவரும் கோடை வெயிலைத் தணிக்க குளிர்பானங்கள், பழச்சாறு, இளநீர் போன்ற குளிர்ச்சியான பானங்களை குடித்து தங்களை பாதுகாத்து வருகின்றனர். பொதுவாக உள்ளவர்கல் குடிக்கும் மென் குளிர்பானங்கள், பழச்சாறுகளை சர்க்கரை நோய் உள்ளவர்கள் சாப்பிட முடியாது. அதனால், இந்த கோடையில், சர்க்கரை நோய் உள்ளவர்கள் இரத்தத்தில் சர்க்கரை அளவுகளில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களைத் தவிர்க்க, இந்த வகையான சர்க்கரை அதிகம் உள்ள் பானம் ஏற்றதில்லை.

சுகர் பிரச்னை உள்ளவர்கள் இந்த கோடை வெப்பத்தை சமாளிக்க உதவும் சில பானங்கள் ஏதாவது இருக்கிறதா என்றால், ஆம் இருக்கிறது. கவலைப்படாதீர்கள். சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு சில கோடைகால பானங்களின் பட்டியலை இங்கே தருகிறோம். அவை சர்க்கரை நோயாளிகளை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள உதவுவதோடு நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தவும் உதவும். அதே நேரத்தில், இந்த பொருட்களை உங்கள் உணவில் சேர்ப்பதற்கு முன், தயவுசெய்து ஒரு மருத்துவ நிபுணரை அணுகி ஆலோசனை பெறுங்கள்.

சுகர் பிரச்னை உள்ளவர்களுக்கான பானங்கள் இதோ:

  1. பார்லி தண்ணீர்:

பெரும்பாலும் பார்லி தண்ணீர் ‘ஜாவ்’ என்று அழைக்கப்படுகிறது. பார்லி தண்ணீரில் கரையாத நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஆரோக்கியமான பானமாக உள்ளது. இது ரத்தத்தில் குளுக்கோஸ் அளவை பராமரிக்க உதவுவதால் நீரிழிவு நோயாளிகளுக்கு நல்ல ஆரோக்கியமான பானம் ஆகும். இனிப்பு சேர்க்காமல் பார்லி தண்ணீரைக் குடியுங்கள்.

  1. இளநீர்:

இளநீரில் 94% நீர்ச்சத்து உள்ளது. அதே நேரத்தில் மிகக் குறைந்த அளவில் கலோரி உள்ளது. பொட்டாசியம், வைட்டமின் பி, எலக்ட்ரோலைட்டுகள், அமினோ அமிலங்கள், என்சைம்கள் மற்றும் ஏராளமான தாவர ஹார்மோன்கள் இளநீரில் காணப்படுகின்றன. அதனால், இளநீர் சுகர் பிரச்னை உள்ளவர்களுக்கு ஏற்ற பானமாக உள்ளது.

  1. எலுமிச்சை மற்றும் இஞ்சி பானம்:

எலுமிச்சை மற்றும் இஞ்சி பானம் நீண்ட கால இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டை நிர்வகிக்க உதவுகிறது. நீரிழிவு நோயினால் ஏற்படும் கண் பாதிப்புகளை குறைக்கும். அரைத்த அல்லது துண்டு துண்டாக நறுக்கப்பட்ட இஞ்சியுடன் தண்ணீரில் எலுமிச்சை சேர்த்து குடிக்கலாம்.

சர்க்கரை நோய் உள்ளவர்கள் இந்த கோடை வெயிலை சமாளிக்க மருத்துவரின் ஆலோசனையுடன் பார்லி தண்ணீர், இளநீர், எலுமிச்சை மற்றும் இஞ்சி பானம் பருகி உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளுங்கள். அதனால், சுகர் பிரச்னை உள்ளவர்கள் இந்த கோடை வெயிலில் உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள இந்த 3 டிரிங்ஸை மட்டும் மிஸ் பண்ணாதீங்க.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment